
சினிமா விடுகதை!
எவர் க்ரீன் சிங்கர் எஸ்பிபி பாடிய பாடல்கள் தான் இந்த வார சினிமா விடுகதை.

1. ரெண்டு சூப்பர் ஸ்டாரும் ஆடுனாங்க பாரு. ரெண்டு சூப்பர் சிங்கரும் பாடுனது ஜோரு. பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான் படாருன்னு சொல்லிடுங்களே பாட்டைத்தான்.
2. நிறைய பாட்டுகள் கேட்டாலும் பாட்டுக்குள்ளயே நிறைய ‘கேட்ட’ பாட்டு இதுதானே, அட்டகாசமான அமோகமான அமர்க்கள பாட்டும் இதுதானே. ரீலா ஜோடி சேர்ந்தவங்க ரியலாவே ஜோடி ஆகிப்போன கதையும் இந்தப்படத்தாலதானே. இது எந்தப் பாட்டு?
3. இன்னார்க்கு இன்னாரென்று உலகத்துக்குச் சொன்ன பாட்டு, உலக நாயகனே ஆடி நடிச்ச பாட்டு. காட்டுல இருந்த யானை முயல் எல்லாம் பாட்டுல வந்த பாட்டு. தொடர்கதையா படம் வரலைனாலும் படம் பேர்ல தொடர்கதை வந்துச்சே. இந்த மிமிக்ரி பாட்டு எந்தப் பாட்டு?
4. இது விருதெல்லாம் குவிச்ச பாட்டு. இருட்டுலயே வாழ்றவர் நடிச்ச பாட்டு. காஜலை நினைச்சா பல படங்கள் நினைவு வரும். இவங்களை நினைச்சா இதுமட்டும்தானே வரும்! பாட்டில் தாமரை வந்தாலும் தாமரை பாட்டை எழுதலையே.
5. காதல் ஒரு போதை மாத்திரை னு ஜூனியர் போதிதர்மரு போதித்த பாட்டு. பட்டாம்பூச்சியெல்லாம் சாயம்போச்சுன்னு காயப்பட்ட பாட்டு. இதுக்கு மேல க்ளூ குடுக்காம கண்டுபிடிச்சிட்டாலே ‘அறிவு’ பெருக்கெடுத்து ‘ஏழாகப்’ பெருகுதுன்னு அர்த்தம்.
6. எஸ்பிபி னாலே இந்தப் பாட்டுதான் பேச்சு. பாட்டுல விடல மூச்சு. ஓகே கண்மணிக்கெல்லாம் முன்னோடி இந்தக் கண்மணிதானே. இந்தப் பாட்டைப் பாட ட்ரை பண்ணாதவங்க ரொம்ப கம்மிதானே? இது எந்தப் பாட்டு?
7. பம்பாய் படமா இருந்தாலும் அரவிந்தசாமி இதுல நடிக்கலை. மாணிக்கமாக ஆட்டோ ஓட்டி ரசிக்க வச்சவரு மனுஷ வாழ்க்கையை எட்டு எட்டா பிரிச்சு வச்சாரே. ரா ராக்கள் பாட்டுல இருந்தாலும் அதிமுக வுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அது என்ன பாட்டு?
8. சூப்பர் ஸ்டாரின் ஓப்பனிங் சாங்கும்தான் மறந்து போகுமா? பெயிண்டெல்லாம் வயிற்றுல அடிச்சுக்கிட்டதும்தான் மறந்து போகுமா? சிவாஜி, எம்ஜிஆருக்கெல்லாம் இவரு பாடினாலும் சிவாஜியாகவும் எம்ஜிஆராகவும் ரஜினி நடிச்ச படம் இதுதானே. இது எந்தப் பாட்டு?
விடைகள்: 1.காட்டுக்குயிலு மனசுக்குள்ள, 2.சத்தம் இல்லாத, 3.கடவுள் அமைத்து, 4.தங்கத்தாமரை மகளே, 5.யம்மா யம்மா, 6.மண்ணில் இந்த, 7. ராரா ரா ராமைய்யா, 8.காவிரி ஆறும்.