Published:Updated:

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்!

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்!

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்!

Published:Updated:

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்!

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்!

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்!

தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத கதாநாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்தத் தருணத்தில், தன்னுடைய நண்பரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கும் படத்தை 'சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்' என்ற பெயரில் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ளார். இந்தப் படத்திற்கான பூஜை இன்று (19.2.2018) லால்குடியில் நடைபெற்றது. இந்தப் படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. 

சத்யராஜ் அப்பாவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாகவும் நடிக்கிறார்கள். இளவரசு, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் தர்ஷன் நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணி புரிகிறார்கள். சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், திபு நினன் தாம்ஸ் ஆகிய மூவரும் ஒரே ஊர்க்காரர்கள், ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காரணத்தினால்தான் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் படத்திற்கான பூஜை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.