Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ஏறுமுகம் கீர்த்தி!

மிஸ்டர் மியாவ்

முதன்முதலில் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்த ராசியோ, என்னவோ கீர்த்தி சுரேஷ் காட்டில் சிரபுஞ்சி ரேஞ்சுக்கு அடைமழை. ‘ரஜினி முருகன்’ வெற்றியால் ராசிக்கார நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு விஜய் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அடுத்து, சூர்யா நடிக்கும் படத்துக்கு இன்னும் இயக்குநரே முடிவு செய்யப்படவில்லை. அதற்குள், ஹீரோயின் வேடத்துக்கு கீர்த்தியை டிக் செய்து இருக்கிறார் சூர்யா.

இறங்குமுகம் தமன்னா!

மிஸ்டர் மியாவ்

விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடினார் தமன்னா. இப்போது தெலுங்கில் தமன்னா மார்க்கெட் இறங்குமுகம். ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் தமன்னாவுக்கு சின்ன வேடம். முன்னணி ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்கிற விரதத்துக்கு விடுமுறை விட்டுவிட்டு விஷாலுடன், ‘கத்திச்சண்டை’ படத்திலும், விஜய் சேதுபதியுடன் ‘தர்மதுரை’ படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

நன்றியுள்ள அனுஷ்கா!

மிஸ்டர் மியாவ்

ஜித்தின் 57-வது படத்தில் இருந்து அனுஷ்கா விலகல் ஏன் என்பது குறித்து ஆந்திராவில் விசாரித்தோம். அனுஷ்காவை சினிமாவில் அறிமுகம் செய்ததே நாகார்ஜுனாதான். ராகவேந்திரா இயக்கத்தில் நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் பெருமாள் பக்தை வேடத்தில் நடிக்கிறார். இதற்காக திருப்பதி கோயிலை அப்படியே ஜெராக்ஸ் செய்ததுபோல் செட் போட்டு இருக்கிறார்கள். இந்தப் பட தேதியில் அஜித் படத்துக்கு கால்ஷீட் கேட்டதால் நோ சொல்லிவிட்டார் அனுஷ்கா.

பாங்காக்கில் திரிஷா!

மிஸ்டர் மியாவ்

மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் ‘மோகினி’ படத்தைத் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் எடுக்கிறார்கள். பேய் வேடத்தில் நடிக்கும் திரிஷாவுக்கு என்று முக்கியமான மூன்று சண்டைக் காட்சிகளை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

‘வியட்நாம் வீடு’ சுந்தரம், ஜோதிலட்சுமி, பஞ்சு அருணாசலம் இவர்களின் நினைவுகள் பற்றி?

மிஸ்டர் மியாவ்

‘வியட்நாம் வீடு’ படத்தில்,  பிரஸ்டீஜ் பத்மநாபன், ‘கெளரவம்’ படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்று சிவாஜியின் கதாபாத்திரங்களை கண்முன்னே நிறுத்தியவர் சுந்தரம்.

மிஸ்டர் மியாவ்

தனக்குப் புற்றுநோய் இருப்பதை மறைத்துக்கொண்டும், சிரித்தும்கொண்டும் இறக்கப்போகும் கடைசி நாள்வரை கேமரா வெளிச்சத்தில் வாழ்ந்தவர் ஜோதிலட்சுமி.

மிஸ்டர் மியாவ்

ரஜினி, கமல் என்கிற இரு துருவங்களைத் தனது திரைக்கதை வசனம் மூலம் பட்டித்தொட்டி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர் பஞ்சு அருணாசலம். ‘அன்னக்கிளி’ படத்தின் தயாரிப்பாளராக இருந்து, இளையராஜாவின் வாழ்வில் விளக்கேற்றியவர்.