மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

பீகிள் கடற்பயணம் - சார்லஸ் டார்வின்
வெளியீடு: அகல், 348-ஏ, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14.
விலை:

விகடன் வரவேற்பறை

375  பக்கங்கள்: 600

விகடன் வரவேற்பறை

'கடல் என்பது நீராலான பாலைவனம்தான்’ என்று குறிப்பிடும் சார்லஸ் டார்வினின்  கடற் பயண அனுபவங்களே இந்நூல். ஈக்குவேட்டர் குடியரசுக்கு எதிராகக் கலகம் நடத்தியதால் நாடு கடத்தப்பட்ட கறுப்பினத்தவர்கள் வசிக்கும் சார்லஸ் தீவுகள், செவ்விந்தியர்கள் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடும் கோருண்டா என்ற கிராமம், பூகம்பத்தாலும் கடல் அலைகளாலும் அழிக்கப்பட்ட காலாவோ, சிப்பிகளால் நிறைந்த சான்லோரென்சோ தீவு எனப் புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஆக்ஷன் படத்தின் விறுவிறுப்பைத் தருகின்றன. கடல்புரத்தில் காணப்படும் பூச்சிகள், விலங்குகள், சிப்பிகள் ஆகியவைப் பற்றிய பதிவுகள் பல செய்திகளைச் சொல்கின்றன!

களம் சொல்லும் தளம்!    http://amarx.org/

விகடன் வரவேற்பறை

கட்டுரையாளர் ப்ளஸ் களப்பணியாளர் அ.மார்க்ஸின் இணையதளம். பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், வில்லூர் சாதிக் கலவரம் போன்ற நிகழ்வுகள் குறித்து உண்மை அறியும் குழு மூலமாக அவர் வெளியிட்ட அறிக்கைகள், உள்ளாட்சித் தேர்தல், வாச்சாத்தி தீர்ப்பு, மரண தண்டனை, அண்ணா ஹஜாரே என நாட்டில் நிகழும் சம்பவங்களைப் பற்றி கூர்மையான அரசியல் பார்வையோடு எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்துச் செறிவு மிக்கவை. மார்க்ஸின் குறுவெளியீடுகளை இங்கே தரவிறக்கமும் செய்துகொள்ளலாம்!  

ஹோம் அலோன் சுட்டிகளுக்கு!  www.creativekidsathome.com/  

விகடன் வரவேற்பறை

செல்லக் குழந்தைகளுக்கான உலகின் ஜன்னல். நண்பர்களுக்குத் தங்கள் கைப்படவே பரிசுப் பொருட்கள் தயாரிப்பது எப்படி என்பதில் தொடங்கி, அறிவியல் சார்ந்த படைப்புகள், மற்ற நாடுகளைப் பற்றிய ஃபேன்டஸியான செய்திகள், குழந்தைகளுக்கான உணவுகள் என முழுக்கவே ஜூனியர்களுக்கு இந்தத் தளம் டெடிகேட்!

ஜூன் 12  இயக்கம்: மணிமாறன்  வெளியீடு: கருப்பு வெள்ளை சினி

விகடன் வரவேற்பறை

ஒரு சிறுவனும் சிறுமியும் வேலைக்குக் கிளம்புகிறார்கள். இருவருக்குமே பள்ளிக்கூடத்தில் படிக்க ஆசை. அதற்குப் பணம் வேண்டும். தங்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிக்கு மட்டும் ஏது இவ்வளவு பணம் என்று கேட்கிறான் சிறுவன். சாமி கும்பிட்டால் பணம் கிடைக்கும் என்கிறாள் சிறுமி. கோயில் வாசலில் பிச்சை எடுத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று யோசிப்பவர்கள், என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. குழந்தைகளின் மனநிலை, உரையாடல், அப்பாவித்தனம் ஆகியவற்றை இயல்பு மாறாமல் கொடுத்திருப்பது ரசனை!

ஒஸ்தி  வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

வெஸ்டர்ன் கிளாஸிக் சாயலில் அதிரடிக்கும் 'ஒஸ்தி மாமே’ பாடலுக்கு பாபா சேகல், ரஞ்சித், ராகுல் நம்பியார், நவீன் மாதவ் கூட்டணியின் குரல் தேவையான டெம்போ ஏற்றுகிறது. மெல்லிய அதிர்வுகளுடன் தாளமிடத் தோன்றும் மெட்டு 'உன்னாலே உன்னாலே’ பாடலுக்கு. விறுவிறு சுறுசுறுவெனக் கடப்பது மட்டுமே 'நெடுவாளி’ பாடலின் ஸ்பெஷல். சிலம்பரசன் 'கவிஞர்’ அவதாரம் எடுக்க முயற்சித்து இருக்கிறார் 'வாடி வாடி க்யூட் பொண்டாட்டி’ பாடல் மூலம். எஸ்.எம்.எஸ். வரிகளை வித்தியாசமான மெட்டிலும் குரலிலும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்கள். நீ........ண்ட இடைவெளிக்குப் பிறகு, எல்.ஆர்.ஈஸ்வரி! 'கலாசலா... கலாசலா...’வில் விஜய.டி.ஆருடன் அதிரடித்திருக்கிறார் அம்மணி. அயிட்டம் ஸாங் குத்து இலக்கணத்தை மீறாமல் வெடிக்கிறது பாடல்!