
இருமுகன் விமர்சனம்
“இந்த மனுஷனுக்கு ஒரு நல்லது நடக்காதா?” என `இருமுகன்' படம் பார்த்த ஒவ்வொருத்தரும் மூக்குச் சிந்திக்கொண்டே வருகிறார்கள். ஆக்ஷன், லவ், அப்புறம் இன்னொரு லவ் (வில்லன் பேராம்!), காமெடி, ஸ்டைலிஷ் மேக்கிங் என ஒன்பது ராசியும் உச்சம் பெற அனைத்தும் இருந்தும் என்னதான் பிரச்னை படத்துல?
படத்துக்கு இருமுகன்னு டைட்டில். அதாவது விக்ரம் டபுள் ஆக்ஷன். கதைப்படி பழசை எல்லாம் மறந்துட்டு நயனுக்கு கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்புது. அப்ப அவங்க வில்லன் கஸ்டடில இருக்காங்க. கணவர் விக்ரமின் முகம் மங்கலா நினைவுக்கு வந்தா, அது வில்லன் விக்ரமாகூட இருக்கலாம்தானே? ஆனா, நயன் ஹீரோ விக்ரமுக்காக வெயிட்டிங்காம்.

ஸ்பீடு மருந்த இழுத்தா, அட்ரினலின் சுரந்து துப்பாக்கிக் குண்டைக்கூட கண்ணால பார்த்து, அதுல இருந்து எஸ்கேப் ஆகி நகர முடியுமாம். அவ்ளோ ஸ்பீடாம். அந்த வேகத்துல இயங்குற ரெண்டு பேரோட சண்டைன்னா எப்படி இருக்கணும்? அஞ்சாயிரம் ரூபா ஆண்ட்ராய்டு ஃபோனாட்டம் லொட்டு லொட்டுன்னு தட்டிட்டு இருக்காங்க ரெண்டு விக்ரமும்.
சட்டைல பட்டா ஒண்ணும் ஆகாது. ஆனா, ஸ்கின்ல பட்டா ரத்தமே கொட்டும். அப்படி ஒரு மேஜிக் பவுடர் வெச்சிருக்காரு லவ். கை, கால கட்டிப்போட்டு முகத்துக்கு நேரா அந்த பவுடரை வெச்சுக்கிட்டு ஊதுறாரு. அது எதிர்ல இருக்கிறவன் முகத்துல பட்டு, அநியாயத்துக்கு சிவப்பாயிடுறான். ஏன் பாஸ். வாய்தான் கட்டலையே, லவ் இழுத்து இழுத்து வசனம் பேசுற கேப்ல எதிர்ல இருக்கிறவன் ஊதியிருந்தா லவ் மூஞ்சு ஃபெயிலியர் ஆயிருக்கும்ல? அவன் வாயையும் சேர்த்துதான கட்டணும்?
லவ்வும், நயனும் ஹைடெக் புலிங்கதான். அதுக்காக, உலகத்துல இருக்கிற 700 கோடி பேரோட போட்டோவும், டீட்டெயிலும் எப்படி ப்ரோ? சரி, இருக்குன்னே வெச்சிப்போம். ஜியோ சிம்மா இருந்தாலும் 700 கோடி பேரோட டேட்டாவ எப்படி பாஸ் சில செகண்ட்ல தேடித் தருது? கதை எந்தக் காலத்துல நடக்குது? 2206?
நயன்தாராவைக்கூட இஸ்ரேலிய பொண்ணுனு மேக்கப்ல சரி பண்ணிப்போம். விக்ரமை போய் இஸ்ரேலிய டான்னு சொல்றாங்க. அத நம்பி லவ்வோட ஆட்களும் சந்திக்கிறாங்க. அட்லீஸ்ட் ஒரு மருவாச்சும் வெச்சிருக்கலாமே... ப்ச் !
உளவாளி... காதலி... திருமணம்... ஹனிமூன்... வில்லன்... பாட்டு...நெத்தில சுடுறான்..! இதெல்லாம் விக்ரம் (கமல்) படமாச்சேன்னு பார்த்தா இருமுகன்லயும் ஆர்டர் மாறாம அப்படியே வருது. சரி, இதுவும் விக்ரம் படம்தானேன்னு ஃப்ரீயா விட்டுடணுமா டியூட்?
முதல் பாதி, இரண்டாம் பாதினு எல்லாம் சேர்த்து 22 ஃபைட் வருது படத்துல. அவ்ளோ சண்டை போட்ட விக்ரம் அதுல ஒரே ஒரு சண்டையை டைரக்டர்கூட போட்டிருக்கலாம்... `என்னப்பா படம் எடுக்கிறே?'னு! `தில்', `தூள்', `சாமி', `ஜெமினி'னு கலெக்ஷனை அள்ளின ஆளு பாஸ் நீங்க. என்னவோ போங்க.
கடைசியா ஒரு டவுட். 10 மாசத்துல பொறக்க வேண்டிய குழந்தையை சீக்கிரமே பொறக்க வைக்கக்கூட ஸ்பீடால முடியும்னு சொன்னீங்க. அதக் கூட நம்புறோம். ஆனா, லாஜிக்படி அதுக்கு நயன்தாராதானே ஸ்பீடு எடுக்கணும்? விக்ரம் எடுத்தா எப்படி? ஹவ் இஸ் இட் பாஸிபிள்?
கபாலி ஜெயில்ல இருந்த கேப்புல மலேஷிய போன லவ், ஓவரா ஆட்டம் போட்டிருக்காரு. இப்பத்தான் கபாலி வந்துட்டாருல்ல. அதான் லவ் ஆட்டம் எடுபடல!
பெட்டர் லவ் நெக்ஸ்ட் டைம்.
- தரை டிக்கெட்