Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

லக சாதனையை சமன்செய்து சாதனை படைத்திருக்கிறார் 21 வயதான இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி. சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் மொத்த புள்ளிகளான 720 புள்ளிகளில் 686 புள்ளிகள் பெற்று சாதனை படைத்திருக்கிறார் தீபிகா. `ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதில்தான் என் முழுக் கவனமும் இருக்கிறது. இந்தச் சாதனை, எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது’ என்கிறார் தீபிகா.

பிட்ஸ் பிரேக்

ப்படி ஒரு வெற்றியை டிஸ்னியே எதிர்பார்க்கவில்லை. ‘தி ஜங்கிள் புக்' பாக்ஸ் ஆபீஸில் 3,500 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருக்கிறது. உலகம் முழுக்க பல இடங்களில், உள்ளூர் சினிமாக்களைவிடவும் அதிகம் கல்லா கட்டியதுதான் இதற்குக் காரணம்.  இந்தியாவிலும் அதே ட்ரெண்ட்தான். பத்தே நாட்களில் நூறுகோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி, பாலிவுட் பாட்ஷாக்களை பதறவைத்திருக்கிறான் மோக்லி. சூட்டோடு சூடாக அடுத்த பாகத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது டிஸ்னி.

பிட்ஸ் பிரேக்

`இதுதான் கடைசி வாய்ப்பு...  இனி பேசுவதற்கோ, மன்னிப்பதற்கோ எதுவும் இல்லை. பூமியை நாசாமாக்கும் செயல்களை இனி எந்த நிறுவனத்தையும் செய்யவிடக் கூடாது’ என ஆவேசமாகப் பேசியிருக்கிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று ஐநா சபையில் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டது. 175 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கையொப்பமிட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில்தான் லியோனார்டோ இப்படி கோபமாக உரையாற்றினார். நேர்மையான அவருடைய கருத்துக்களுக்கு  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட லைக்ஸ்!

பிட்ஸ் பிரேக்

ஷ்யாவின் கோடீஸ்வரரான யூரி மில்னர், கடந்த வாரம் சிலிக்கான் வேலியில் ‘The man who knew infinity’ என்ற படத்தைத் திரையிட்டார். கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கைப் பற்றிய இந்தப் படத்தைப் பார்க்க, ஃபேஸ்புக் தல மார்க் ஸூக்கர்பெர்க், கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை என டாப் டெக் மனிதர்கள் வந்திருந்தனர். படம் பார்த்த பலரும் கண்ணீரோடுதான் வெளியே வந்தனர். மார்க் ஸூக்கர்பெர்க்கும் சுந்தர் பிச்சையும் ஒரு படிமேலே சென்றுவிட்டார்கள்; இருவரும் இணைந்து கணிதமேதை ராமானுஜன் பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனராம்.

பிட்ஸ் பிரேக்

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்குக்கு இந்தியாவின் தூதுவராக சல்மான் கான் நியமிக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங். `ஒலிம்பிக்கில், விளையாட்டு வீரர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். மாறாக, பாலிவுட் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவமானமாக இருக்கிறது’ எனக் குமுறினார். இதற்கு சல்மான் கானின் தந்தை சலீம் ` `பாஹ் மில்கா பாஹ்' படத்தின் மூலம் பாலிவுட்தான் உங்களை உலகப் பிரபலமாக்கியது’ என ட்வீட் போட, `அந்தப் படத்தின் மூலம் என் வாழ்க்கையில் எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை’ எனக் கடுகடு ரிப்ளை கொடுத்திருக்கிறார் மில்கா சிங்.

பிட்ஸ் பிரேக்

சோஷியல் மீடியாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஸ்டார் ஷான் ஓ பிரையன். 130 கிலோ அமுல்பேபியான ஷான், லண்டனில் ஒரு கிளப்பில் டான்ஸ் ஆடத் தொடங்கினார். செம குண்டு ஆசாமி ஆடுவதைப் பார்த்து அத்தனை பேரும் கேலி பேசிச் சிரிக்க, அவமானத்தில் மூலையில் போய் நின்றுவிட்டார். ஆனால், இவர் ஆட முயன்றதை அங்கு இருந்த ஒருவர் ட்விட்டரில் போஸ்ட் போட, படம் வைரலானது. லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த எழுத்தாளர் கேசண்ட்ரா, `இந்த டான்ஸிங் மேனைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். நாங்கள் அவருக்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்கிறோம்' என ட்வீட் போட்டார். ஷானைக் கண்டுபிடித்து சில ஹாலிவுட் பிரபலங்களையும் அழைத்து பார்ட்டி கொண்டாடிவிட்டார்கள். பார்ட்டியில் செம ஜாலி ஆட்டம்போட்ட ஷான், `ஒரு நடனம் என்னை உலகப் பிரபலமாக்கிவிட்டது' என நெகிழ்ந்திருக்கிறார்.