
தல - தளபதி பிட்ஸ்


2010-ம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்டு வந்த அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை இனி பயன்படுத்த வேண்டாம் என அஜீத்குமார் அறிவித்தார். ஆனாலும் ரசிகர்கள் மனதில் என்றுமே இவர் ‘தல’ தான்.
தமிழகம் முழுவதும் இருந்த முப்பத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக 2011-ம் ஆண்டு அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் அஜீத்.
அஜீத் தமிழ்ப் படங்கள் தவிர்த்து இந்திப் படங்களான ‘அசோகா’ மற்றும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ போன்ற படங்களில் நடித் துள்ளார். ‘அசோகா’வில் வில்லனாகவும், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெளரவத் தோற்றத்திலும் நடித்தார்.

விஜய்க்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து அதற்குத் தலைவராகவும் இருந்த அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் ‘இளைய தளபதி’ பட்டத்தை முதன்முதலில் பயன்படுத்தினார். ரசிகர்கள் அவ்வாறு அழைப்பதால்தான் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியதாகவும் கூறினார்.
தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சுக்ரன்’ மற்றும் ‘பந்தயம்’ படங்களில் கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் விஜய். நட்புக்காகப் பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவான ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் தோன்றி நடனமாடியுள்ளார்.
இதுவரை 21 அறிமுக இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்துள்ள விஜய், 15 இசையமைப்பாளர்களின் இசையில் பாடி அசத்தியுள்ளார்.
-கருப்பு