உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

ஜென் Z கவனத்துக்கு!

ஜென் Z கவனத்துக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜென் Z கவனத்துக்கு!

ஜென் Z கவனத்துக்கு!

சில பாட்டுகளை கேட்க மட்டுமே செய்திருப்போம். ரொம்பப் பிடித்திருக்கும். கொஞ்சநாள் கழித்து அதன் வீடியோவைப் பார்க்கும்போது, ‘என்னாது இந்தப் பாட்டு இந்தப் படத்திலயா?’ என மூர்ச்சையாகி விழுந்திருப்போம். பாட்டு மட்டுமல்ல, சில படங்களும் இதே மாதிரியான அதிர்ச்சியைத் தரும். காரணம், அவற்றை இயக்கியிருப்பது நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆட்கள்.

ஜென் Z கவனத்துக்கு!

ரெட்: அல்ட்டிமேட் ஸ்டாரின் ஆக்‌ஷன் அவதார் படம். ‘தீனா’ கொடுத்த கமர்ஷியல் இமேஜில் தல முழுப் புரட்சிக்காரராக நடித்த படம். வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிய படம் பப்படம் ஆனது. அந்தப் படத்தை இயக்கியது, இன்று மோடுமுட்டியாகவும், கெளசிக்காகவும் வந்து நமக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறாரே அந்த சிங்கம்புலிதான். அதன்பின் அவர் சூர்யாவை வைத்து இயக்கிய ‘மாயாவி’யும் சுமார் ரகம்தான்.

காக்கிச் சட்டை: அட சிவா நடிச்சது இல்ல ஜி. நம்ம உலகநாயகன் நடிச்சதுதான். கமல் கேரியரில் இது லேண்ட்மார்க் சினிமா. கமர்ஷியல் ஏரியாவில் இறங்கி ஸ்வீப் சிக்ஸ் அடித்த இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதியது லிவிங்ஸ்டன். அதே ஆண்டு ரிலீஸான ‘கன்னி ராசி’ படத்திற்கும் அவர்தான் திரைக்கதை. இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோ?

ஜென் Z கவனத்துக்கு!

மகாநதி: தமிழ் சினிமாவின் க்ளாஸிக். கமல் என்ற நடிப்பு ராட்ஷசன் பிரமாண்ட அவதாரம் எடுத்த படம். ஸ்ருதியில் தொடங்கி சாதா சிட்டிசன் வரை எல்லாருக்கும் பிடித்த இந்தப் படத்தை இயக்கியது சந்தான பாரதி. இன்னொரு க்ளாஸிக் கான ‘குணா’ படத்தை டைரக்ட் பண்ணதும் அவர்தான். என்ன சிரிப்பு? ‘அன்பே சிவம்’ படத்தை சுந்தர் சி. எடுக்கிறப்போ ‘மகாநதி’யை சந்தான பாரதி எடுக்கக் கூடாதா என்ன?

ஜென் Z கவனத்துக்கு!

உதயா: தளபதி கேரியரில் ரொம்பத் தாமதமாக வந்த படம் இதுதான். 1998-ல் தொடங்கப்பட்டு 2004-ல் ரிலீஸான நீண்ட வரலாறு இந்தப் படத்திற்கு உண்டு. இதனாலேயே வந்த தடம் தெரியாமல் மறைந்து போனது. இதை இயக்கியது அழகம் பெருமாள். அதான் ஜி, புதுப்பேட்டையில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’னு சொல்வாரே. அவர்தான். அதன்பின் ‘டும்டும்டும்’ படத்தை இயக்கினார். இப்போது முழுநேர நடிகர்.

தொடரும்:
அல்டிமேட் ஸ்டாரின் இன்னொரு படம். தேவயானி, ஹீரா, ஜெமினி கணேசன், மணிவண்ணன், வடிவேலு என எக்கச்சக்க நடிகர்கள் இருந்த படம். ஆனால் ரிசல்ட் ரொம்ப மோசம்தான். இளையராஜா இசையில் தல நடித்த இரண்டு படங்களில் ஒன்று இது. இந்தப் படத்தை இயக்கியது ரமேஷ் கண்ணா. அதன்பின் ஆதவனுக்கு மட்டும் கதை எழுதினார் ரமேஷ்.

ஜென் Z கவனத்துக்கு!

கானல் நீர்: இது என்ன படம்? என மூளையை ஜூஸ் போடுபவர்களுக்கு... தமிழ் சினிமாவோட நடிப்பு சூறாவளி, நடன பூகம்பம் ஜே.கே ரித்தீஷ் அறிமுகமான படம் இது. அந்தக் கலைக் காதலனை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது யார் தெரியுமா? சின்னி ஜெயந்த். படத்தை இயக்கியதோடு ‘முற்றிலும் மாறுபட்ட’ வேடத்தில் நடிக்கவும் செய்திருப்பார் சின்னி. ரசிகர்களுக்கு பயத்தில் ஜன்னி வந்ததால் படம் பெட்டிக்குள் சுருண்டது.

பாப்கார்ன்: சேட்டா மோகன்லால் நடிப்பில் வெளியான மியூஸிக்கல் படம். இசைத்திருவிழாவை மையமாக வைத்து வெளியான படம் இது ஒன்றாகத்தான் இருக்கும். சேட்டன் நடிப்பில் பின்னியிருந்தாலும் வசூலில் சொதப்பித் தள்ளியது படம். இந்தப் படத்தை இயக்கியது நம்ம நடிகர் சங்கத் தலைவர் நாசர். இசை இளசுகளின் ஹார்ட்பீட்டான யுவன்.

ஜென் Z கவனத்துக்கு!

வில்லன்: இதுவும் தல படம்தான். இரட்டை வேடங்களில் தல வெயிட்டு என மீண்டும் நிரூபித்த படம் இது. இந்தப் படத்துக்குக் கதை எழுதியது யூகி சேது. படத்துக்குப் படம் விமர்சனம் செய்து கலாய்ப்பவர் அடுத்து கதை எழுதிய ‘அசல்’ படம் நெட்டிசன்களால் இன்றுவரை கலாய்க்கப் படுகிறது. அதற்கு யூகிசேதுவோடு இணைந்து கதை எழுதியது தல தான்.

- நித்திஷ்