
அக்கட தேசத்து அழகிகள்!
செம சென்சேஷனல் ஹீரோயின்ஸ் தெக்கத்திப்பக்கம் இவங்கதான்!

ஹர்ஷிகா - சாண்டல்வுட்
காவிரி உதிக்கும் குடகுமலையில் பிறந்த தாமரைப்பூ. 18 வயதிலேயே சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் கொஞ்ச நாள் டி.வி-யில் தொகுப்பாளராக இருந்தார். கிடைத்த கேப்பில் எல்லாம் படித்து பி.டெக் முடித்தவர் அடுத்து மளமளவென படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரே ஆண்டில் ஏழு படங்களில் நடிக்கும் அளவுக்கு செம பிஸி. இந்த மைசூர்பாகின் வேகம் பார்த்து சாண்டல்வுட்டே சலசலத்துக் கிடக்கிறது. சீக்கிரம் தமிழுக்கும் வாங்க!

மிருதுளா முரளி - மல்லுவுட்
கேரள நாட்டின் கேட்பரீஸ். குழந்தை நட்சத்திரமாக டி.வி-யில் அறிமுகமானவர் அடுத்து முகம் பதித்தது விளம்பரப் படங்களில். ஆள் பார்க்க சுட்டியாய்த் துறுதுறுவென இருக்கவும் அப்படியே சினிமாவுக்குக் கூட்டி வந்துவிட்டார்கள். ‘ரெட் சில்லீஸ்’ படத்தில் அறிமுகமானவர் அடுத்தடுத்து ‘எல்சம்மா என்ன ஆண்குட்டி’, ‘லோக்கல் கால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின் ‘நாகராஜ சோழன் எம்.எல்.ஏ’ படம் வழியாக தமிழ் அறிமுகம். இப்போது நடித்துக்கொண்டே சென்னை எம்.ஓ.பி-யில் படிக்கிறாங்க இந்தப் பொறுப்பான பொண்ணு! மிருதுவான ஆளு!

இஷிகா சிங் - டோலிவுட்
ராஜபுத்திர இளவரசி. ஆளை அசத்தும் இந்த அழகி படிப்பிலும் கில்லி. எம்.பி.ஏ முடித்தவர் சொந்தமாய் பைலட் லைசென்ஸும் வைத்திருக்கிறார். தெலுங்கில் வரும் முக்கால்வாசி விளம்பரங்களில் அம்மணியின் முகம்தான் இருக்கும். இவர் நடிப்பில் ‘ஹிருதய கலேயம்’ படம் சூப்பர் ஹிட்டாக, அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. ‘ஓ ராத்ரி’, ‘கொப்பரிமாட்டா’ படங்களில் நடித்தவர் அடுத்து திறமை காட்டியது ஹாலிவுட்டில். ‘Waiting in Wilderness’ என்ற இங்கிலீஷ் படத்தில் ஸ்டைல் காட்டியிருக்கிறது இந்த ஆந்திர ஊறுகாய். எல்லா நாடும் எந்நாடே!
- நித்திஷ்