சினிமா
Published:Updated:

“தக்காளியையும் பீட்ரூட்டையும் சேர்த்தா புது சட்னி!”

“தக்காளியையும் பீட்ரூட்டையும் சேர்த்தா புது சட்னி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தக்காளியையும் பீட்ரூட்டையும் சேர்த்தா புது சட்னி!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“தக்காளியையும் பீட்ரூட்டையும் சேர்த்தா புது சட்னி!”

“வாராவாரம் நாலு பேர்கிட்ட வம்பு இழுப்பீங்க. இந்த வாரம் நான் சிக்கிட்டேனா?” - உற்சாகமாகிறார் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்.

“ஏ டு இசட் என்ன வேணும்னாலும் கேளுங்க. ஆனா, ‘கபாலி’ படத்தைப் பற்றியோ, என் கேரக்டர் பற்றியோ மட்டும் கேட்டுராதீங்க ப்ளீஸ்...” - தயாராகிறார் நடிகை ரித்விகா.

“வாராவாரம் இந்தப் பகுதியைப் படிச்சிடுவேன். சிலர் சொல்ற பதிலைக் கேட்கும்போதே செம காமெடியா இருக்கும். கலக்கிடலாம்ஜி... கேளுங்க” - ஸ்போர்ட்டிவாகக் களம் இறங்குகிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

“ஃப்ரெண்ட் கல்யாணத்துக்குப் போயிட்டு, இப்பத்தான் வர்றேன். அங்கே செம ரகளை... திரும்பவுமா? -  கலகலப்பாகிறார் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ரியோ.

“ `கபாலி’ டீஸரில் ரஜினி எத்தனை வருடங்களுக்குப் பிறகுத் திரும்பிவருவதாகச் சொல்வார்?”

விடை : 25 வருடங்கள்.

லஷ்மி சரவணகுமார்
: “கேள்வி சிறப்பு. 25 வருஷம். இதுவரை 150 முறை ‘கபாலி’ டீஸரைப் பார்த்திருப்பேன். நான் ரஜினி ரசிகனா சொல்லலை, அந்த கேரக்டருக்கு அவர் செஞ்சிருக்கிற நியாயம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”

ரித்விகா: கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு... “20 வருஷம் கழிச்சி வருவார்” என்று சொன்னவரிடம், ‘இன்னும் கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுங்க’ என்றதும் “அய்யோ... ஸாரிங்க. `25 வருஷம் கழிச்சு வருவேன்'னு சொல்வார். தயவுசெய்து நான் முதல்ல தப்பா சொன்னேன்னு எழுதிடாதீங்க பிரதர். ஐ அம் பாவம்'' எனச் சிரிக்கிறார்.

“தக்காளியையும் பீட்ரூட்டையும் சேர்த்தா புது சட்னி!”

ஜஸ்டின் பிரபாகரன்: “முதல் கேள்வியே இவ்வளவு ஈஸியா இருக்கே... செம ஜாலி. `25 வருஷம் கழிச்சு வந்திருக்கேன்'னு சொல்வார். நல்லவேளை ரஜினி சார், நான் முட்டை மார்க் வாங்காம காப்பாத்திட்டார். சூப்பர் ஸ்டாருக்கு தேங்க்ஸ்.”

ரியோ: “காலை, மதியம் நைட்டுனு மூணு வேலை சாப்பிடுறது மாதிரி. ‘கபாலி’ டீஸர், ட்ரெய்லர் வந்ததில் இருந்து மூணு வேளையும் ரிப்பீட் மோட்ல போடுகிறதுதான் என் முக்கியமான வேலையே. ஒரு சூரியன், ஒரு சந்திரன்போல... எங்களுக்கு ஒரே தலைவர்தான். எங்ககிட்டயேவா?” என்றவர், ரஜினி வாய்ஸில் “நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு,
25 வருஷத்துக்கு முன்னாடி எப்படிப் போனாரோ... அப்படியே வந்துட்டேன்னு சொல்லு” என மிமிக்ரியில் அசத்துகிறார்.

“ஓர் அரசியல் கட்சி தொடங்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய எத்தனை பேர் தேவை?”

விடை: தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு கட்சியைப் பதிவுசெய்ய 100 உறுப்பினர்களும், அவர்களுள் 20 நிர்வாகிகளும் இருந்தால் போதும்.

லஷ்மி சரவணகுமார்
: “ஏங்க... முதல் கேள்விக்கும் ரெண்டாவது கேள்விக்கும் என்னங்க இப்படி ஒரு வித்தியாசம். கட்சித் தலைவர்களுக்கே இதெல்லாம் தெரியுமானு தெரியலை. `ஓர் அமைப்பையோ, இயக்கத்தையோ உருவாக்க ஏழு பேர் தேவை’னு சொல்வாங்க. ஆனா, அரசியலுக்கு எத்தனை பேர் தேவைனு தெரியலை. என்கிட்ட 21-பி எந்த ரூட்ல போகும்னு கேட்டா, சரியா சொல்வேன். இதெல்லாம் எப்படிங்க?”

ரித்விகா
: சந்தேகமாக “ஏங்க... நீங்க உண்மையாவே விகடன் ரிப்போர்ட்டர்தானா? ஜி.கே கொஸ்டீன்னு கலாய்க்கிறீங்களா? சரி. குத்துமதிப்பா 70 பேர் தேவைனு வெச்சுக்கோங்களேன்.”

ஜஸ்டின் பிரபாகரன்: “கட்சித் தலைவர் ஒருவர். தொண்டர் ஒருவர். மொத்தம் ரெண்டு பேர் இருந்தாவே போதும். ஆனா, அந்தக் கட்சி நல்லது மட்டுமே செஞ்சாங்கனா நாலு கோடி, அஞ்சு கோடினு வேகமா தொண்டர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கிடலாம்.”

“தக்காளியையும் பீட்ரூட்டையும் சேர்த்தா புது சட்னி!”

ரியோ: “ஒரு கட்சி தொடங்க `தலைவர்'னு ஒருத்தர் நிச்சயமா தேவை. அவருக்கு அடுத்து பொருளாளர், செயலாளர், தொண்டர்னு நிறையப் பேர் தேவை. அப்படி இப்படினு கணக்கு போட்டால் அஞ்சு பேர் இருந்தா போதும் பிரதர்... சரியா?”

“கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி விலை எவ்வளவு ரூபாய் வரை விலை கூடியது?”

விடை: 120 ரூபாய்.

லஷ்மி சரவணகுமார்: “சூப்பர் தலைவா... 120 ரூபாய் வரைக்கும் தக்காளி விலை அதிகமாச்சு. எங்க வீட்டுல நான்தான் சமைக்கிறேன். நான்தான் கடைக்குப் போய் எல்லாம் வாங்கிட்டு வர்றேன். எனக்கு பதில் தெரியாம இருக்குமா? நாங்க எல்லாம் தக்காளிச் சட்னியை ரெண்டு வேளை சாப்பிடுறவங்க. தக்காளிக்குத் தட்டுப்பாடு வரும்போது, தக்காளிச் சட்னிக்கு மாற்று ஒண்ணைக் கண்டுபிடிச்சுவெச்சிருக்கேன். அரை தக்காளிகூட, பீட்ரூட் சேர்த்து பீஸ் பீஸா வெட்டிக்கணும். அடுத்து அதுகூட வெங்காயம் சேர்த்து மிக்ஸியில போட்டு அடிச்சா ஒரு டைப்பான சட்னி கிடைக்கும். சூப்பரா இருக்கும். இது நான் கண்டுபிடிச்ச புதுவகை சட்னி. பேட்டன் ரைட்ஸ் எனக்குத்தான். சொல்லிப்புட்டேன்.”

“தக்காளியையும் பீட்ரூட்டையும் சேர்த்தா புது சட்னி!”

ரித்விகா: “மீம்ஸ்லதான் இந்த நியூஸ் படிச்சேன். ஒரு பக்கம் தக்காளி விலை அதிகமானதால் விவசாயிகள் மகிழ்ச்சினு ஒண்ணு, தக்காளி விலை அதிகமானதால் மக்கள் அவதினு இன்னொண்ணு. நான் மார்க்கெட் பக்கம், சமையல் அறை பக்கம் எல்லாம் போறதே இல்லை. டைமும் கிடைக்கிறது இல்லை. ஆனா, எனக்கு தக்காளி பிடிக்கும்.”

ஜஸ்டின் பிரபாகரன்: “யாராவது சமைச்சு கொடுத்தாங்கனா, நல்லா சாப்பிடுவேன். மார்க்கெட் பக்கம் எல்லாம் எட்டிப்பார்த்தே அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகுது. ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்ல இருந்து 45 ரூபாய் வரை இருக்கலாம்.”

ரியோ: “நான் டெய்லியும் ஹோட்டல்லதான் சாப்பிடுறேன். பரோட்டா சாப்பிடும்போது குருமா ஊத்துறாங்களானு கவனிப்பேனே தவிர, குருமாக்குள்ள தக்காளி இருக்கானு பார்க்கலையே பிரதர். இந்தத் தக்காளி மேட்டர் என் சாப்பாட்டுல பாதிச்சு, என் சாப்பாட்டு விலை அதிகமாகியிருந்தா, ஒருவேளை பதில் தெரிஞ்சிருக்கும்” என்றவரிடம் பதிலைச் சொன்னால் ஷாக் ஆகிறார்... “அடப்போங்க பாஸ். நான் 120 ரூபாய்க்குத்தான் மூணு வேளையும் சாப்பிடுறேன்.”

“ `மோடியிடம் யாராவது டீ வாங்கிக் குடித்திருந்தால், அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு’ என அறிவித்தவர் யார்?”

விடை: திக்விஜய் சிங் - காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்.

லஷ்மி சரவணகுமார்: “இதுக்குத்தான் உலக அறிவை கொஞ்சமாவது வளர்த்துக்கணும்னு சொல்றது. நியூஸ் பேப்பர் எல்லாம் பார்க்கலையேங்க. நான் சாதாரண சமூகத்துல ஒருவனா இருக்கேன். என்னை மாதிரி இருக்கிற ஆளுங்க யாருக்குமே இந்தக் கேள்விக்கு பதில் தெரியாது.”

ரித்விகா: “எனக்குப் பிடிச்சது காபிதான். அதுவும் வாரத்துக்கு ஒண்ணுதான் குடிக்கிறேன். மற்ற நேரங்கள்ல எல்லாம் ஜூஸ்தான். ஆப்பிள், ஆரஞ்சுனு கிடைச்சதைச் சாப்பிடுவேன்” என்றவரை நிறுத்தி, கேள்வியை மீண்டும் கேட்டால், “ஏங்க, நீங்க மட்டும் எங்களைக் கலாய்க்கலாம்... நாங்க உங்களைக் கலாய்க்கக் கூடாதா?” எனச் சிரித்தவர், “மோடி டீக்கடை நடத்தினார். இப்ப நம்ம பி.எம்.  இதைத் தாண்டி எதுவுமே தெரியாதுங்களே.”

ஜஸ்டின் பிரபாகரன்:
“அய்யோ... என்னங்க சினிமாவுல இருந்து ஜம்ப் பண்ணி அப்படியே பொலிடிக்கல் ஏரியாவுக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்க. எனக்குத் தெரிஞ்ச அரசியல் தலைவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த்தான். இவர்களில் யாராவது ரெண்டு லட்சம் ரூபாய் பரிசு தரப்போறாங்களா?”

ரியோ: “அரசியலில் எனக்கு ஏ,பி,சி,டி,இ-கூடத் தெரியாது. ஏகப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதால் யாரு பேரையும் சரியா ஞாபகம் வெச்சுக்க முடியலைனு அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கிறது இல்லை. இந்தக் கேள்விக்கு பதில் தெரியும்னு சொன்னால், நம்பவாபோறீங்க? நாம எல்லாம் டீக்கடையில டீ குடிப்பதோடு சரி. அதைத் தாண்டிப் பேசுறதும் கிடையாது; பார்க்கிறதும் கிடையாது பிரதர்.”