மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

அனுபவ சித்தனின் குறிப்புகள் 
ராஜா சந்திரசேகர்  வெளியீடு: நதி, சி-8, மூன்றாவது தளம், சரயூ பிளாட்ஸ், விஜய் பிளாக், 70/2, ஸ்ரீராமர் தெரு, சாலிகிராமம், சென்னை-93.  பக்கங்கள்: 120  விலை:

விகடன் வரவேற்பறை

70

விகடன் வரவேற்பறை

ராஜா சந்திரசேகரின் கவிதைகள், தற்கால ஹைக்கூக்களைவிட நீண்டதாக, ஆனால் சின்னச் சின்ன வரிகளில் பல வித்தியாசமான பார்வை களைப் பதியவைக்கின்றன. 'பார்க்கத் தொடங்கினேன்/பார்த்தவைகளிலிருந்து/ பார்க்காதவைகளை!’ என்று ஆழமான சிந்தனைகளையும், ''....65..64..63/என எண்களைச் / சுருக்கிக்கொண்டே வருகிறது / வெடிகுண்டு/ சீக்கிரம் ஓடிப்போய் / தொலைக்காட்சிப் பெட்டி முன் / அமர்ந்துகொள்ளுங்கள் / சேதாரங்கள், சோகங்கள் / உங்களுக்கு / 'லைவ்’வாக வரும்!’ போன்ற சமூக யதார்த்தப் பதிவுகளுமாக விதவித உணர்வுகளைத் தரும் கவிதைப் புத்தகம்!  

 வரலாறு பேசுகிறது! http://www.radiotapes.com/

விகடன் வரவேற்பறை

ஸ்பெக்ட்ரம் நீரா ராடியா டெலிபோன் டேப் போல உலகெங்கும் பரபரப்பு கிளப்பிய ஊழல் விவகார தொலைபேசி உரையாடல்களின் தொகுப்புகள் இத் தளம் முழுக்க. அதோடு, அந்த விவகாரம்பற்றிய வரலாறும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர, யுத்த களங்களில் பரிமாறப்பட்ட தகவல்கள், அச் சமயம் வானொலிகளில் வாசிக்கப்பட்ட செய்திகளையும் இங்கே கேட்கலாம். வரலாற்றின் குரலைத் திரும்பக் கேட்க ஒரு வாய்ப்பு!

 மண், மரம், மழை, மனிதன்! www.maravalam.blogspot.com

விகடன் வரவேற்பறை

ர வளம் பற்றிப் பேசும் வலைப்பூ! அமேசான் காடுகளின் ரப்பர் மரங்களைக் காப்பாற்றப் போராடிய சூழலியல்வாதி சிகோமெண்டிஸ் குறித்த கட்டுரை, ரப்பர் மரங்களின் அழிவை எதிர்க்கப் போராடிய ஓர் இயற்கைப் போராளி குறித்தும் மிகச் சிறப்பாக விளக்குகிறது. இயற்கை இடுபொருள், இயற்கை வைத்தியம், நீர் மேலாண்மை, வீட்டுத் தோட்டம் எனப் பல்வேறு தலைப்புகளில் பகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள், மனிதர்களின் நலத்தையும் இயற்கையின் வளத்தையும் பேசுகிறது. சில்வர் புல்லட், சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை, உண்ணிச் செடி என்று பல்வேறு தாவரங்களின் நன்மை, தீமை குறித்தும் பதிவுகள் விளக்குகின்றன!

 நம் சென்னை 2020  இயக்கம்: ராஜ்குமார் கொர்படே

விகடன் வரவேற்பறை

சென்னையைப் பற்றி அக்கறைப்படும் ஆவணப்படம். சாஃப்ட்வேர் நிறுவனங்கள், தொழிற் சாலைகள், தூதரகங்கள், பாரம்பரியக் கட்டடங்கள் என சென்னையின் பளபள பக்கங்களை காட்டி வரலாறு சொல்பவர்கள், தடக்கென தடம் மாறி பிளாட்ஃபார்மில் சிதறிக்கிடக்கும் உணவுப் பொட்டலங்கள், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள், ரோட்டிலேயே குடிப்பவர்கள், எச்சில் துப்புபவர்கள் என சென்னையின் அழுக்குப் பக்கங்களையும் புரட்டுகிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத மக்களுக்கு கழிப்பிட வசதியை அளிக்கக் கோருகிறார்கள். சென்னைக் காதலர்கள் அவசியம் காண வேண்டிய ஆவணப் படம்!

 பதினாறு  இசை: யுவன்ஷங்கர் ராஜா
வெளியீடு : திங்க் மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

சின்ன அதிர்வுகூட இல்லாமல் வெளியாகி இருக்கும் யுவன்ஷங்கர் ராஜாவின் மியூஸிக்கல். திரையில் காதலன் காதலி இடையே காதல் மொட்டுவிட்டதும் ஸ்பீக்கர் நிறைக்கும் யுவன் ஸ்பெஷல் காதல் மெட்டில் ஒலிக்கிறது 'அடடா என் மீது தேவதை வாசனை!’ பாடல். பழகியது என்றாலும் இனியது. 'யார் சொல்லிக் காதல் வருவது’ பாடலில் ஒலிக்கும் யுவனின் குரலில் மெஸ்மரிச மென்மை. 'பூமி முழுக்க காதல் இருக்க, எங்கு ஓடி ஒளிகிறாய்’ என்று சினேகனின் வரிகளில் வழிகிறது நேசம். காதல் துடிப்புகளை நம்மீது ஏற்றிவிடும் ஆல்பத்தின் ஹைலைட் பாடல். மெல்லலை படகுப் பயணம்போலத் தாலாட்டுகிறது 'காட்டுச் செடிக்கு காவல் கிடைச்சாச்சே’ பாடலின் இசை. காதல் பிரியர்கள் காதலிக்கும் ஆல்பம்!