Published:Updated:

``சீரியல்னா கலர்கலரா சேலை கட்டலாம்னு நினைச்சேன். ஆனா...'' - `பூவே பூச்சூடவா' கிருத்திகா

``சீரியல்னா கலர்கலரா சேலை கட்டலாம்னு நினைச்சேன். ஆனா...'' - `பூவே பூச்சூடவா' கிருத்திகா

``ரொம்ப வாயாடி. பயங்கர அராத்து, சேட்டைக்காரி... இப்படி எந்த வார்த்தையை வேணும்னாலும் போட்டுக்கலாம். ஓர் இடத்துல கொஞ்ச நேரம் உட்கார மாட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரையும் கமென்ட் பண்ணிட்டே இருப்பேன்.

Published:Updated:

``சீரியல்னா கலர்கலரா சேலை கட்டலாம்னு நினைச்சேன். ஆனா...'' - `பூவே பூச்சூடவா' கிருத்திகா

``ரொம்ப வாயாடி. பயங்கர அராத்து, சேட்டைக்காரி... இப்படி எந்த வார்த்தையை வேணும்னாலும் போட்டுக்கலாம். ஓர் இடத்துல கொஞ்ச நேரம் உட்கார மாட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரையும் கமென்ட் பண்ணிட்டே இருப்பேன்.

``சீரியல்னா கலர்கலரா சேலை கட்டலாம்னு நினைச்சேன். ஆனா...'' - `பூவே பூச்சூடவா' கிருத்திகா

``ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் அடுத்தவங்களைக் கலாய்ச்சுக்கிட்டு கலகலப்பா இருப்பேன். ஆனால், என் முன்னாடி கேமராவை வெச்சதும் சமர்த்துப் பொண்ணு மீனாட்சியாக மாறிடுவேன்'' எனச் சிரிக்கிறார் கிருத்திகா. ஜீ தமிழ் `பூவே பூச்சூடவா' சீரியலில் மீனுக்குட்டியாகவும். `சந்திரலேகா'வில் காவல்துறை அதிகாரியாகவும் அசத்திக்கொண்டிருப்பவர்.

``ஆங்கரிங் டு சீரியல் அனுபவம் எப்படி இருக்கு?''

``சின்ன வயசிலிருந்தே நடிப்பு ஆசை என்னைப் பிடிச்சுக்கிச்சு. பள்ளி, கல்லூரி புரோகிராம்களில் நிறைய ரோல் பண்ணியிருக்கேன். சின்ன வயசுல நடிப்பு வாய்ப்பு வந்தபோதெல்லாம் என் அம்மா நோ சொல்லிட்டாங்க. அப்புறம்தான் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வந்துச்சு. சின்ன வயசு கனவாச்சே விடமுடியுமா? சட்டுனு ஓகே சொல்லி, களத்தில் இறங்கிட்டேன். இப்போ ரொம்பவே ஹேப்பி. எல்லோரும் என்னை அவங்க வீட்டுப் பெண்ணாகப் பார்க்கிறாங்க. ஆனால், இதைப் பார்த்து ரசிக்க என் அம்மா இல்லை. கடவுள்கிட்ட போயிட்டாங்க. அந்த வருத்தம் எனக்குள்ளே எப்பவும் இருக்கு.''

`` `பூவே பூச்சூடவா' மீனாட்சி, அமைதியின் மறுபெயர். நிஜத்தில் கிருத்திகா எப்படி?''

``ரொம்ப வாயாடி. பயங்கர அராத்து, சேட்டைக்காரி... இப்படி எந்த வார்த்தையை வேணும்னாலும் போட்டுக்கலாம். ஓர் இடத்துல கொஞ்ச நேரம் உட்கார மாட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரையும் கமென்ட் பண்ணிட்டே இருப்பேன். என்னைப் போய் இப்படி அமைதியான கேரக்டருக்குத் தேர்வுசெஞ்சுட்டாங்களேனு ஆரம்பத்துல சிரிப்பா இருந்துச்சு. அந்த கேரக்டருக்காக அடக்கமா இருக்க ரொம்பவே மாத்திக்கிட்டேன். அப்படியும் சில நேரம் கேமரா போயிட்டிருக்கும்போதே மீனாட்சிக்குள் இருக்கும் கிருத்திகா எட்டிப் பார்த்துருவா. `ஹலோ இன்னும் ஷாட் முடியலைம்மா'னு டைரக்டர் பரிதாபமா கத்துவார். அமைதியான பொண்ணா நடிக்கிறதே கஷ்டமா இருக்கே. நிஜமா இருக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ்.''

``சரி சொல்லுங்க... கிருத்திகா கமிட்டடா?''

``ஹா...ஹா... இதை மட்டும் என் கணவர் கேட்டிருந்தார்னா, அவர் முகம் போயிருக்கும் கோணல பாக்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்திருக்கும். எனக்குக் கல்யாணம் முடிஞ்சு ரொம்ப நாள் ஆயிருச்சு கைஸ்.''

``ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் பற்றி சொல்லுங்க...''

``ரொம்பவே ஹேப்பி மொமென்ட்ஸ். அழகான குடும்பத்தை இந்த சீரியல் எனக்குக் கொடுத்திருக்கு. அக்கா, தங்கைகளாக நடிக்கும் நானும் மத்தவங்களும் ஒண்ணு சேர்ந்துட்டால், செட்ல இருக்கிற மத்தவங்க `எங்களை விட்டுருங்க'னு கதறுவாங்க. நிறைய சென்டிமென்டலும் எங்க செட்ல இருக்கும். என்ன ஒண்ணு, இந்த சீரியலுக்கு வந்த நாளிலிருந்து கிளீசரின் இல்லாமல் இருந்ததே இல்லே. என் கேரக்டர் அப்படி. எனக்கும் என் தங்கை சக்திக்கும் ஒரே நாளில் கல்யாணம் முடிஞ்சு காரில், மாப்பிளை வீட்டுக்குக் கிளம்பும்போது சிந்தின கண்ணீர் ரியல். அப்படி கேரக்டரில் ஒன்றிப்போயிட்டோம்.''

``சீரியலில் உங்க காஸ்டியூம்ஸ் ரொம்ப நார்மலா இருக்கே...''

``அட போங்க ஜி. அதை வேற ஞாபகப்படுத்தி கடுப்பேத்திக்கிட்டு... எனக்கு டிரஸ்ஸிங்னா ரொம்பப் பிடிக்கும். சீரியலில் நடிக்கப்போறோம்ன்னு சொன்னதும், விதவிதமா கலர்கலரா டிரஸ் பண்ணிக்கலாம்னு கனவுகளில் மூழ்கினேன். ஆனால், முதல் நாள் ஷூட்டிங்கிலேயே `உனக்கு இந்த மாதிரி டிரெஸ்தான்'னு சிம்பிளான காட்டன் புடவையைக் கொடுத்துட்டாங்க. அவ்வ்வ்வ்வ்வ்.''

``சீரியலில் சூப்பரா சமைக்கறீங்க. அப்போ, நிஜத்தில் உல்டாவா?''

``அதான் இல்லே. சீரியலில் காட்டுற இந்த ஒரு விஷயம்தான் என் நிஜ வாழ்க்கையில் ஒத்துப்போகுது. நம்புங்க... நான் சூப்பரா சமைப்பேன். எங்க வீட்டில் எல்லாருக்கும் என் சமையல்ன்னா இஷ்டமோ இஷ்டம். ஷுட்டிங் இல்லாத நாள்களில் விதவிதமா சமைச்சு அசத்துவேன்.''