சினிமா
Published:Updated:

“கனவு கண்டால் கொழுப்பு என்பதா?” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்

“கனவு கண்டால் கொழுப்பு என்பதா?” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
“கனவு கண்டால் கொழுப்பு என்பதா?” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்

“கனவு கண்டால் கொழுப்பு என்பதா?” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்

“கனவு கண்டால் கொழுப்பு என்பதா?” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்

ட்டகாசமாக இருந்தார் அஜித்! பளிச்சென வேட்டி-சட்டை, பளபளவெனத் தங்கச் சங்கிலிகள், விரல் எல்லாம் மின்னும் மோதிரங்கள். ஏகப்பட்ட அடியாட்களுடன் முட்டுக்காடு கடற்கரையோரம் மும்முரமாக இருந்தார்.

``எம் பேரும் தூத்துக்குடி; ஊரும் தூத்துக்குடி'' என்று சிரித்த அஜித்,

`` `அமர்க்களம்' பண்ணிய சரணோடு இப்ப `அட்டகாசம்' பண்றேன். ரொம்பச் சேட்டை பண்றான் ஒருத்தன். `விஷ்க்...' மொத்தமா முடிச்சுட்டு வந்துர்றேன்'' என்றபடி ஷாட்டுக்குக் கிளம்பிப் போனார்.

சரண் காட்சியை விளக்க, அகேலா கிரேன் கேமரா அத்தனை நீள அகலத்துக்கும், அகோரப் பசியுடன் இரை தேடுகிற பாம்புபோல அலைந்து கொண்டிருந்தது. படு உற்சாகமாக ஷாட் முடித்து நடந்து வந்த அஜித்திடம், ``எலெக்‌ஷன் டைம் நெருங்கிற நேரத்துல, அப்படியே அரசியல்வாதி மாதிரி இருக்கீங்க'' என்று ஆரம்பித்தோம்.

``ஆகா... எனக்கு அப்படி கனவுகூட வந்ததில்லை... வராது. தட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ'' என்றவர், சூடாக இரண்டு கப் டீ ஆர்டர் பண்ணினார். பேச ஆரம்பித்தோம்.

`` `அஜித்துக்கு சினிமாவுல ஆர்வம் குறைஞ்சுபோச்சு. எப்ப பார்த்தாலும் கார் ரேஸ்னு கிளம்பிடுறார்'னு ஒரு புகார் இருக்கே... உங்க பதில் என்ன?''

``சிரிப்புதான் வருது. `ஆஞ்சநேயா' படம் ஓடலை. அது மட்டும் சூப்பர் ஹிட்டாகியிருந்தா, இந்தக் கேள்வியே வந்திருக்காது. `அது எப்படிங்க... சினிமா, ரேஸ்னு ரெண்டிலேயும் கலக்குறீங்க?'னு உங்க கேள்வியே மாறியிருக்கும். ரஜினி, கமல் மாதிரி பெரியவங்களே ஃப்ளாப் படங்கள் கொடுத்திருக்காங்களே. `ஆளவந்தான்', `பாபா'வைவிட என் `ஆஞ்சநேயா' பெரிய தோல்விப் படம் இல்லை.

அந்தப் படத்தை நானும் நம்பினேன். தப்பாகிருச்சு. தீபாவளிக்கு எப்படியாவது ரிலீஸ் பண்ணிரணும்னு சொல்லிட்டாங்க. அதுக்காக ராத்திரிப் பகலா பிசாசு மாதிரி வேலை பார்த்து முடிச்ச படம் அது. அந்த வேகத்துல நடந்த தவறு அது. இனிமே அப்படி ஒரு தப்பு நடக்காது. ரிலீஸ் தேதியை முடிவுபண்ணிட்டு அவசர கோலத்தில் படம் பண்ணக் கூடாது என்கிற பாடத்தை எனக்குக் கத்துக்கொடுத்த படம்தான் `ஆஞ்சநேயா'. என்ன... கொஞ்சம் காஸ்ட்லியான பாடம்... இட்ஸ் ஓ.கே!

மத்தபடி, சினிமாதான் எனக்கு உலகம்... உயிர்மூச்சுனு எல்லாம் பொய் சொல்லத் தெரியாது எனக்கு. சினிமா எனக்குத் தொழில். அவ்வளவுதான். தவிர, என்னைப் பாதுகாத்துக்கிறது பற்றி வேற யாரையும்விட அதிகம் கவலைப்படுறது நான்தான். அதனால என்னை நான் சரியா பார்த்துப்பேன். என்னைப் பத்தி ரொம்பக் கவலைப்படுற நலம் விரும்பிகளுக்கு என் ஒரே வார்த்தை `தேங்க்ஸ்!' ''

``அப்படியென்ன அது ரேஸ் காதல்?''

``அதுதான் என் முதல் காதல். என் வாழ்க்கை லட்சியமே ஒரு ரேஸ் வீரன் ஆகிறதுதான். திடீர்னுதான் சினிமாவுக்கு வந்துட்டேன். சினிமாவுல நிறுத்திக்கப் போராடவேண்டியிருந்தது. ரேஸ்ல இறங்க, சம்பாதிக்க வேண்டியிருந்தது. ஓடிட்டே இருந்தேன்.

என்னிக்காவது ஒருநாள் ரேஸ்ல பிரமாதமா ஜெயிப்பேன். அதுக்காக கடுமையா பயிற்சி எடுக்கிறேன். இப்போகூட இங்கிலாந்தில் ட்ரெய்னிங் முடிச்சுட்டு வந்தேன். இன்டர் நேஷனல் லெவல்ல சில போட்டிகளில் நாலாவதா, ஆறாவதா வர்ற அளவுக்கு முன்னேறியிருக்கேன். ஒருநாள் சாதிச்சுக்காட்டுவேன் பாருங்க. அப்போ புரியும் என்னோட எல்லா வலியும்!''

“கனவு கண்டால் கொழுப்பு என்பதா?” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்

``சினிமா வேலைகள் அதனால் கெட்டுப்போகாதா?"

``சான்ஸே இல்லை! அதெல்லாம் பேசிட்டுத்தானே பண்றேன். சார்... நான் வெளியே சுத்தற ஆள் இல்லை. எனக்குப் பொழுதுபோக்கே போட்டோ கிராஃபி, ரேஸ், ஃப்ளையிங்... இப்படித்தான்.

ஏதாவது பொண்ணு பின்னால நான் சுத்தினேன்னா, சுவாரஸ் யமா எழுதலாம்தான். ஆனா, என்ன பண்ண... எனக்கு ரேஸ் கார்ல சுத்துறதில்தான் ஆர்வம் இருக்கு.

சினிமான்னா நாலு படங்கள் பண்றேன். `ஜனா' கிட்டத்தட்ட முடிஞ்சிருச்சு. அப்புறம் லிங்குசாமியோட `ஜி', சரணுடன் `அட்டகாசம்', இடையில் `மகா' முடிக்கவேண்டியிருக்கு. இதுதான் என் படங்களின் ஆர்டர். கிடைக்கிற நேரங்களில் ரேஸுக்காக ஸ்பான்ஸர்ஸ் தேடுறதுல தீவிரமா இருக்கேன். மொத்தமா மூணு கோடி ரூபாய் தேவைப்படுது.''

``ஹீரோக்களிடையே நட்பு ரொம்ப அபூர்வம் போலிருக்கே. ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோவை தன் படங்களில் பன்ச் டயலாக்குகளிலேயே திட்டுறது எல்லாம் அதிகமா நடக்குதே... உங்களை ஒரு ஹீரோ அப்படித் தாக்கும்போது என்ன தோணும்?''

``பாவம்னுதான் நினைப்பேன். என்னைப் பற்றிய ஏதோ பயம்தான் சில பேரை அப்படிப் பேசவைக்குது. படத்துக்குச் சம்பந்தமே இல்லாம திடீர் திடீர்னு `எவன்டா தலை?'னு என்னைக் காயப்படுத்தணும்னு வசனம் பேசறாரு ஒரு ஹீரோ! நான் இதுவரைக்கும் அதுக்குப் பதில் சொன்னது இல்லை. என் படங்களில் அப்படி வசனம் சேர்த்தது இல்லை. `ரெண்டுல ஒண்ணு பார்த்துடணும்'னு என் ரசிகர்கள்கூடக் கொந்தளிக்கிறாங்க. நானும் ஆவேசப் பட்டு அதுக்குப் பதில் சொல்ற மாதிரி என் படங்களில் வசனம் சேர்க்கட்டுமா? அப்படிச் சேர்த்தா என்னாகும்? ரெண்டு பேரோட ரசிகர்களும் வெட்டு, குத்துனு இறங்கிருவாங்க. எனக்கு அப்படி நடக்கிறதுல கொஞ்சம்கூடச் சம்மதம் இல்லை. என்னால வாழ்ந்தவன்னு யாரும் இல்லேன்னாலும் பரவாயில்லை. அஜித்னால கெட்டவன்னு ஒருத்தர்கூட இருக்கக் கூடாது. அந்த அமைதி வேணும்!

“கனவு கண்டால் கொழுப்பு என்பதா?” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்அஞ்சு கிலோ அரிசி குடுத்துட்டு பேப்பர்ல போட்டோ போடும் பப்ளிசிட்டியும் எனக்குத் தேவை இல்லை. யாராவது வெட்டி குத்திச் செத்ததும், அம்பதாயிரம் ரூபா கொண்டு போய்க் கொடுக்கிற துரதிர்ஷ்டமும் எனக்கு வேணாம். ஆனால், தப்புத்தப்பா என்னை சீண்டிப் பார்க்கிற அந்த மாதிரியான சேட் டைகள் தொடர்ந்தால்..? வேணாம்... அந்த விளையாட்டை விட்டுடறதுதான் நல்லது!''

``சூப்பர் ஸ்டார் ஆகணும்னு நீங்க சொன்னது பெரிய சர்ச்சையாகிட்டது. அப்படிச் சொன்னதுக் காக வருத்தப்படுறீங்களா?''

``நெவர்... நான் நினைச்சேன்... சொன்னேன். ஆனா, அதை மாறி மாறி தப்பாவே புரிஞ்சிட்டிருக்காங்க. ரஜினி சார் ஒரு மீட்டிங்ல `சூப்பர் ஸ்டார் பதவி என்பது நிரந்தரம் அல்ல. யார் இன்னிக்கு மாஸ் ஹீரோவோ... அவங்க தாராளமா அந்த சேருக்கு வரலாம்'னு சொன்னார். மிகச் சரியான விஷயம்.

அந்த ரேஸ்ல நானும் கலக்குறேன்னு தான் சொன்னேன். அதுக்கு அர்த்தம் நான் ரஜினியாக ஆசைப்படுறேன் என்பது இல்லை. எம்.ஜி.ஆர் இருந்தப்போ `புரட்சித்தலைவர்'னு பேரு. ரஜினி சார் டைம்ல அதுக்கு `சூப்பர் ஸ்டார்'னு பேரு. நாளை நாங்க வர்றப்போ அந்த நம்பர் 1 இடத்துக்கு வேற பேர் இருக்கலாம்.

நம்பர் 1 ஆகணும்கிற கனவு எல்லோருக்கும்தான் இருக்கு. நான் அதை வெளிப்படையா சொன்னேன். அதைப் போய் கொழுப்பு, திமிர்னு சொல்றதா? இப்பவும் சொல்றேன் சூப்பர் ஸ்டார் ஆகுறதுதான் என்னோட டார்கெட். அதை நோக்கி நான் ஒவ்வொரு நாளும் உழைச்சுட்டே இருப்பேன்.''

``ஆக... `சூப்பர் ஸ்டார்' கனவை நீங்க விடுறதா இல்லை?''

``சான்ஸே இல்லை! சினிமா ஹீரோக்கள் ரேஸ் குதிரைகள் மாதிரிதான். ஜெயிக்கிற வரைக்கும்தான் மரியாதை. தோத்துட்டா, சுட்டுருவாங்க. இல்லேன்னா மெரினா பீச் மாதிரி இடத்துல, `ஒரு ரவுண்டு பத்து ரூபா'னு எல்லாரும் சவாரி பண்ண விட்டுருவாங்க. அதனால நான் எப்பவும் ஜெயிக்கிற குதிரையாத்தான் இருக்க ஆசைப்படுறேன்; இருப்பேன்!''

- ஆவேசமாகப் பேசுகிற அஜித்தின் முகத்தில் புன்னகை ஸ்விட்ச் பளிச்சிடுகிறது உற்சாகம்!

- நண்பன்

படம்: என்.விவேக்