Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ஆஸ்பத்திரி-1

மிஸ்டர் மியாவ்

அமெரிக்காவில் சிகாகோ நகரிலுள்ள கூக்ஸ் கவுண்டி ஆஸ்பத்திரியில் ஜூன் 20-ம்தேதி அட்மிட் ஆனார் ரஜினி. அவர், தனது உடலில் முக்கியமான பரிசோதனைகளைச் செய்தபின், அங்கேயே தங்கி சிகிச்சைகள் பெற்றார். ரஜினியை ஓய்வெடுக்கச் சொல்லி அமெரிக்க டாக்டர்கள் ஆலோசனை கூறி அனுப்பினர். அதையும் மீறி, ‘கபாலி’யை சோ பார்க்க விரும்பியதால் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவியூ ஷோவில் ரஜினியும் கலந்துகொண்டு முழுப் படத்தையும் பார்த்தார்.

ஆஸ்பத்திரி-2

மிஸ்டர் மியாவ்

ஒரு பக்கம் முத்துராமனின் சொத்து தொடர்பாக கார்த்திக், அவரது அண்ணன் கணேஷ் இடையே முட்டல்மோதல். இன்னொரு பக்கம் கால் மூட்டு தேய்ந்து வலியால் அவதிப்பட்டார் கார்த்திக். சில வாரங்களுக்கு முன்பு ஆயிரம்விளக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் மூட்டில் ஆபரேஷன் செய்துகொண்டு சென்னை வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். சொத்து தொடர்பாகக் குடும்ப உறுப்பினர்கள் பிரச்னை கிளப்ப, தற்போது பெங்களூரு சென்று ஓய்வெடுத்து வருகிறார் கார்த்திக்.

ஆஸ்பத்திரி-3

மிஸ்டர் மியாவ்

கமல், சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை வீட்டு மாடியில் கால் இடறி விழுந்தார். மூட்டு எலும்பு முறிந்ததால் ஆபரேஷன் நடந்தது. அதன்பின் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் ஆபரேஷன் செய்தனர். தனது வீட்டில் இருந்து கமலைப் பார்க்கப் புறப்பட்ட ரஜினியை, அவரது டாக்டர்கள் தடை போட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரி-4

மிஸ்டர் மியாவ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு அவசரமாக அப்போலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் சரத்குமார். அவர், மதுரையில் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சியை ரத்து செய்தார். வயிற்றுக்கோளாறு என்று சொன்னார்கள். விஜயகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அதே ஆஸ்பத்திரியில், சரத்குமாரும் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டது பரமரகசியம்.

மிஸ்டர் மியாவ்

‘கபாலி’ குறித்து வைரமுத்து பேசியது சரியா?

வைரமுத்து மகன் மதன்கார்க்கி மணவிழாவில், ‘‘என்னோட பேங்க் பேலன்ஸ் என்னான்னு என் மனைவி லதாவுக்குக்கூடத் தெரியாது. ஆனா, வைரமுத்துவுக்கு கரெக்ட்டா தெரியும். அந்த அளவுக்கு அவர் எனக்கு நெருக்கம்’’ என்று ரஜினி பேசினார். வைரமுத்து வேண்டுமெனப் பேசியதாக ரஜினி நினைக்கவில்லை.   

நிறைய புதுமுக நடிகர்கள் முதல் படத்திலேயே காணாமல் போகிறார்களே?

தன் மகன் நடிக்க ஆசைப்படுகிறானே என்று ஒரு படத்தைத் தயாரிப்பதும், அது தோல்வி அடைந்த பிறகு ஊருக்கு மூட்டை கட்டுவதும்தான் சமீபகாலமாக கோடம்பாக்கத்தில் நடந்துவரும் சங்கதி.

‘கலைச்சேவை செய்கிறேன்’ என்று சொல்லும் சில நடிகர்கள் பற்றி?

‘‘நான் ஒண்ணும் கலைச்சேவை செய்யறதுக்காக சினிமாவுக்கு வரலை. காசு, பணம், கார், பங்களா சம்பாதிக்கத்தான் நடிக்க வந்திருக்கேன்’’ என்று பொட்டில் அடித்தாற்போல் பேட்டியே கொடுத்து இருக்கிறார் அஜித்குமார்.