மிஸ்டர் மியாவ்
• தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு ட்ரஸ்டில் நிதி சேர்க்க வேண்டும், சொந்தமாக ப்ரிவ்யூ தியேட்டர் கட்டவேண்டும் என்பது கனா! சமீபத்தில் விக்ரமனை சந்தித்த விஜய், சங்கத்துக்கு ரூ.25--லட்சத்துக்கான காசோலையை நீட்டி சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்து இருக்கிறார். தீபாவளி ரிலீஸின்போது, 'கத்தி’ படத்தில் விஜய்க்கு பிரச்னை ஏற்பட்டது. அப்போது இதே இயக்குநர்கள் சங்கம், 'அம்மா கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ...’ என்று அஞ்சி வாய்மூடி மௌனம் காத்தது.

• ஒரு காலத்தில் இரண்டு கதைகளை வைத்து 'ஒரு வீடு இரு வாசல்’ திரைப்படத்தை இயக்கினார், பாலசந்தர். அதே பாணியில் 'ஒரு டிக்கட்ல ரெண்டு சினிமா’ படத்தை டைரக்ஷன் செய்யப் போகிறார், லாரன்ஸ். முதல் பாதியில் ராய்லட்சுமி, இரண்டாம் பாதியில் ஆண்ட்ரியா என்று இரண்டு ஹீரோயின் என்கிற செய்தியை வெளியிட்டார். 'என்னிடம் இதுபற்றி பேசவே இல்லை, அப்புறம் எந்த உரிமையில என் பெயரை லாரன்ஸ் அறிவிக்கலாம்...’ என்று கொந்தளிக்கிறார், ஆண்ட்ரியா!
• சமுத்திரக்கனி, இயக்கத்துக்கு இடைவேளை கொடுத்து நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 'வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் தனுஷ். அடுத்து 'மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெங்கட்பிரபு செதுக்கியுள்ள வித்தியாசமான கேரக்டருக்கு தனுஷ் கொடுத்ததைவிட அதிகமாம்!
• இதுகாறும் தமிழ்கூறும் நல்லுலகம் நயன்தாராவை ரொமான்ஸ் லுக் விட்டு வருகிறது. ஆனால், அட்லி மட்டும் 'அக்கா என்றழைக்காத உயிரில்லையே...’ என்று பாடி பாசத்தில் நெகிழ்கிறார். விஜய்யிடம் அட்லி திறமையை புகழ்ந்து அவரது கால்ஷீட்டை தாரா வாங்கிக் கொடுத்துவிட்டார். அந்த நன்றிக்குப் பிரதிபலனாக நயன்தாராவையே விஜய்க்கு நாயகியாக்கி விட்டார், அட்லி.