
மாத்தி பேசுங்ணா!
அஜீத் பட டயலாக்கை விஜய் பேசுனா எப்படி எப்படி?... இப்படி! !இப்படி...!
பில்லா:
‘நாம வாழணும்னா, யாரை வேணா எத்தனைப் பேரை வேணா கொல்லலாம்னு இன்னைக்கு நாம முடிவு பண்ணிட்டோம்னா நாளைக்கே அவனும் அதே மாதிரி முடிவு பண்ணிடுவான். ஏன்னா வாழ்க்கை ஒரு வட்டம்டா.’

திருப்பதி:
‘இந்த திருப்பதி பால்பாக்கெட் வாங்கவும் நியூஸ் பேப்பர் வாங்கவும், ரீசார்ஜ் பண்ணவும் கீழே ‘இறங்கி’ப்போறவன்டா. ஆனா, துணிகாயப் போடவும், டிஷ் ஆன்டெனா மாட்டவும், காயப்போட்ட வடகம், வற்றலை எடுக்கவும் மொட்டை மாடிக்கு ‘ஏறி’ப்போறவன் டா.’
வீரம்:
‘என்னை நீ சூறாவளினு நினைச்சினா நான் சுனாமி, திருக்கை மீனுனு நினைச்சினா நான் திமிங்கலம், பெரியாறுனு நினைச்சினா நான் காட்டாறு. மொத்தத்துல நீ நினைக்கிறதுக்குள்ளே நான் இருக்க மாட்டேன். நான் எதுல இருக்கிறேங்கிறதை நீ நினைச்சுருக்க மாட்ட.’

வேதாளம்:
‘போகட்டும் சார் விடுங்க. பார்க்குக்குப் போகட்டும், பீச்சுக்குப் போகட்டும், படத்துக்குப் போகட்டும். எல்லாரையும் லவ் புரபோஸ் பண்ண விடுங்க. லவ்வைச் சொல்ல வெட்கப்படுறவங்க வாழவே வெக்கப்படுறாங்கனு சொல்வாங்க சார்.’
-ஜெ.வி.பிரவீன்குமார்