Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

• இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரை, ஜனாதிபதிகளும் பிரதமர்களும் பிரபலங்களுமே சந்திக்க முடியும் என்பதை மாற்றியிருக்கிறார் 93 வயதான முதியவர் போமன் கோஹினூர். மும்பையில் `பிரிட்டானியா அண்ட் கம்பெனி’ என்கிற பெயரில், ரெஸ்டாரன்ட் நடத்திவரும் போமனின் இரண்டு நிமிட வீடியோ, #willkatemeetme என்ற ஹேஷ்டேகுடன் சோஷியல் மீடியாவில் வைரல்ஹிட். இந்த வீடியோவைப் பார்த்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள், இது பற்றி இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டிடம் சொல்ல, தாஜ் ஹோட்டலுக்கு அவரை அரச மரியாதையுடன் அழைத்து வரச்சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது ராயல் ஃபேமிலி. `இளவரசரையும் இளவரசியையும் சந்தித்தேன். அவர்கள் மிகவும் அன்பானவர்கள். இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரைச் சந்திக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு' என நெகிழ்கிறார் போமன்!

பிட்ஸ் பிரேக்

•   பாலிவுட்டில் ஒரே பயோபிக் சீஸனாக இருக்கிறதே `உங்களுடைய பயோபிக் எப்போது வரும்?' என ஷாரூக் கானிடம் கேட்டபோது, `இதுவரை வந்திருக்கும் எல்லா பயோபிக்கும் இன்ட்ரஸ்ட்டிங் மனிதர்களுடையது. அவர்கள் வாழ்க்கையில் பல சுவாரஸ்யங்கள் இருந்தன. என்னுடைய வாழ்க்கையில் அப்படி எதுவும் இல்லை. இருந்தாலும் என்னுடைய பயோபிக்கில் என் மகன்கள் ஆர்யன் அல்லது ஆப்ராம் நடிப்பது சரியானதாக இருக்கும்' என ஃபீலாகியிருக்கிறார் கிங் கான்!

பிட்ஸ் பிரேக்

•   கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஹர்ஷா போக்லேவை ஐ.பி.எல் கமென்ட்டேட்டர் குழுவில் இருந்து திடீரென கழற்றிவிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. `கிரிக்கெட் வீரர்களும் பி.சி.சி.ஐ நிர்வாகிகளும் தங்களை யாரும் விமர்சிக்கக் கூடாது என நினைக் கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் தோனி, கோஹ்லி, அஷ்வின் உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களும், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் அளவுக்கு மீறி நடந்துகொள்வது. கேள்வி எழுப்புவதும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதும் பத்திரிகை யாளர்களின் வேலை. அதைக்கூட இன்றைய வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன் உச்சம்தான் போக்லேவின் திடீர் நீக்கம்' என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்!

பிட்ஸ் பிரேக்

•   `நான் சினிமாவுக்கு வந்த புதிதில் தற்கொலைக்கு முயன்றதாக ஒருவர் சொன்னதை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பற்றி சொன்னவர், அதற்கு முன் ஜெயிலில் இருந்தவர். அவர் சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும். நான் மிகவும் தைரியமான பெண். நான் எந்தக் கட்டத்திலும் உடைந்துபோனது இல்லை' என முன்னாள் மேனேஜரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

பிட்ஸ் பிரேக்

•   `லிபியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தடுக்கத் தவறியதுதான், அமெரிக்க அதிபராக இருந்து தான் செய்த மிகப் பெரிய தவறு' என மனம் திறந்திருக்கிறார் பராக் ஒபாமா. `2011-ம் ஆண்டு லிபியாவின் அதிபரான கடாஃபி கலவரக்காரர்களால் கொலை செய்யப்பட்ட பிறகு, அங்கு ஏற்பட்ட மோசமான புரட்சியைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டேன். லிபியாவில் பிரிவினைவாதிகள் தோன்றி கலவரங்கள் ஏற்படவும், ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்தவும் இடம்கொடுத்துவிட்டேன். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறி, ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாகக் குடியேறும் சூழல் ஏற்பட்டுவிட்டது' என வருத்தப்பட்டிருக்கிறார் ஒபாமா.

பிட்ஸ் பிரேக்

•   ஃபேஸ்புக்கில் மிகக் குறுகிய நேரத்தில், அதிக லைக்ஸ் வாங்கிய புகைப்படம் என்ற சாதனை படைத்திருக்கிறது ஃபஹத் பாசில் - நஸ்ரியா போட்டோ. `மகேஷின்டே பிரதிகாரம்' ஹிட்டான மகிழ்ச்சியை, மனைவி நஸ்ரியாவுடன் கொண்டாட லண்டன் பறந்தார் ஃபஹத். `லண்டன்' என்கிற கமென்ட்டோடு ஃபஹத்துடனான போட்டோவை நஸ்ரியா ஃபேஸ்புக்கில் போட, 12 மணி நேரத்துக்குள் 2.75 லட்சம் லைக்ஸைத் தொட்டுவிட்டது இந்த போட்டோ!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

•   லேஸ் விளம்பரத்தில் ரன்பீரை ரகளைசெய்யும் பாட்டியைக் கவனித்திருக்கிறீர்களா? பாட்டியின் பெயர் சுப்புலட்சுமி. விளம்பரம், திரைப்படம் என பாட்டி படுபிஸி. `ரன்பீர், ரொம்ப ஸ்வீட் பாய்; ரொம்ப மரியாதையா பேசுவார். `உங்களோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கவா?'னு கேட்டேன். `ஏன், ஒண்ணு மட்டும்தானா?'னு கேட்டு நிறைய போட்டோ எடுத்துக் கொடுத்தார்' எனச் சிரிக்கும் பாட்டிக்கு வயது 81. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் `அம்மணி' படத்தின் ஹீரோயின் இந்தப் பாட்டிதான்!