அன்றைய (1990-களில்) சுட்டிகளை வாயைப் பிளக்கவைத்த சிறார் திரைப்படங்களை, புதிய தொழில்நுட்பத்தில் கொடுத்து, இன்றைய சுட்டிகளை குஷிப்படுத்துவதுதான் இப்போதைய டிரெண்ட். ‘அலாவுதீன்', ‘தி லயன் கிங்', ‘போக்கிமான்: டிடெக்டிவ் பிகாச்சூ' என ஒவ்வொன்றும் வளர்ந்துவிட்டவர்களுக்கும் நாஸ்டால்ஜியா அனுபவமாக அமைந்தது. இதே பாணியில், அடுத்தடுத்து வரப்போகும் திரைப்படங்களை உங்க டைரியில் குறிச்சு வெச்சுக்கங்க...

டோரா அண்டு தி லாஸ்ட் சிட்டி ஆப் கோல்டு (Dora and the Lost City of Gold)

டோராவையும் புஜ்ஜியையும் ரசிக்காத தமிழ்நாட்டு குழந்தைகள் மிகக் குறைவு. 20 ஆண்டுகளாகப் பல்வேறு சேனல்களில் டோராவின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஹிட் லிஸ்ட்டில் உள்ளது. தொலைக்காட்சியில் பயணம் செய்துகொண்டிருந்த டோரா, இப்போது சினிமா வழியே பயணம் செய்ய தயாராகிவிட்டாள். டோரா என்றதும் மழலை மொழி பேசும் குட்டிப் பெண்தான் நினைவுக்கு வரும். இந்த டோரா கொஞ்சம் வளர்ந்த பெண்.

டோராவின் பயணங்களைப் பற்றிய ஹாலிவுட் திரைப்படம், இன்னும் சில வாரங்களில் வெளிவரவுள்ளது. காட்டில் தினமும் புதிய பயணங்கள் செல்லும் டோரா, நகரத்துக்குப் பள்ளி ஒன்றில் சேர்க்கப்படுகிறாள். இந்நிலையில், டோராவின் அப்பாவும் அம்மாவும் சென்ற பயணத்தில், ஏதோ ஆபத்து நிகழ்ந்து காணாமல் போகிறார்கள். பள்ளி நண்பர்களுடன் இணைந்து அப்பா, அம்மாவை டோரா மீட்பதுதான் கதை.

டோராவாக இசபெல்லா மோனர் நடித்துள்ளார். ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர் பெனிசியோ டெல் டொரோ, ‘குள்ளநரி' கதாபாத்திரத்துக்குப் பின்னணி குரல் தந்துள்ளார்.

சோனிக்: தி ஹெட்ஜ்ஹாக் (Sonic The Hedgehog)

‘செகா' என்ற நிறுவனம் வெளியிட்ட வீடியோ கேம், ‘சோனிக்: தி ஹெட்ஜ்ஹாக்.' அன்றைய குழந்தைகளிடம் மிகப்பெரிய ஹிட்டானது இந்த வீடியோ கேம். அப்போதே கதையாக மாற்றப்பட்டு, கார்ட்டூன் வடிவத்தில் வெளியானது.

‘ஹெட்ஜ்ஹாக்' என்பவை, முள்ளம்பன்றி வகையைச் சார்ந்தவை. ‘சோனிக்' என்ற ஹெட்ஜ்ஹாக்கின் சூப்பர்பவர், அதன் அதீத வேகம். அதைப் பிடிக்க அரசு முயல்கிறது. சூப்பர் வில்லனான டாக்டர் ரோபாட்னிக், அரசுக்கு உதவ வருகிறார். அந்த ஊரின் காவல்துறை அதிகாரியை நண்பனாக்கிக்கொள்ளும் சோனிக், எதிரிகளிடமிருந்து எப்படித் தப்பிக்கிறது என்பதான் கதை.

சோனிக் கதாபாத்திரத்துக்கு பென் ஷ்வார்ட்ஸ் குரல் கொடுக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி, வில்லன் டாக்டர் ரோபாட்னிக் வேடத்தில் நடித்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியாகி, உலகச் சுட்டிகளிடம் வைரலாகியுள்ளது. திரைப்படம், அடுத்த ஆண்டில் வெளியாகும்.

தி ஆடம்ஸ் ஃபேமிலி (The Addams Family)

நியூயார்க் நகரத்தின் கல்லறைத் தோட்டத்துக்கு அருகில் பேய்களைப் போல வாழும் குடும்பத்தின் கதை. ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படைப்பு, திரைப்படமாகவும் அனிமேஷன் தொடராகவும் வெளிவந்தது. தற்போது, இது அனிமேஷன் திரைப்படமாக வெளிவரவுள்ளது.

20ஆம் நூற்றாண்டில், அமெரிக்காவின் பணக்காரக் குடும்பங்களைக் கலாய்க்கும் நோக்கில், ‘தி நியூயார்க்கர்' இதழில், கார்ட்டூன் தொடராக முதன்முதலில் வெளியானது. கதை எதுவும் இல்லாமல், ஒற்றைக் கார்ட்டூனாக வந்தாலும், மக்களின் வரவேற்பைப் பெற்றது. தொலைக்காட்சி தொடராக எடுக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் கார்ட்டூன் தொடராகவும் வந்து, குழந்தைகளைக் கவர்ந்தது.

‘ஸ்கூபி டூ' தொடரின் சில எபிசோடுகளிலும் இந்தக் கதாபாத்திரங்கள் இடம்பெற்றன. தற்போதைய புதிய வெர்ஷனாக, அனிமேஷன் வடிவத்தில் வெளிவரவுள்ள ‘ஆடம்ஸ் ஃபேமிலி'யை வருகிற அக்டோபரில் சந்திக்கலாம்.

புதிய வெர்சன்களுக்கு வெல்கம் சொல்வோம்!