உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

இவர்கள் தெக்கத்தி சினிமாவின் சூப்பர் அட்ராக்‌ஷன்கள்!

அக்கட தேசத்து அழகிகள்!

மல்லுவுட் ரச்சனா நாராயணன்குட்டி:

திருச்சூர் பேரழகி. நாராயணன் குட்டி- நாராயணி தம்பதிக்கு மகளாகப் பிறந்ததால் ‘நாராயணன்’ என்ற பெயரை டைட்டிலில் அவசியம் வைக்கச் சொல்கிறார். கடைக்குட்டி என்பதால் செம செல்லம். நடனம் பயின்றதால் டி.வி நிகழ்ச்சிகளில், ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டியவர் 2001-ல் ‘தீர்த்தாடனம்’ என்ற எம்.டி. வாசுதேவன் நாயரின் படத்தில் சுஹாசினியின் சின்னவயசுத் தோழி பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். காமெடி ஷோ, சில பல விளம்பரங்கள் என பிஸியாக இருந்தவருக்கு ‘லக்கி ஸ்டார்’, ‘ஆமென்’, ‘புன்யாலன் அகர்பத்தீஸ்’, ‘யூ டூ ப்ரூட்டஸ்’, ‘திங்கள் முதல் வெள்ளி வரை’, ‘காந்தாரி’, ‘டபுள் பேரல்’ , ‘லைஃப் ஆஃப் ஜோஸூட்டி’, ‘புதிய நியமம்’ என எக்கச்சக்க கேரக்டர் ரோல் வாய்ப்புகள். ‘லக்கி ஸ்டார்’ படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக கலக்கிய ரச்சனா திருமணத்தின் பின் இடைவெளிவிட்டு, டைவர்ஸுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். பார்க்கலாம்!

அக்கட தேசத்து அழகிகள்!

சாண்டல்வுட் ஸ்வரூபிணி:

வாட்ஸ்-அப் மூலம் வாழ்வு பெற்றவர். கோலார் தங்கவயலில் ஸ்கூல் முடித்து காலேஜுக்கு தயாராகிக்கொண்டிருந்தவர் தோழி ஒருத்தியின் படத்தை தன் நம்பரில் இருந்து ஒரு ஃபேஷன்  கோ ஆர்டினேட்டருக்கு வாட்ஸ்-அப் செய்யப்போக அடித்தது லக்கி ப்ரைஸ். இவரது புரொஃபைல் படத்தைப் பார்த்து கால் பண்ணிப் பேசி பி.வாசுவிடம் நடிக்க ஆடிஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த கோ ஆர்டினேட்டர். அந்தப் படம்தான் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தெறி ஹிட் அடித்த ‘த்ருஷ்யம்’. அதில் ஹீரோ ரவிச்சந்திரனுக்கு மூத்த மகள் ரோல். படம் தந்த அதிரிபுதிரி ஹிட்டால் இப்போது ஹீரோயின் ரோல்கள் சாண்டல்வுட்டில் வரிசை கட்டி நிற்கின்றன ஸ்வரூபிணிக்கு. செம ஸ்வரூ!

அக்கட தேசத்து அழகிகள்!

டோலிவுட் சுஷ்மா ராஜ்:

பெங்களூருவில் செட்டில் ஆன ஆந்திர பங்கனப்பள்ளி. படித்ததும் பிடித்ததும் ஃபேஷன், ஃபேஷன், ஃபேஷன் மட்டுமே. கன்னட சினிமாவில் ‘மடராங்கி’ என்ற படத்தின் மூலம் அறிமுகம். அடாவடிப் பெண் ரோலில் கலக்கி எடுத்திருந்ததால் செம வரவேற்பு. 2014-ல் ‘மாயா’ என்ற தெலுங்குப் படம் வாய்ப்புக் கிடைத்தது. லோ பட்ஜெட்டிலும் படம் சூப்பர் ஹிட் அடித்து ஆந்திராவிலும் ஆதர்சம் ஆகிவிட்டார். ‘ஜோரு’, ‘நாயகி’, ‘ஏடு கோல்டு யேஹி’ என வரிசையாக தெலுங்கில் கால்ஷீட் பிஸி என்றாலும் நடுவில் விஜய் ஆன்டனியோடு ‘இந்தியா பாகிஸ்தான்’ காமெடியில் கலக்க இப்போது தமிழிலும் வாய்ப்புகள் குவிகிறது அம்மணிக்கு!

-ஆர்.சரண்