சினிமா
Published:Updated:

ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!

``பெண்களுக்கு எதிரா பேசின தலைவர் ஏன் மேடையிலேயே உட்கார்ந்து அழுகிறார்?''

 ``கூட்டத்திலே அவர் சம்சாரமும் இருந்திருக்காங்க.''

- த. இந்திரஜித்

ஜோக்ஸ்!

 ``தலைவர் சிவகார்த்திகேயனோட ரசிகர்னு எப்படிச் சொல்றே?''

`` `என்னை நிம்மதியா அரசியல் பண்ணவிடுங்க'னு மேடையில
நேற்று அழுதாரே!''

- தஞ்சை ப்ரணா

ஜோக்ஸ்!

``நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறில்லைன்னு சொல்லச் சொன்னதுக்கா
தலைவர் இப்படி டென்ஷன் ஆகிறார்?''

``பொதுக் கூட்டத்தில் பேசறதுக்கு முன்னாடி சொல்லச் சொன்னாங்களாம்...''

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்!

``இந்த முறை பிரசாரத்துக்குப் போகும்போது தலைவர் நாக்கைத் துருத்தி கை ஓங்கினாரு, ஆனா அடிக்கலை!''

``ஏன்?''

``அடிக்கிறதுக்கு ஆளே இல்லையே!''

- அஜித்