உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

காக்கிச்சட்டை போட்ட மச்சான்ஸ்!

காக்கிச்சட்டை போட்ட மச்சான்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
காக்கிச்சட்டை போட்ட மச்சான்ஸ்!

காக்கிச்சட்டை போட்ட மச்சான்ஸ்!

மிழ் சினிமாவைத் தொடர்ந்து பார்க்கும்போது வர்ற ‘ஏன்யா இப்பிடி?’ ரக கேள்விகள்தான் இது. குறிப்பா போலீஸ் சினிமாக்கள்ல நம்ம ஹீரோக்கள் பண்ணதெல்லாம் தாறுமாறு தக்காளிச்சோறு ரகம்! சாம்பிளுக்குச் சில...

• நம்ம  கேப்டன்  நடிப்பில் வந்த ‘சத்ரியன்’ படம் ரொம்ப நல்ல ஆக்‌ஷன் படம்தான். ஆனால், மனைவியை இழந்தபிறகு போலீஸ் வேலையை விட்டுட்டு குழந்தைகளுக்காக சைலண்ட் மோடுக்குப் போவார். அவரை வெறியேத்தி வம்பிழுப்பார் வில்லன் திலகன். மீண்டும் போலீஸில் சேர்றதுக்கு கேப்டன் என்ன பண்ணுவார் தெரியுமா? ட்ரெட் மில்லில் ஓடுவார், தண்டால் எடுப்பார்...அப்படியே போலீஸ் ஐ.ஜி  விஜய்குமார் ஆபிஸ்க்கு வந்து ரிவால்வரால் அங்கே இருக்குற ஷீல்டை குறிபார்த்து சுடுவார். உடனே விஜய்குமார் சிலிர்த்து எழுந்து கை கொடுத்து ‘வெல்கம்’ சொல்வார். எனக்கு ஒரு சந்தேகம். பொடனிக்குப் பின்னாடி இருக்குற ஷீல்டை பீச்சுல பலூன் சுடுற குழந்தைகூட கரெக்ட்டா சுடுமே..! இதுக்காகவா அவரை திரும்ப போலீஸ்ல சேர்ப்பீங்க விஜய்குமார்?  

காக்கிச்சட்டை போட்ட மச்சான்ஸ்!

• ‘காக்க காக்க’ போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் சூர்யா நல்லவர்தான். ஆனா, ரொமான்ஸ் பண்ணுறதுல பல விஷயங்களைக் கோட்டை விட்டுடுறாரு. ஈசிஆர்ல ஓப்பன் ஜீப்ல லவ்வரோட டிராவல் பண்ணுறது ஓ.கே பாஸ். ஆனா, போற வழியில டின் கோக்கைக் குடிச்சிட்டு காலி டப்பாவை ரோட்டுல வீசுறீங்களே...உங்களை எல்லாம் ஸ்வாச் பாரத் அம்பாஸிடரா போட்டு சம்பளம் கொடுக்காம விட்டா என்ன? 

• ‘சாமி’ படத்துல சீயான் பண்ணது அட்ராசிட்டியோட உச்சம். திருநெல்வேலி டவுனுக்கு டெபுடி கமிஷனரா வந்தது எல்லாம் சரி பாஸ். நார்மலா வந்து சார்ஜ் எடுத்துக்கிட்டா என்ன? அதென்ன பீர் இட்லி சாப்பிட்டு டிராஃபிக்கை நாஸ்தி பண்ணி ஓப்பனிங் ஸாங்? ஊதிக் காட்டச் சொல்லி உள்ளே தள்ள ஆள் இல்லைனுதானே நக்கலை அக்குள்ள வெச்சுட்டு ஆட்டம் போடுறீங்க?

• ‘தங்கப்பதக்கம்’ படத்துல சிவாஜி அங்கிள் நல்லாத்தான் எஸ்.பி சௌத்ரியா நடிச்சார். ஆயிரம் தான் ஹமாம் சோப் போட்டுக்குளிக்குற நேர்மையான போலீஸ்காரரா நீங்க இருந்தாலும் குடும்பத்தையே மறந்துட்டா கடமை ஆத்துவீங்க.  ‘அப்பா எங்கே..?’ ‘அப்பா எங்கே..?’னு அழுதுட்டு தூங்குன மகன்கிட்ட ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ பாடுனா அவன் டார்ச்சர் ஆகி வில்லனா மாறாம உன்னி கிருஷ்ணனாவா மாறுவான்?

காக்கிச்சட்டை போட்ட மச்சான்ஸ்!

• ‘காக்கிச்சட்டை’ உலகநாயகனுக்கு காக்கிச்சட்டை போடணும்கிறதுதான் கனவு. அதுக்கு வாட்ச்மேனா இருந்திருக்க வேண்டியதுதானே. போலீஸாவே ஆகாம யூனிஃபார்ம் மாட்டிக்கிட்டுப்போய் வில்லன் கும்பலோடு கடத்தல் சரக்கைப் பிடிக்குறது தப்பில்ல. ஆயிரம்தான் இருந்தாலும் சட்டம்னு ஒண்ணு இருக்கில்லையா...?

• ‘இதுதாண்டா போலீஸ்’ படத்துல ராஜசேகர் பண்ணுறது ஓவரோ ஓவர். நார்மலா முடியுற கேஸைக்கூட வீம்புக்கு ஹைபிட்ச்ல தொண்டை கிழிய இங்கிலீஷ் கெட்டவார்த்தையில கத்தி வில்லன்களை சொறிஞ்சுவிடுவார். அப்புறம் ஏன் க்ளைமாக்ஸ்ல சாக மாட்டீங்க?

• இன்னும் ‘என் கடமை’ எம்.ஜி.ஆர், `ரகசிய போலீஸ் 100’னு லிஸ்ட் நீளமா இருக்கு. இன்னொருவாட்டி பார்ப்போம்.

- சரண்ஜி