உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

அங்கேயும் அடிச்சுக்கிறாங்க!

அங்கேயும் அடிச்சுக்கிறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
அங்கேயும் அடிச்சுக்கிறாங்க!

அங்கேயும் அடிச்சுக்கிறாங்க!

கோலிவுட்டில் தல-தளபதி போட்டி நிலவுவது போல் இந்தியில் சல்மான் கான், ஷாரூக் கான் இடையே பெரும் போட்டி இருப்பது பலரும் அறிந்ததே! அதே போல மற்ற திரையுலகங்களில் எந்தெந்த நடிகர்களின் ரசிகர்கள் இடையே போட்டி இருக்கிறது என்று பார்க்கலாமா?

அங்கேயும் அடிச்சுக்கிறாங்க!

சாண்டல்வுட்டில் மெகா பவர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் ரசிகர்களுக்கும், சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷன் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுகளுக்குப் பஞ்சமே இல்லை. இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் கர்நாடகம் கதி கலங்குகிறது.

அங்கேயும் அடிச்சுக்கிறாங்க!

சனைவெறி ஊறிப்போன தெலுங்கு தேசத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ரசிகர்கள் இடையேதான் சோஷியல் மீடியாவிலும் திரையரங்குகளிலும் அடிக்கடி முட்டிக்கொள்கிறது. நீ அடிச்சா பீஸ். நான் அடிச்சா மாஸ்டான்னு பன்ச் வசனங்களில் பொறி பறப்பதன் காரணம் இதுதான்.

அங்கேயும் அடிச்சுக்கிறாங்க!

போஜ்பூரி சினிமாவிலும் ரசிகர்களின் அலப்பரைகளுக்குப் பஞ்சமேயில்லை. ரவி கிஷன் ஒரு பக்கம் கெத்து காட்டினால், இன்னொரு பக்கம் மனோஜ் திவாரி ஆக்ரோஷம் காட்டுகிறார். சினிமா மட்டுமின்றி தற்போது அரசியல் களத்திலும் இவர்களது போட்டி தொடர்கிறது.

-கருப்பு