மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 29

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சிறுகதைகள், ஓவியங்கள்: சந்தோஷ் நாராயணன்

கி.பி. 2150  

பிரணவ், தன் கண்களை மூடிக்கொண்டு  தயாரானான். அவன் தலையைச் சுற்றி விதவிதமான வொயர்கள் நெளிந்துகொண்டிருந்தன. மூளையை ஊடுருவிப் பிணைத்திருக்கும் வொயர்கள். அவன், ஐந்து தலைமுறைக்கு முந்தைய தன் எள்ளுத் தாத்தாவிடம் தொடர்புகொள்ளத் தயாரானான். காலத்தின் பின்னோக்கிய ஒரு பயணம். விஞ்ஞானிகள், எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஓ.கே ஸ்டார்ட் ஒன்... டூ... த்ரீ. 2075... 2025... 2015 ஜனவரி. இன்று இந்த நொடி ரிங்டோன் அடித்துக்கொண்டே இருந்தது. தொடர்புகொள்ள முடியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு பிரணவ் கண்ணீருடனும் விஞ்ஞானிகள் மிகுந்த சோகத்துடனும் கலைந்து சென்றனர்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 29

கதையைப் படித்து முடித்துவிட்டீர்களா? இப்போது உங்கள் மொபைல் போனைப் பாருங்கள். ஒரு uஸீளீஸீஷீஷ்ஸீ நம்பரில் இருந்து மிஸ்டுகால் வந்திருக்கிறதா?

சென்னையின் பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் அவினாசிலிங்கம், நிமிர்ந்து பார்த்தார். எதிரில் குனிந்து உட்கார்ந்திருந்தான் ரவிஷங்கர். கோடம்பாக்கத்தின் மோஸ்ட் வான்டட் இயக்குநர்.

''சொல்லுங்க ரவி, என்னதான் உங்க பிரச்னை?''

''டாக்டர், மறுபடியும் அதே பிரச்னைதான்'' என்றபடி நிமிர்ந்த ரவிஷங்கர் சொன்னான்... ''மறுபடியும் என் மூக்கு சப்பையாயிருச்சு. புருவங்கள் மேல் நோக்கித் தூக்கிக்குது, கண்கள் இடுங்கிப்போய் சின்னதாகிருச்சு.''

அஞ்ஞானச் சிறுகதைகள் - 29

''இதோட நாலு முறை உங்களுக்கு ஆபரேஷன் பண்ணியாச்சு டைரக்டர். ஆனா, மறுபடி மறுபடி இப்படி ஆகுதுன்னா, அதைச் சரிபண்றதுக்கு ஒரே வழிதான் இருக்கு. நீங்க மொதல்ல அதை நிறுத்தணும். ராத்திரி பகலா பார்க்கிறதை நிறுத்தணும்!''

''எதைச் சொல்றீங்க சார்?''

மெல்லிதாகச் சிரித்தார் டாக்டர்... ''கொரியன் டி.வி.டி-களைத்தான்!''

அஞ்ஞானச் சிறுகதைகள் - 29

நான் இப்போ, இந்த நிமிஷம், இந்த நொடி, சந்தோஷ் நாராயணன் எழுதிய இந்த அஞ்ஞானச் சிறுகதையை விகடனில் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு குறிப்பு வருகிறது... ஆல்ட்டர்நேட்டிவ் யுனிவர்ஸ் பற்றி. அதாவது 'என்னைப்போலவே இன்னொரு யுனிவர்ஸில், இன்னொரு நான், இதே போலவே படித்துக்கொண்டு இருப்பான்’ என. சில நொடிகள் முன் பின் இருக்கலாம். ஆச்சர்யமாக இருக்கிறது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 29

நான் இப்போ, இந்த நிமிஷம், இந்த நொடி, சந்தோஷ் நாராயணன் எழுதிய இந்த அஞ்ஞானச் சிறுகதையை விகடனில் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு குறிப்பு வருகிறது... ஆல்ட்டர்நேட்டிவ் யுனிவர்ஸ் பற்றி. அதாவது 'என்னைப்போலவே இன்னொரு யுனிவர்ஸில், இன்னொரு நான், இதே போலவே படித்துக்கொண்டு இருப்பான்’ என. சில நொடிகள் முன் பின் இருக்கலாம். ஆச்சர்யமாக இருக்கிறது!

குட்டி கிச்சா, பொம்மைத் துப்பாக்கியை கிஷோரின் நெஞ்சுக்கு நேராக நீட்டியபடி, ''ஹேண்ட்ஸ் அப் அப்பா'' என்றான்.

கிஷோர் சிரித்துக்கொண்டே, பாக்கெட்டில் சிணுங்கிய செல்போனை அழுத்தி காதுக்குக் கொண்டுபோனான்.

''கடந்த பல வருடங்களாக இந்தியாவில் விற்கப்பட்ட சீனா பொம்மைகள் அனைத்தும் வெறும் பொம்மைகள் அல்ல; அவை, ரகசிய ஆயுதங்கள். இது ஒரு சீக்ரெட் ஆபரேஷன். இந்தியாவில் ஒரு கோடிக் குழந்தைகளுக்கு மேல் சீனா பொம்மைகள் வைத்திருக்கிறார்கள். அதாவது சீனாவுக்கு இந்தியாவுக்குள்ளேயே ஒரு கோடிக்கு மேல் சோல்ஜர்ஸ் இருக்காங்கனு அர்த்தம். இன்னையில் இருந்து அந்த ஆபரேஷன் ஆக்டிவ் ஆகுது...'' - உயர் அதிகாரியின் எமெர்ஜென்சி மெசேஜ், இன்டலிஜென்ஸ் துறையின் இளம் அதிகாரி கிஷோருக்கு மண்டைக்குள் அலாரமாக இற‌ங்கியது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 29

நெஞ்சுக்கு நேராக நீட்டிக்கொண்டிருந்த கிச்சாவின் பொம்மைத் துப்பாக்கியை, பதற்றத்துடன் திரும்பிப் பார்த்தான். 'மேட் இன் சீனா’ என்ற சின்ன வாசகம் கண்ணில் பட்டது!

'ண்டே ஆபீஸுக்குப் போக யாருக்குத்தான் பிடிச்சிருக்கு?’ கிருஷ்ணமூர்த்தி, தனக்குப் பதிலாக ஆபீஸ் செல்ல தன்னைப்போலவே அசலாக ஒரு ரோபோவை உருவாக்கினான். அதற்கு 'ரோபோ கி.மூ’ எனப் பெயரிட்டான். ஏற்கெனவே இயந்திரம் மாதிரி வேலை செய்துகொண்டிருந்த தான், இனி ஜாலியாக வீட்டில் இருக்கலாம், டி.வி பார்க்கலாம், புத்தகம் படிக்கலாம், பிளாக் எழுதலாம், பேசாமல் படுத்துத் தூங்கலாம். ரோபோ கி.மூ, ஒழுங்காக வேலைக்குச் சென்று திரும்பியது. ஒரு நாள் கழிந்தது. ஒரு வாரம் வெற்றிகரமாக முடிந்த‌து.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 29

அடுத்த மண்டே மார்னிங் வந்தது. கிருஷ்ணமூர்த்தி, ஹாயாக ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து டி.வி-யை ஆன் பண்ணினான். பக்கத்தில் ரோபோ கி.மூ-வும் வந்து உட்கார்ந்து, டி.வி பார்க்க ஆரம்பித்தான், கிருஷ்ணமூர்த்தி கோபமாக, ''ஏய்... நீ ஆபீஸ் போகலை?'' எனக் கேட்கவும், ரோபோ கி.மூ லேசாகச் சிரித்தான். அறைக்குள் இருந்து இன்னொரு ரோபோ வெளியே வந்து ஆபீஸ் ஷூவை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பியது. 

அஞ்ஞானச் சிறுகதைகள் - 29

கிருஷ்ணமூர்த்தி திரும்பி கி.மூ-வைப் பார்த்தான். கி.மூ சொன்னான், 'மண்டே ஆபீஸுக்குப் போக யாருக்குத்தான் பிடிச்சிருக்கு?’ ஒரு நாள் கழிந்தது. ஒரு வாரம் வெற்றிகரமாக முடிந்த‌து!

அடுத்த மண்டே மார்னிங் வந்தது...