Published:Updated:

காகம் திருந்துச்சா... நரி மாறிச்சா? - உங்க குழந்தைகளுக்காகப் `பட்டி டிங்கரிங்' பார்த்த பாட்டி கதை

பாட்டிகளின் வாய் வழியே தொடங்கி, பல வகை பரிமாணங்கள் அடைஞ்சிருக்கு. அப்படியான பாட்டி கதைகளை, இன்றையை டிரெண்டுக்கு ஏற்ப சில மாற்றங்களோடு, க்யூட்டான அனிமேஷன் வீடியோவாக உங்க குழந்தைகளுக்காக இங்கே கொடுக்கப்போறோம்.

இந்த க்வாரன்டீன் நேரத்துல, பாட்டி கதைகளுக்குப் பெரிய மவுசு வந்திருக்கு. இங்கே, சில பிரபலமான கதைகளை இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி வீடியோ வடிவில் கொடுக்கிறோம். இதை, உங்கள் குழந்தைகள் அழகான அனிமேஷனோடு குட்டி வீடியோவாகப் பார்க்கலாம். வாசிப்பையும் வளர்த்துக்கலாம்!

பூமியில் இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வோர் உயிருக்கும் ஓர் ஆயுள்காலம் இருக்கு. தாவரம் முதல் மனிதன் வரைக்கும் எல்லாத்துக்கும் இது பொருந்தும். அதேமாதிரி, மனிதனால் படைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்குமே ஓர் ஆயுள்காலம் இருக்கும். ஆனால், மனிதன் உருவாக்கிய கலைகள் இதில் விதிவிலக்கு. காலத்தால் அதில் பல மாற்றங்கள் நடக்குமே தவிர, ஆயுள் எப்பவும் குறையவே குறையாது. அந்தக் கலைகளில் ஒன்றுதான் கதைகள்.

story
story

கதைகளுக்கு என்றுமே அழிவு கிடையாது. நாடுகளின் எல்லைகளை மட்டுமில்லே, காலத்தின் எல்லைகள் கடந்தும் பறந்துட்டே இருக்கும். கதைகளின் இறக்கைகள் ஓய்வதே இல்லே. கால்கள் நிற்கிறதே இல்லே. அதிலும் சில கதைகள், நூற்றாண்டுகளைக் கடந்தும் இப்பவும் குழந்தையாகவே உலகம் முழுக்க தவழ்ந்துட்டு இருக்கு. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மகிழவெச்சுட்டு இருக்கு. குறிப்பாக, நம்ம ஊர் பாட்டி கதைகள்...

பாட்டிகளின் வாய் வழியே ஆரம்பிச்சு பல வகை பரிமாணங்கள் அடைஞ்சிருக்கு. அப்படியான பாட்டி கதைகள், இன்றையை டிரெண்டுக்கு ஏற்ப சில மாற்றங்களோடு, க்யூட்டான அனிமேஷன் வீடியோவாக உங்க குழந்தைகளுக்காக இங்கே கொடுக்கப்போறோம். வீடியோவைப் பார்த்து ரசிச்சுக்கிட்டே, அதில்வரும் கதையை உங்க குழந்தைகளை வாய்விட்டு வாசிக்கச் சொல்லுங்க. வாசிப்பு பயிற்சியாகவும் அமையும், ரசனையோடு பொழுதுபோக்கிய மாதிரியும் இருக்கும்.

crow story
crow story

முதல் கதையாக எதை எடுத்துக்கலாம்? ஆங்... பாட்டி கதைன்னு சொன்னதுமே எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வர்றது, பாட்டி வடை சுட, காகம் தூக்கிட்டுப் போறதுதான். இந்தக் கதையைக் கேட்டு வளராத குழந்தையே இருக்காது. தாய்ப்பால் மாதிரி ஒவ்வொரு குழந்தையும் சுவைத்த கதை.

கதையில் வரும் அந்தக் காகம் இப்பவாச்சும் திருந்துச்சா... பாட்டி என்ன பண்ணினாங்க? காகத்திடமிருந்து தட்டிப் பறிக்க நினைச்ச நரி என்ன பண்ணுச்சு? கதைக்குள்ளே போறதுக்கு முன்னாடி, கதையில் வரும் காகம் மற்றும் நரி பற்றின சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்த்துடலாமே...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காகங்கள்

காகங்களின் `கா... கா...' ஒலியானது, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பண்பேற்றத்தில் (Modulation) வெளிவருகிறது. அந்தப் பண்பேற்றத்துக்குத் தகுந்தவாறு மற்ற காகங்களின் ஒலியும் செயலும் அமையும். காகங்கள் மற்ற சில உயிரினங்களின் குரல்களையும் விகடம் (Mimicry) செய்யும் திறமை பெற்றவை. இவற்றை மனிதக் குரலில் பேசவும் பழக்கவும் முடியும்.

crow
crow

செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் காகங்கள், தன் எஜமானர்களின் பெயர்களை அழகாக உச்சரிக்கும். இவற்றின் அறிவுக்கூர்மையைத் தீய வழியில் எளிதாகப் பயன்படுத்த முடியும் என்று தெரியவந்துள்ளது. ஆகவே, காகத்தை செல்லப் பிராணியாக வளர்ப்பது சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

நரிகள்

நரிகளின் தொடர்பு மொழியும் காகங்களைப்போலவே பல்வேறு பண்பேற்றங்களைக் கொண்டதுதான். நரியானது நீண்ட தூரத்துக்கு ஓநாய்களைப் போலவே ஊளையிட்டுத் தொடர்புகொள்ளும். அதுமட்டுமன்றி, உறுமல், சிணுங்குதல் ஆகியவற்றோடு சேர்த்து குரைத்தும் தொடர்புகொள்கின்றன. காலை மற்றும் மாலை நேரத்தில், சூரியன் உதிக்கும்போதும் அஸ்தமிக்கும்போதும், சௌகர்யமான நிலையில் அமர்ந்து, அந்த மெல்லிய சூட்டில் குளிர்காய்வது நரிகளின் பழக்கம்.

fox
fox

அதிகமான வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில், பாதாளக் குகைகளை அமைத்து அதில் மறைந்துகொள்கின்றன. நரிகள் அமைக்கும் இத்தகைய பொந்துகள், பல அறைகளுடன் தப்பிச்செல்லத் தகுந்த பல வழிகளுடன் இருக்கும் என்பது சுவாரஸ்யமான உண்மை.

இப்போ,`பட்டி டிங்கரிங்' பார்த்த பாட்டி கதைக்குள் போகலாமா... இங்கே இருக்கும் வீடியோவை க்ளிக் பண்ணுங்க... உங்க குழந்தைகளை காட்சிகளைப் பார்த்துக்கிட்டே வாய்விட்டு வாசிக்கச் சொல்லுங்க!

நமக்கு நன்கு தெரிந்த பாட்டி கதைகளின் லேட்டஸ்ட் வெர்சன்... இந்த 'பட்டி டிங்கரிங் பார்த்த பாட்டி கதைகள்'. உங்கள்...

Posted by Vikatan EMagazine on Friday, May 1, 2020
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு