Published:Updated:

"நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா

"நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா

அடுத்து, 'மின்னலே' சீரியலுக்காகத் தயாராகிட்டிருக்கோம்."

Published:Updated:

"நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா

அடுத்து, 'மின்னலே' சீரியலுக்காகத் தயாராகிட்டிருக்கோம்."

"நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா

"சினிமா, சீரியல் ரெண்டுலேயும் நடிக்கிறேன். ஆனால், சினிமாவில்தான் ஆடியன்ஸ்கிட்டேருந்து கொஞ்சம் விலகிட்டதா தோணுது. அந்த இடைவெளி சீக்கிரமே குறையும்னு நம்பறேன்" எனப் புன்னகைக்கிறார் நடிகை நிரோஷா. இவர் நடித்துவரும் சன் டி.வியின் 'தாமரை' சீரியல் நிறைவடையவுள்ள நிலையில், புது சீரியலுக்காகத் தயாராகிவருகிறார்.

"நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரைக்கு வந்த அனுபவம் பற்றி..."

" 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலின் சீசன் 1 மற்றும் 2-ல் நடிச்சேன். பிறகு, சின்னத்திரையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுடுச்சு. 'தாமரை' சீரியல் மூலமா ரீ-என்ட்ரி கொடுத்தேன். அடுத்த வருஷமே, 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' 4-வது சீசனில் நடிச்சேன். நளினி மேம், எந்த கேரக்டராக இருந்தாலும் கூச்சம் பார்க்காம தூள் கிளப்பிடுவாங்க. அவங்களோடு நடிச்ச அனுபவம் ரொம்ப மறக்கமுடியாதது."

"காமெடி ரோலில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?"

" 'பிரியமான தோழி' படம்தான் என் காமெடி டிராக்குக்கு அடிதளம். அந்த நேரத்தில், 'நாயகியா நடிச்சுட்டு, காமெடி போர்ஷன் பண்றீங்களே'னு பலரும் சொன்னாங்க. 'எந்த கேரக்டரா இருந்தா என்ன? எல்லாம் நடிப்புதானே. இது ஒரு ஜானர். இருக்கிறதிலேயே காமெடிதான் கஷ்டம். அதனால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை'னு சொல்வேன். அந்தப் படத்தில் லிவிங்ஸ்டன் சாருக்கு ஜோடி. என்னாலும் காமெடியைச் சிறப்பா பண்ணமுடியும் என்கிற நம்பிக்கை கிடைச்சது. பிறகுதான், 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' காமெடி சீரியலிலும் நடிச்சேன்." 

" 'தாமரை' சீரியலின் மறக்கமுடியாத மெமரீஸ்..."

"இந்த சீரியல் நாலரை வருஷமா ஒளிபரப்பாகுது. நாலு வருஷமா இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்லதான் என் பிறந்த நாளைக் கொண்டாடினேன். நிறைய ஃப்ரெண்ட்ஸூம் கிடைச்சாங்க. சீரியல் மூலமா கிராமத்து ஆடியன்ஸ்கிட்ட சுலபமா சேரமுடியுது. சினிமாவைவிட சீரியல் நடிப்பு கஷ்டம். அதிக எஃபோர்ட் போட்டு நடிக்கணும். 'தாமரை' முடியப்போகுது. அடுத்து, 'மின்னலே' சீரியலுக்காகத் தயாராகிட்டிருக்கோம்."

"சினிமாவில் உங்களை பெரிசா பார்க்க முடியறதில்லையே..."

"அதான் எனக்கும் தெரியலை. சினிமா, சீரியல் ரெண்டுலேயும் நடிக்க எப்பவும் தயாராயிருக்கேன். ஆனால், சினிமாவில் பெரிய அடையாளம் கொடுக்கிற மாதிரியான படம் பண்ணி பல வருஷமாச்சு. வயசானாலும் ஹீரோக்களுக்கு கிடைக்கிற மாதிரி, பெரிய வாய்ப்புகள் எங்களுக்கு வர்றதில்லை." 

"உங்க கணவர் ராம்கி எப்படி இருக்கார்?"

"ரொம்ப நல்லா இருக்கார். ரெகுலர் டயட், ஜிம் வொர்க் அவுட், தியானம்... இதெல்லாம்தான் அவரின் இளமைக்குக் காரணம். அவர் எப்போதும் உற்சாகமா இருப்பதோடு, என்னையும் உற்சாகப்படுத்துவார். என் ஃப்ரெண்டு, அப்பா, வழிகாட்டி எல்லாமே அவர்தான். 90-களில், ஹிட் மற்றும் லக்கி சினிமா நட்சத்திரத் தம்பதினு எங்களைச் சொல்லுவாங்க. கல்யாணம் ஆனதிலிருந்து இப்போவரை எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை. கல்யாணமான புதுசில் பேசிகூட அதிக நேரமில்லாமல் ஓடிட்டிருந்தோம். இப்போ நிறைய பேசிக்கிறோம். அவரை இதுவரை நான் பெயர் சொல்லிக்கூப்பிட்டதே கிடையாது. 'மீ' அல்லது 'மா'னு செல்லமாக் கூப்பிடுவேன். அதுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. அவரும் கோபப்படும் சமயத்தில்தான் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். மற்ற நேரங்களில், 'வாம்மா', 'போமா'னுதான் கூப்பிடுவார். எனக்கு டைரக்‌ஷன் பண்ணும் ஆசை உண்டு. அதுக்குக் கணவர்தான் சப்போர்ட் பண்றார்."

"கணவரும் நீங்களும் மீண்டும் ஜோடியாக நடிப்பீங்களா?"

"நிறைய பேர் கேட்கிறாங்க. நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா என்பதைக் கதைதான் முடிவு செய்யணும். தகுந்த சூழல் அமைஞ்சா, நிச்சயம் ஒண்ணா நடிப்போம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாங்க ஜோடியா நடிச்ச படங்களைப் பார்ப்போம். அப்போ நடந்த பழைய நிகழ்வுகளை ஷேர் பண்ணிப்போம். அந்தத் தருணங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அவர் இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிச்சுட்டிருக்கார்."