கலாய்
Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமால்

சினிமால்

சினிமால்

டிகர் சங்கத் தேர்தலில் நெருக்கமான விஷாலும், கார்த்தியும்தான் தற்போது பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எந்த வித ஈகோவும் இல்லாமல் இரண்டு பேரும் இணைந்து நடிக்க முடிவெடுத்துள்ளார்கள். `கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற பெயரில் உருவாகும் அந்த டபுள் ஹீரோ கதையை தயாரித்து இயக்குவது நம்ம பிரபுதேவா மாஸ்டராம். தமன்னாவை ஒரு வழியாக நாயகியாக `ஓகே' செய்திருக்கிறார்கள் இந்த மூவரும். வெள்ளை ராணி!

• விஜய் சேதுபதி `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் நடித்தபோதே அதன் ஒளிப்பதிவாளரும், நண்பருமான பிரேம்குமாருக்கு ஒரு படம் நடித்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தாராம். தற்போது பிரேம் கதையோடு விஜய் சேதுபதியிடம் போக உடனே `ஓகே' சொன்னதோடு மொத்தமாக கால்ஷீட்டையும் கொடுத்து விட்டாராம். நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்க, `விஜய் சேதுபதியோடு நடிப்பது என் நீண்ட நாள் ஆசை' என சொல்லி அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அவளும் நோக்க, அண்ணலும் நோக்க!

• கேத்ரின் தெரஸா தெரிந்தோ தெரியாமலோ சரைனோடு படத்தில் அரசியல்வாதியாக நடித்துவிட்டார். அதே போன்ற ரோல் ஒன்றில் நடிக்க வைக்க விடாமல் கேட்டார்களாம். கதையைக்கேட்ட கேத்ரின் அவரது ரோல் ரொம்ப பிடித்து போய் நடிக்கிறேன் என சொல்லிவிட்டார். தேஜா இயக்க, ராணா டக்குபதி, காஜல் அகர்வால், நவ்தீப் ஆகியோர் நடிக்கும் படத்தில் கேத்ரின் தெரஸாவுக்குதான் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாம். மதர் தெரஸா மாதிரி சேவை பண்ணுவீங்களா?

• பாலிவுட் பிரபலங்கள் என்றாலே திருமண விழாக்களில் ஆடுவது எல்லாம் சகஜம். ஷாரூக் கான் முதல் நேற்று வந்த சாதா கான் வரை எல்லா நடிகர்களுக்குமே மவுசு உண்டு. அடுத்த மாதம் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி திருமணம் நடக்கிறது. மகள் ஷாரூக் கானின் தீவிர ரசிகை என்பதால், தன் திருமணத்தில் ஷாரூக் ஆட வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். பல கோடி ரூபாயை கொடுத்து ஷாரூக்கை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விட்டாராம் அம்பானி.

சினிமால்

• கார்த்திக் சுப்பாராஜ், இறைவி தோல்வியை வே லெவலில் தான் சரி கட்டணும் என ஒரு முடிவோடு இறங்கிவிட்டார் போலிருக்கிறது. அமெரிக்காவில் முகாமிட்டிருக்கும் அவர், கதையை செதுக்குவதோடு, அங்கேயே ஷூட்டிங் நடத்த லொக்கேஷனும் பார்த்து வருகிறாராம். அதோடு விடாமல் தனுஷோடு மோதவைக்க ஹாலிவுட்டில் இருந்து ‘காட்ஃபாதர்’ அல்பசினோவை பேசி வருகிறாராம். மார்கன் ஃப்ரீமேன் அல்லது அல்பசினோவை தன் படத்தில் நிச்சயம் நடிக்க வைப்பேன் என முடிவாக இருக்கிறாராம்.

• தமிழ் சினிமாவில் ஓரம் கட்டப்பட்ட ரெஜினா தெலுங்கில் நடித்து நல்ல இடத்தைப் பிடித்துவிட்டார். அதை வைத்து தமிழிலும் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். விளையாட்டு பயிற்சியாளர் ஆதித்யா மேனனைக் காதலித்து வந்த அவர், திடீரென நிச்சயதார்த்தம் செய்து கொண்டு விட்டார். அதை அவர் அறிவிக்க நினைக்க, `மார்க்கெட் நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது காதல், திருமண விஷயங்களை அறிவிக்காதே' என நட்பு வட்டாரம் அறிவுரை சொல்ல... உடனே அந்த விஷயத்தை அப்படியே அமுக்கி விட்டாராம்.

• தமிழில் விஜய் சேதுபதி மாதிரி இந்தியில் அக் ஷய் குமார்... என்ன, அவர் கொஞ்சம் சீனியர். மாதம் ஒரு பட அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். 2019 வரை அவரது டைரி ஃபுல். அரை டஜன் படங்களில் நடித்து வரும் அக் ஷய், ஒலிம்பிக் பற்றிய ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். `கோல்ட்'ங என்ற அந்த படம் 1948-ல் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பின்னணியில் நடக்கும் ஒரு பீரியட் படமாம். தேசப்பற்று மிக்க ‘கோல்ட்’ 2018 சுதந்திர தினத்துக்கு வெளியாகிறதாம்.

• 60-ஐ கடந்தாலும் கேரளாவின் ஆல்டைம் சென்சேஷன் மோகன்லால்தான். அவர் நடிக்கும் படங்கள் வசூலிலும் சரி, விமர்சன ரீதியிலும் சரி... எப்போதுமே டாப். சமீபத்தில் வெளியான `புலி முருகன்' 50 கோடியை கடந்து வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அதனை முக்கிய இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய போட்டாபோட்டி நடந்து வருகிறது. மலையாள ஒரிஜினல் தயாரிப்பாளரே தமிழ் ரீமேக்கையும் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறாராம். தமிழ் ஹீரோக்களை அணுகி இதில் நடிக்க வைக்க பேசி வருகிறாராம்.

• என்னதான் நயன்தாரா தமிழில் கில்லியாக இருந்தாலும் தெலுங்கில் சமந்தா தான் நம்பர் 1. தெலுங்கு படங்களில் மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் நயன்தாரா இந்த போட்டியைச் சமாளிக்க தன் சம்பளத்தை கொஞ்சம் விட்டுக் கொடுக்க முன் வந்திருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் சிலருடன் நடிக்க சமந்தாவை தேடி சென்ற ஒரு சில வாய்ப்புகளை சமந்தா ஏற்காமல் ஓய்வெடுத்து வர, அந்த வாய்ப்புகளை தன் வசப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா.

• தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவான `சுயம்வரம்' படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது. அதை முறியடித்து வெறும் 10 மணி நேரத்தில் ஒரு படம் உருவாகியிருக்கிறது. சிங்கம் புலி நடிக்க, `அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற அந்தப் படத்தை ஒரே லொக்கேஷனில் எடுத்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.செல்வா. `லிம்கா புத்தகத்தில் இடம் பெறுவதுதான் லட்சியம், அதை சாதித்து விட்டோம்' என பூரித்து சொல்கிறார் இயக்குநர்.

சினிமால்

• மோகன் ராஜா, பொன்ராம் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அவருடைய கரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். `இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் அந்த படம் ஒரு சயின்ஸ் ஃபிக் ஷன் படமாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக, அனைவரும் குடும்பத்தோடு ரசிக்கும் படமாக எடுக்க இருக்கிறார்களாம். `ரெமோ' போலவே அதிலும் ஒரு புதுவித முயற்சியை மேற்கொள்ளப்போகிறாராம் சிவா.

• தமிழ் சினிமால மட்டும் இல்ல எந்த சினிமான்னாலும் நடிகைகள்ன்னாலே அலப்பறைதான் என எரிச்சலோடு புலம்புகிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள். இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மா சமீப காலமாக தன்னோடு ஸ்பெஷலாக காஸ்ட்யூமர், ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்கப் மேன், அசிஸ்டன்ட்ஸ் என ஒரு பெரும் படையோடு வருகிறாராம். அனுஷ்காவுக்கு கொடுக்கும் சம்பளத்தை போல கால்வாசி இவர்களுக்கும் செலவு செய்யவேண்டி இருக்கிறதாம். இதனால் தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்கள்.