Published:Updated:

பிட்ஸ் பிரேக்

கார்க்கிபவா

பிட்ஸ் பிரேக்

அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமாவின் தற்போதைய முழுநேரப் பணி என்ன தெரியுமா? ஆரோக்கியமான, கலப்படம் இல்லாத உணவுகளைப் பற்றிய விழிப்புஉணர்வை உண்டாக்குவதுதான். மகள்கள் மாலியா, சாஷாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நாடு நாடாகப் பயணிக்கிறார் மிஸஸ் ஒபாமா. பள்ளி மாணவிகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தொடர்பாக செய்த புராஜெக்ட்டுகளைப் பார்த்து அசந்துபோன மிச்செல், 'இவ்வளவு சின்ன வயதில் நிறைய விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள். நாளைய உலகம் நம்பிக்கையளிக்கிறது’ என நெகிழ்ந்திருக்கிறார். 'ஆறாம் திணை’ சேவை... அமெரிக்காவுக்கும் தேவை!  

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

'தாமதிக்காமல் உடனடியாக ஒரு புரட்சி வெடிக்க வேண்டும். அனைவரும் அணி அணியாக வாருங்கள்!’ என அறைகூவல் விட்டிருக்கிறார் போப் ஆண்டவர் பிரான்சிஸ். 'புரட்சி... போராட்டம்’ என கம்யூனிஸ்ட் பாணியை போப் கையில் எடுக்கக் காரணம், உலகமெங்கும் பெருகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள். 'வளர்ச்சி என்ற பெயரால் இயற்கையைச் சூறையாடியது போதும். வருங்காலச் சந்ததிக்கு, இந்தப் பூமியை விட்டுவைப்போம்’ என ஆரம்பித்து, 192 பக்கங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் போப். ஒவ்வொரு மனிதனும் இந்தப் புரட்சியைத் தொடங்காவிட்டால், இந்த நூற்றாண்டின் முடிவில் இன்னும் பல இயற்கைப் பேரிடர்கள் நிகழும் என 'அலர்ட்’டுகிறார் போப். ஓ ஜீசஸ்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 இங்கு ரஜினி-கமல் போல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் அர்னால்டு, சில்வஸ்டர் ஸ்டாலோன் இருவரும் படா தோஸ்த். அடிக்கடி சந்தித்து அரட்டை அடித்துக்கொள் வார்கள். அப்படி அரட்டை முடிந்து கிளம்பும்போது பத்திரிகையாளர்களிடம் இருவரும் சிக்கிக்கொள்ள, 'ரெண்டு பேர்ல யார் உடம்பை பக்காவா வெச்சிருக்கீங்க?’ எனக் கேட்டிருக்கிறார்கள். ஸ்டாலோன் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்ன பதில்... 'அர்னால்டு’. மீசை இல்லாத நண்பா... உனக்கு பாசம் அதிகம்டா!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 சாகச வீரன் நெய்மாரை, அடுத்தடுத்து அட்டாக் செய்கின்றன சர்ச்சைகள். 'பார்சிலோனா க்ளப்பில் சேர, சுமார் 400 கோடி ரூபாய் பெற்றார் நெய்மார்!’ என்பது அப்போதைய அடேங்கப்பா தகவல். ஆனால், உண்மையில் 650 கோடி வாங்கிய நெய்மார், வரிச் சுமையைக் குறைக்கவே தொகையைக் குறைத்துக் காண்பித்திருக்கிறார் என மீண்டும்  சர்ச்சை. 'கோபா அமெரிக்கா’ தொடரில் விளையாடிக்கொண்டிருக்கிறார் நெய்மார். கொலம்பியா அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, அந்த அணியின் வீரர்களை நெய்மார் முட்டித் தள்ளிய குற்றத்துக்காக நான்கு போட்டிகளில் தடை மற்றும் 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பதுங்கிப் பாயக் காத்திருக்கிறது புலி!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 உச்சத்தில் இருக்கிறது 'பாகுபலி’ காய்ச்சல். 'இனி நாம் உலக சினிமாக்களுடன் தாராளமாகப் போட்டிபோடலாம்!’ என உற்சாகமாக இருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜமௌலி. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெலுங்குத் திரைப்பட ஜாம்பவான்களை நினைவுகூர்ந்தவர், நம்ம ஊர் இயக்குநர் ஷங்கருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். 'ஸ்பெஷல் எஃபெக்ட்ஸை எப்படி கமர்ஷியலாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லித்தந்த ஷங்கர் சாருக்கு நன்றி’ என்ற ராஜமௌலியின் ட்வீட், வைரல் ஹிட். ஜென்டில்மேன்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

  'மேரி கோம் ஜூனியர்’ என்ற அனிமேஷன் டி.வி தொடருக்கு அனுமதி கொடுத்திருக்கிறார், ஒலிம்பிக் சாம்பியன் மேரி கோம். 'என்னைப் போன்ற ஒரு அவதார்தான் சீரியலின் ஹீரோயின். பொதுவாக பெண்களுக்கான சண்டைக் காட்சிகள் நிறைந்த விளையாட்டோ, டி.வி சீரியலோ கிடையாது. ஆனால், இந்தத் தொடரில் தற்காப்புக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத் திருக்கிறார்கள். அடிப்படை தற்காப்புப் பயிற்சிகளை சீரியலில் ஒளிபரப்புவார்கள். 'தன் கையே தனக்கு உதவி’ என்பதை பெண்கள் உணர வேண்டும்!’ எனப் பூரிக்கிறார் மேரி கோம். 'நாக்-அவுட்’ பண்ணுங்க கேர்ள்ஸ்!