சினிமா
Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

ணையத்தில் காணக்கிடைக்கும் நல்ல குறும்படங்கள் இவை. வித்தியாசமான கதைகள், புதிய முயற்சிகள், அவசியமான அரசியல் என, ஒவ்வொரு குறும்படமும் ஒவ்வொரு ரகம். நேரம் கிடைக்கும்போது மிஸ் பண்ணாம பாருங்க!

`Sunspring’

விகடன் சாய்ஸ்

நினைவிருக்கிறதா... சுஜாதா கதை ஒன்றில் வருகிற கதை எழுதுகிற மெஷின்! இந்த இயந்திரத்தில் நமக்கு வேண்டிய மாதிரி விஷயங்களைச் சொல்லிவிட்டால் போதும். அதற்கு ஏற்றபடி சஸ்பென்ஸ், ஹாரர், சோகம் என இயந்திரமே கதையை எழுதிக்கொடுத்துவிடும். அப்படி நிஜமாகவே ஓர் இயந்திரம் இருந்தால் எப்படி இருக்கும்? அதன் உதவியோடு திரைக்கதை ஒன்றை உருவாக்கி, அதைக் குறும்படமாக எடுத்திருக்கிறது ARS Technica videos டீம். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அல்காரிதம் மென்பொருளில் வெற்றிபெற்ற பல நூறு திரைப்படங்களின் திரைக்கதைகளை ஏற்றியுள்ளனர். அதற்குப் பிறகு அந்த மென்பொருளையே ஒரு சயின்ஸ்ஃபிக்‌ஷன் குறும்படத்துக்கான கதையை உருவாக்க உத்தரவிட்டுள்ளனர். அப்படி தானாகவே உருவான கதையை குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். https://goo.gl/bvnt9c

`களைவு’

விகடன் சாய்ஸ்

பல திரைப்படங்களின் வில்லனான ஹரிஷ் உத்தமன், ஹீரோவாக நடித்திருக்கிற குறும்படம் இது. கௌதம் மேனன் அசிஸ்டன்ட் இயக்கியிருப்பாரோ என நினைக்கவைக்கிற அளவுக்கு அப்படி ஒரு தங்கிலீஸ் ஸ்கிரிப்ட். வீட்டில் ஃபிக்ஸ் பண்ணின மாப்பிள்ளையை முதன்முறையாகச் சந்தித்து `இந்தத் திருமணம் வேண்டாம்’ எனச் சொல்லவருகிறாள் மணப்பெண். ஆனால், தவறுதலாக உருவ ஒற்றுமையால் இன்னொருவரைச் சந்திக்கிறாள். கதையின் இறுதியில் அந்த இன்னொருவன் மீது அவளுக்கு ஈர்ப்புவருகிறது. சிம்பிள் ஆள்மாறாட்ட ஸ்கிரிப்ட்டை மிக அழகாகவும் க்யூட்டாகவும் எடுத்திருக்கிறார் ஸ்டான்ஸின் ரகு. https://goo.gl/mSVL9j

`பொண்டாட்டிஸ் R us’

விகடன் சாய்ஸ்

அமெரிக்காவில் வாழும் தமிழர் ஒருவரால் அமெரிக்காவிலேயே எடுக்கப்பட்ட குறும்படம். தன் வீட்டு வேலைகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன ஒரு குடும்பத் தலைவி. எதிர்பாராமல் தன் கல்லூரி தோழியைச் சந்திக்கிறாள். தோழி இப்போது க்ளோனிங் விஞ்ஞானி. குடும்பத்தலைவியின் இன்னல்களுக்கு க்ளோனிங்கில் ஒரு தீர்வுசொல்ல அது விபரீதமாக முடிகிறது. சிம்பிளான சயின்ஸ் கதைதான் என்றாலும், அதைச் சிரிக்கச் சிரிக்க ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்கள். இறுதியில் கணவர்களுக்குக் கருத்தும் சொல்லப்படுகிறது! 
https://goo.gl/wZf172

`இந்தியா டுமாரோ’

விகடன் சாய்ஸ்

ஒரு பாலியல் தொழிலாளியுடன் இரவைக் கழிக்கும்போது நாயகனுக்கு போன் வருகிறது. எடுத்துப் பேச `ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய சரிவு’ எனத் தகவல். நாயகனின் ஸ்டாக்குகள் விலை குறைந்து பெரிய நஷ்டம். அவன் போனில் கதற, பின்னணியில் அந்த விபச்சாரப் பெண் ஸ்டாக் மார்க்கெட் குறித்து தகவல்கள் சொல்ல ஆரம்பிக்கிறாள். பங்குகள் ஏன் சரிந்தன, இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுகிறாள்... நாயகன் `யார் இவள்?' எனக் குழம்பிப்போகிறான். அந்தக் குழப்பத்துக்கான விடைதான் இந்த `INDIA TOMORROW’ என்ற குறும்படம். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கியிருக்கிற இந்தக் குறும்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். பாலியல் தொழிலாளிகள் குறித்த பார்வையை மாற்றக்கூடிய நல்ல குறும்படம். https://goo.gl/gYwuQz

`தி புக்‌ஷெல்ஃப்’

விகடன் சாய்ஸ்

எந்நேரமும் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிபடும் ஒரு காலகட்டம் இது. மதங்களின் பெயரால் அடிப்படைவாதிகளால் நூல்களில் தொடங்கி சினிமா வரை வெவ்வேறுவிதமான தொடர் நெருக்குதல்களுக்கு படைப்பாளிகள் ஆளாகிறார்கள். இந்த விஷயத்தைப் பற்றி அழகாகப் பேசுகிறது `தி புக்‌ஷெல்ஃப்' என்ற குறும்படம். வசனங்கள் எதுவும் இல்லாமல் ஒரே ஒரு புத்தக அலமாரியை மட்டும் வைத்துக்கொண்டு, மிக நேர்த்தியாக இந்தக் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்றரை நிமிடங்களே ஓடுகிற மிகச் சிறிய படம். ஆனால், இது பேசுகிற அரசியல் மிக முக்கியமானது. காலச்சுவடு பதிப்பகம் இதைத் தயாரித்துள்ளது! https://goo.gl/4T9XqJ

`தவிடுபொடி ஜீவிதம்’

விகடன் சாய்ஸ்

`உன்னைத் தவிட்டுக்குத்தான் வாங்கினோம்' என்ற வசனத்தை, குழந்தைகள் எல்லோருமே ஏதோ ஒரு கட்டத்தில் வீட்டில் சொல்லக் கேட்டிருப்போம். இதுதான் இந்த மலையாளக் குறும்படத்தின் ஒன்லைன். யூடியூபில் வெளியான ஒரே வாரத்தில் ஒரு லட்சம் ஹிட்ஸ் தாண்டிய சூப்பர் ஹிட் படம் இது. 90-களின் குழந்தைகள் அவர்களுடைய க்யூட்டான உலகம், குட்டி நண்பர்களின் ஜாலியான சண்டைகள் என நாஸ்டால்ஜிக்கான நல்ல படம். https://goo.gl/fWrf0J