அவள் 16
Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

வரலாறு  முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் season 4, episode 1

தடைகளைத் தகர்த்தெறி!

ஜோஷ்னா சின்னப்பா... சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவின் முகம். தமிழகத்தின் பெருமை. சென்னைப் பெண். தன் 14 வயதில் இவர் நிகழ்த்திய இந்தியாவின் இளம் நேஷனல் சாம்பியன் சாதனை, இன்றும் முறியடிக்கப்படவில்லை. 2014-ம் ஆண்டு ஸ்குவாஷ் உலக தரவரிசையில் 19-வது இடத்தைப் பிடித்தவர், 2015-ம் ஆண்டு உலக தரவரிசையில் 13-வது இடத்துக்கு முன்னேறி அசத்தினார். 2014 காமன்வெல்த் கேம்ஸில் தீபிகா பல்லிக்கலுடன் இணைந்து விமன்’ஸ் டபுள்ஸில் கோல்டு மெடல் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் மெடல் பெற்றுத்தந்தது இந்த ஜோடி. 30 வயதுக்குள் 7 டைட்டில்கள் வென்றிருக்கும் இளம் எனர்ஜி இவர். இந்த ரோலர் கோஸ்டர் வாழ்க்கையில் தன் வெற்றிகளுக்குப் பின் இருக்கும் வலி, வலிமையை `அவள் 16’ல் பகிர்ந்துகொள்ள வருகிறார், ஜோஷ்னா.

வரலாறு  முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

ஹாய் மை டியர் ஃப்ரெண்ட்ஸ்...

எல்லோரும் எப்படி இருக்கீங்க? `அவள் 16’ மூலமா உங்களை மீட் பண்றதுல ரொம்ப சந்தோஷம்!

சரி, என்ன பேசலாம் நாம்?

என் குடும்பம், நண்பர்கள், என் பள்ளி நாட்கள் தொடங்கி, இன்டர்நேஷனல் போட்டிகள்வரை நான் கலந்துகிட்ட டோர்னமென்ட்ஸ், வாங்கின விருதுகள், திடீரென ஏற்பட்ட காயம், அதம் பின்னர் ஓய்வில் இருந்த 10 மாதங்கள், மறக்க முடியாத போட்டிகள்... எல்லாத்தையும் உங்ககிட்ட பகிர்ந்துக்க ஆர்வமா இருக்கேன்.

பொதுவா நம்ம ஊர்ல விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு வீரர்களுக்கு உரிய பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்கிறதில்ல. அதிலும் ஒரு பெண்ணா விளையாட்டுத் துறையில சாதிக்க இரட்டிப்புத் தெம்பு வேணும். என்னோட அந்த எனர்ஜி பக்கங்களை உங்களோட ஷேர் செய்துக்கிறேன்.

ஸ்குவாஷ் விளையாட்டு ஏன் டென்னிஸ் மாதிரியோ, இல்ல பாட்மின்டன் மாதிரியோ இன்னும் பிரபலமாகல? நேரடி அனுபவத்தில் நான் உணர்ந்த காரணங்களைச் சொல்றேன். இன்னும் நிறையப் பேசப் போறோம்!

என்ன டியூட்ஸ்...  7, 8 வயது ஜோஷ்னாவில் இருந்து கதையை ஆரம்பிக்கலாமா..?!

அப்பாகூட கிரவுண்டுக்குப் போனதில் ஆரம்பிச்ச பயணம் இது! நான் பக்கா சென்னைப் பொண்ணு. சென்னையில் இருக்கும்போது, ஏதோ சொர்க்கம் மாதிரி இருக்கும் எனக்கு. இந்திய ராணுவத்தின் பெருமைவாய்ந்த தளபதி, ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா, என்னோட கிரேட் கிராண்ட் அங்கிள். எங்கப்பா அஞ்சன் சின்னப்பாவும் சின்ன வயசில் இருந்தே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம்கொண்டவர். பெஸ்ட் ஸ்குவாஷ் பிளேயர். தலைமுறை தலைமுறையா உடல் ஆரோக்கியத்துக்கும், ஸ்போர்ட்ஸுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பத்தில் பிறந்ததனாலோ என்னவோ... நானும் சின்ன வயசில் இருந்தே ஹெல்த் கான்ஷியஸா, ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமுமா வளர்ந்தேன். 

வரலாறு  முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

நான் சின்னப்பிள்ளையா இருக்கும் போது அப்பா தினமும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் விளையாடப் போவார். அப்போ நானும் அவர்கூடப் போவேன், வேடிக்கை பார்க்க. என்னைப்போலவே அங்க வர்ற அப்பாவோட நண்பர்களின் குழந்தைகள் எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, விளையாடுவோம். அப்போகூட ஸ்குவாஷ்தான் வேணும்னு நான் முடிவெடுக்கல. எல்லா விளையாட்டு களையும் விளையாடிப் பார்ப்பேன்.

எனக்குச் சரியா 10 வயசாகியிருந்தப்போ முடிவு செஞ்சேன்... ஸ்குவாஷ்தான் என் வாழ்க்கையா இருக்கப்போகுதுனு. ஃப்ரெண்ட்ஸ்... இது ரொம்ப ரொம்ப முக்கியம். நீங்கள் எதுவா ஆக நினைக்கிறீங்களோ, அதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறீங்களோ, அவ்வளவு சீக்கிரம் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கலாம்.

பேக் டு ஃப்ளேஷ்பேக். ஸ்குவாஷ்தான் இனி எனக்கு எல்லாம்னு வீட்டில் சொன்னப்போ, அப்பா ஒரு கண்டிஷன் போட்டார். எக்காரணத்தைக் கொண்டும் நான் படிப்பை நிறுத்தக்கூடாது என்பதுதான் அது.

பள்ளி பருவம்... பட்டீஸ்!


சென்னை, லேடி ஆண்டாள் ஸ்கூல்தான் நம்ம ஏரியா. ரொம்ப ஸ்வீட்டான ஸ்கூல் டேஸ் என்னோடது. இப்போ நினைச்சுப் பார்த்தாலும் ஸ்வீட்டஸ்ட் மெமரீஸ் அது. என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்தான் இப்போவரைக்கும் எனக்கு பெஸ்ட் பட்டீஸ். அவங்களுக்கு எல்லாம் கல்யாணமாகி குழந்தைகள்லாம் வந்த பிறகும், அதே நட்போட, ஹெல்தியான கான்டாக்ட்ல இருக்கோம். வாழ்க்கையில நல்ல நண்பர்கள் கிடைச்சுட்டாலே போதும்.... செம்ம சப்போர்ட் சிஸ்டம் கிடைச்சுடும். எனக்கு அது கிடைச்சது. 

ஸ்கூல் டேஸ்ல போட்டிகளுக்குப் போகும் போது நான் தவற விடுற வகுப்புகளை எல்லாம் ஈடுகட்ட, டீச்சர்ஸ் ரொம்பவே உறுதுணையா இருந்தாங்க. அதுக்காக நான் ரொம்ப பவ்யமான பொண்ணுனு நினைச்சிடாதீங்க. இடம், பொருள், ஏவல் பார்க்காம வாய்விட்டுச் சிரிக்கிறதுல ஜோஷ்னா நம்பர் ஒன். ஒருமுறை டீச்சர் திட்டத் திட்ட நண்பர்களோட சேர்ந்து சத்தமா சிரிச்சு, பிரின்சிபால் கிட்ட மாட்டி, ஸாரி கேட்குற அளவுக்குப் போயிருச்சு. இருந்தாலும், என் ஸ்கூலுக்கு நான் செல்லம்தான்.

வரலாறு  முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

போட்டிகள் ஆரம்பம்!

ஆரம்ப நாட்களில் இருந்தே ஸ்குவாஷ் போட்டித் தொடர்களுக்கு நான் தனியாதான் போவேன். அப்போ எல்லாம் என் தம்பிதான் எனக்குப் பெரிய சப்போர்ட். அவன் பேர் கவுரவ். தம்பின்னாலும், அட்வைஸில் செய்வதில் தொடங்கி என்கரேஜ் செய்வதுவரை, அவன் எனக்கு அண்ணன்தான்... பல விஷயங் களில்! சார் ஸ்டேட் லெவல் பாட்மின்டன் பிளேயர். வீட்டுக்குள்ளேயே எனக்கு சூப்பர் கம்பேனியன் கிடைச்சது, வரம்.

என்னோட ஸ்குவாஷ் வாழ்க்கையில் எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய சந்தோஷம், நேஷனல் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை, ரெக்கார்டு பிரேக்காக ஜெயிச்சதுதான். நான் ஸ்குவாஷ் விளையாட ஆரம்பிச்சப்போ எங்கப்பா சொன்ன முதல் முக்கியமான விஷயம், என்னோட 15 வயசுக்குள்ள நான் நேஷனல் ஸ்குவாஷ் சாம்பியன் ஆகணும் என்பதுதான். காரணம், அதுக்கு முன்னால 16 வயதில் ஒருத்தவங்க சாம்பியன் பட்டத்தை வென்றதுதான் அதுவரை சாதனையா இருந்தது. அந்த ரெக்கார்டை முறியடிச்சு, 14 வயசில் நான் நேஷனல் ஸ்குவாஷ் சாம்பியன் ஆனேன். அந்த வெற்றி பெற்று 15 வருடங்கள் ஆயிருச்சு. இப்பவும் அதுதான் ரெக்கார்டு. அதிலும் அந்தத் தொடர்ல என்னால அரையிறுதிப் போட்டியை மறக்கவே முடியாது.

மை காட்! பிராக்டிஸுக்கு நேரமாச்சுப்பா... இப்போதைக்கு பை!

ஏன் அந்தப் போட்டியை மறக்க முடியாது, தீபிகா பல்லிகல்லுக்கும் எனக்குமான நட்பு, எங்களுக்குள் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்... எல்லாம் சொல்றேன். ரெண்டு வாரம் காத்திருங்க.

டேக் கேர் கைஸ் அண்ட் கேர்ள்ஸ்!

எஸ்.கே.பிரேம்குமார், கோ.இராகவிஜயா

 எம்.உசேன், பா.அபிரக்‌ஷன்