மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

திசை காட்டிப் பறவை - பேயோன்
வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை-24.  பக்கங்கள்: 136  விலை:

விகடன் வரவேற்பறை

100

விகடன் வரவேற்பறை

''மிகமிக நுட்பமான நகைச்சுவைக் கதை ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறேன். சீரியஸ் கதை என்று யாராவது தவறாக எடுத்துக்கொள்வார்கள். அவ்வளவு நுட்பமான நகைச்சுவை!'' - ஒவ்வொரு வார்த்தையிலும் நுட்பமான கேலியைப் பொதித்து வைத்திருக்கிறார் பேயோன். லார்டு லபக்குதாஸ் என்ற பாத்திரத்தின் மூலம் மொழிபெயர்ப்பாளர்களைக் கிண்டல் அடிப்பதாகட்டும், 'என்னைப்போல் பத்தி எழுதுவது எப்படி?’ கட்டுரை(?)யில் பிரபல எழுத்தாளரின் பத்தி எழுத்து சூத்திரத்தை உடைத்துப் போடுவதாகட்டும், துள்ளல்... எள்ளல்!

ஒவ்வொரு விவசாயியும் தேவை மச்சான்!
http://greenindiafoundation.blogspot.com

விகடன் வரவேற்பறை

யற்கை முறையில் உரம் தயாரிப்பது எப்படி, கற்றாழைச் சாகுபடியின் சிறப்பு என்ன, கால்நடைகளுக்குத் தேவையான சத்துகளை அளிக்கும் தீவனத்தை எப்படித் தயாரிப்பது... இப்படி விவசாயம் சார்ந்து ஏராளமான செய்திகள் இந்த வலைப்பூவில் உள்ளன. விவசாயம் மட்டும் இன்றி சூழலியல் சார்ந்தும் பல்வேறு யோசனைகளை இந்தத் தளம் முன் வைக்கிறது!

 இது ஃபேஷன் உலகம்... வெல்கம்! www.snehalcreation.com

விகடன் வரவேற்பறை

விதவித ஆடைகள் மீது ஆர்வம் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தளம். லெக்கிங் டிசைனில் காட்டன், டெனிம், தோத்தி எனத் துணி வகைகள், சல்வார், குர்தா, சோளி என்று  ஆடை வகைகளை      விலை, நிறம் வாரியாக இங்கு தொகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மிகவும் பயன்படும் தளம்!

வாழ்க்கை  இயக்கம்: ர.நந்தகுமார்  வெளியீடு: இந்தியன் சினிமாஸ்

விகடன் வரவேற்பறை

வீட்டுச் செலவுக்கு ஒரே ஆதாரமான பென்ஷன் பணத்தை வெளியூரில் எடுக்கச் செல்கிறார் வயதான தாய். மகனோ பர்ஸில் இருந்து ஏ.டி.எம். கார்டைத் திருடி, பணம் முழுவதற்கும் கள் குடிக்கிறான். பணம் இல்லாததால் வெளியூரில் இருந்து நடந்தே வீட்டுக்கு வருகிறார் அந்தத் தாய். கள்ளுக் கடை சண்டையில் உதைபட்டு, சாலையில் விழுந்துகிடக்கிறான் மகன். ஏ.டி.எம். கார்டு என்ன ஆனது என்பது கனமான க்ளைமாக்ஸ். கேரக்டர்களின் இயல்பான நடிப்பு, தரமான ஒளிப்பதிவு இரண்டும் கவனம் ஈர்க்கிறது!

அரவான்  இசை: கார்த்திக்  வெளியீடு: ஜங்க்லீ மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

110

விகடன் வரவேற்பறை

நாடோடிகளாக வாழும் கள்வர்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் விவேகாவின் வரிகளில் விரியும் 'ஊரே ஊரே’ பாடலின் அந்த ஏலோ ஏலோ ஹம்மிங்... அட்டகாச ஆரவாரம்! படத்தின் உணர்வைப் பாடலே பிரதிபலிக்கிறது. விஜய் பிரகாஷ் - ஹரிணி குரல்களில் வருடும் 'நிலா நிலா போகுதே’ பாடல், நிலா போகும் பாதையில் நம்மையும் கைப் பிடித்து அழைத்துச் செல்கிறது. களவாடச் செல்வதற்குக் கட்டியம் கூறும் 'களவு’ பாடல் இரண்டு நிமிடத்துக்குள்ளேயே பீரியட் காலக்கட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பவதாரிணி குரல் 'உன்னக் கொல்லப் போறேன்’ பாடலில் வசீகரிக்கிறது. மென்மையான வரிகளும் மெல்லிசையுமாக இறகு வருடல். 'நாக மலை சாஞ்சிடுச்சி’ பாடலில் ஒலிக்கும் கோபால்ராவ், சீர்காழி சிவசிதம்பரம், நாராயணன் குரல்கள் பாடலுக்கே தனி கம்பீரம் சேர்க்கின்றன. சுவாரஸ்யமான தகுதிகளுடன் 'அரவான்’ புகழ் பாடுகிறது 'ஒருவன் இருவன்’ பாடல். பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் துணைகொண்டு அறிமுக முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார் இசையமைப்பாளர் கார்த்திக்!