உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமால்

சினிமால்

சினிமால்

    ‘சிங்கம் 3’ படத்தைத் தொடர்ந்து அடுத்து முத்தையா இயக்கும் கிராமத்துக் கதையில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம் சூர்யா. இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கப் பேசி வருகிறார்களாம். குறுகியகாலத் தயாரிப்பாக மீடியம் பட்ஜெட்டில் தயாராகிறதாம் படம். அம்மா, மாமனார், பாட்டி சென்டி மென்டில் படங்களை இயக்கிய முத்தையா இந்தப் படத்தில் அப்பா சென்டிமென்டை வைத்துப் படத்தை இயக்குகிறாராம். நாங்க மாற மாட்டோம்!

சினிமால்

    ‘புலி’ படத்தில் படுதோல்வியைச் சந்தித்தாலும் அடுத்தடுத்து பெரிய படங்களாகவே தயாரித்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறார் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ். கேரளாவில் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பதால் தமிழுக்கு வந்து மெகா படங்களாக எடுத்து வருகிறார்.
‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்க ‘சாமி பார்ட் 2’ படத்தைத் தயாரிக்கும் சிபு, அடுத்து விஷால் நடிக்கும் ஒரு படத்தையும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறாராம். நீங்க கலக்குங்க சிபு!

சினிமால்
சினிமால்

‘சிவப்பு’ படத்தை இயக்கிய சத்யசிவா, ராணா டகுபதியை வைத்து இயக்க இருந்த படம் ‘பாகுபலி’யால் தள்ளிக்கொண்டே போனது. விரக்தியில் இருந்த இயக்குநரை அழைத்த ராணா அக்டோபரில் ஷூட்டிங் போகலாம், வேலையை ஆரம்பியுங்கள் எனக் கூறிவிட்டாராம். 1945-ம் காலகட்டத்தில் நடக்கும் கதையாம். தமிழில் ‘மடை திறந்து’ எனவும், தெலுங்கில் ‘1945’ எனவும் பெயர் வைத்திருக்கிறார்களாம். ரெஜினா நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் அல்லது யுவன் இசையமைக்கலாம் எனத் தெரிகிறது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்த கதையோ?

சினிமால்

    பலவித சர்ச்சைகளில் சிக்கினாலும் அடுத்தடுத்து புதுசு புதுசாக அரங்கேற்றம் நிகழ்த்துவதுதான் சிம்புவின் பொழுதுபோக்கு. அப்படி, பீப் பாடலைத் தொடர்ந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திலும் சர்ச்சையான வரிகளை உடைய ஒரு காதல் பாடலை எழுதிப் பாடியிருக்கிறாராம். ‘என்னைய விட்டுட்டு யாரையாச்சும் கல்யாணம் பண்ணா உன்ன கொன்னே புடுவேன்’ என்று ஆரம்பிக்கும் பாடல் முழுக்க சர்ச்சை வரிகள்தானாம். ப்பிளான் பண்ணிப் பண்றார்!

சினிமால்

    எல்லாத் துறையிலுமே போட்டி இருக்கும். தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட போட்டியே இல்லாமல் ஜாலியாக எல்லாப் படத்துலேயும் அம்மாவாக நடித்துவந்த சரண்யா பொன்வண்ணனுக்கு இப்போ ஏகப்பட்ட போட்டி. இதனால் கிடைக்கும் படங்களில் மட்டும் நடித்துவிட்டு மீதி நேரங்களில் ஃபேஷன் டிசைனிங் ஸ்கூலையும், தொழிலையும் முழுமையாக கவனித்து வருகிறாராம். டபுள் ரோல்!

சினிமால்
சினிமால்

    தமிழில் நடிக்கவரும் பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழ் பேசவே தெரியாது. அப்படியிருக்க ‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்துவரும் கேரளத்து வரவான அருந்ததி நாயர், படப்பிடிப்பில் சரளமாக தமிழில் பேசுவதைப் பார்த்த இயக்குநர் அவரையே டப்பிங் பேசச்சொல்ல தற்போது அருந்ததி நாயரே அவரது கேரக்டருக்கு டப்பிங் பேசியிருக்கிறாராம், அதுவும் அறிமுகப் படத்திலேயே. சொந்தக் குரலில் பேச...

சினிமால்

    ‘சுல்தான்’ பட வெற்றிக் களிப்பில் இருக்கும் சல்மான்கான் சமீபத்தில் செய்து வரும் விஷயம் பாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அக்‌ஷய் குமார் நடித்து வெளியாக இருக்கும் ‘ருஸ்டம்’ படத்துக்கு பப்ளிசிட்டி செய்து வருகிறார். ஒருபுறம் சக நடிகர் படத்தை புரமோட் செய்வதை எண்ணி சந்தோஷப்பட்டாலும், மறுபுறம் வருத்தப்படுகிறது பாலிவுட். காரணம் அதே நாளில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘மொகஞ்சதாரோ’ படமும் வெளியாவதால் அதற்கு எதிராகத்தான் இந்த புரோமோஷன் என்கிறார்கள் பாலிவுட்டில். எதிரிக்கு எதிரி நண்பனோ?

சினிமால்

    ஒரு காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட பாட்டுக்கெல்லாம் ஆட்டம் போட்ட அப்பாஸ், தற்போது அர்விந்த் சுவாமி போல வில்லன் அவதாரத்தில் ரீ-என்ட்ரி ஆகிறாராம். ‘பச்ச கள்ளம்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பெண்களை கடத்தி விற்கும் ஒரு கொடூரமான வில்லனாக நடித்துவருகிறாராம். படத்துக்கு ‘கண்களால் ஒரு கவிதை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். எங்கே எனது கவிதை?

சினிமால்
சினிமால்

    சமந்தா, நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடந்ததாம். நாக சைதன்யா அணிவித்த பிளாட்டின மோதிரத்தைத்தான் சமந்தா விரலில் அணிந்திருக்கிறாராம். அத்தோடு தன் நெருக்கமான தோழிகள் சிலரோடு உலகம் முழுக்க சுற்றி பேச்சுலர் பார்ட்டியும் கொடுத்திருக்கிறார். அந்தத் தோழிகளில் இரண்டு முன்னணி நடிகைகளும் அடக்கம். கல்யாணத்துக்காவது சொல்லுங்கம்மா!

சினிமால்

  மணிரத்னம் பட ஹீரோக்கள் என்றாலே மீசை இருக்காது பெரும்பாலும். சூர்யாகூட ‘ஆயுத எழுத்து’ படத்தில் மீசை இல்லாமல் நடித்தார். தற்போது அவரது தம்பி கார்த்தியும் மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் மீசை இல்லாத தோற்றத்தில் நடித்து வருகிறார். இதற்காக முதன்முறையாகத் தன் மீசையை தியாகம் செய்து புது லுக்கில் அசத்தியிருக்கிறாராம். இந்தப் படம் வந்த பிறகு, கார்த்திக்கு நிறைய பெண் ரசிகைகள் கிடைப்பார்கள் என்கிறது படக்குழு. இப்போ மட்டும் என்னவாம்?

சினிமால்

வெங்கட் பிரபு ‘மங்காத்தா’ வெற்றிக்களிப்பில் இருந்தபோது நடிக்க ஓகே சொன்ன, ‘தெய்வத் திருமகள்’ பேபி சாரா குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த படம் ‘விழித்திரு’. தற்போது எவ்வளவோ மாறிவிட்டது, ஆனாலும் ‘விழித்திரு’ மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மீரா கதிரவனும், அவரது நண்பர்களும் தயாரித்துப் பின் ஃபைனான்ஸ் பிரச்னையால் முடங்கியது. பல முயற்சிகளுக்குப் பிறகு விரைவில் வெளியாக இருக்கிறதாம் படம். ரசிகர்களை விழிக்க வைங்க சார்!