கலாய்
Published:Updated:

எல்லாம் சினிமாமயம்!

எல்லாம் சினிமாமயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
எல்லாம் சினிமாமயம்!

எல்லாம் சினிமாமயம்!

எல்லாம் சினிமாமயம்!

சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இருக்கிற அந்த ஆயத்த ஆடைக்கடையின் பெயர் ‘fully filmy’!  ஆம்... கடைக்குப் போனால் கதவைத் திறக்குறதுல இருந்து கல்லாப்பெட்டி வரைக்கும் சினிமா சினிமா என எங்கும் எதிலும் சினிமா தான் என்றிருக்கிறது. `என்னது டிரெஸ் கடையில... படமா’ என்று கேட்டால்... `ஆமா பாஸ், fully filmyனு பேரு வச்சுட்டு படம் இல்லாமலா’ என வரவேற்கின்றனர் ஆனந்தும் ரானக்கும். கடையின் ஓனர்கள்!

``இந்த ஐடியா ஹாலிவுட் பாலிவுட்டெல்லாம் இருக்கு. தென்னிந்தியாவுல இது ரொம்ப கம்மி. நானும் ரானக்கும் ஒன்பதாவது படிக்கிறப்ப இருந்தே ஃப்ரெண்ட்ஸ். ஒரே காலேஜ், காலேஜ் முடிச்சதும் ஐ.டி கம்பெனில வேலைன்னு ஒண்ணாவே ட்ராவல் பண்ணிட்டு இருந்தோம். சின்ன வயசுல இருந்தே சினிமா ஆர்வம் அதிகம். எது யோசிச்சாலும் சினிமா இல்லாம யோசிக்க முடில. சினிமா ஐடியா பிடிச்சு மினிமல் கோலிவுட் டிசைன்ஸ் செஞ்சு ஃபேஸ்புக்ல சாதாரணமா ஆரம்பிச்சோம். அதுக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. எங்க கூட கார்த்தியும் ஸ்ரீதரும் சேர்ந்தாங்க. ரெண்டு மூணு பேருல ஆரம்பிச்சு இப்போ இருபத்தி அஞ்சு பேருல நிக்கிறோம்.’’ என்று கடையின் முன் கதை கூறினார் ஆனந்த்!

`` `1+1=1 புரொஃபசர் செந்தில் சாருக்கு நன்றி!'  எனக் கரகாட்டக்காரன் படத்துல இருந்து முதல் ஐடியா பிடிச்சோம். இப்படி சின்னச் சின்ன விஷயங்களா செஞ்சிட்டு இருக்கிறப்போ மெட்ராஸ் டாக்கீஸ்ல இருந்து `ஓகே கண்மணி’ படத்துக்கான ப்ரோமோஷன் வாய்ப்பு வந்தது. நாம செய்யுற வேலைக்காக கிடைக்கிற அங்கீகாரம் இன்னும் அதிக உத்வேகத்தோட வேலை செய்ய வைக்குது!’’ என்கிறார் ரானக்.

எல்லாம் சினிமாமயம்!

``இது ஒரு நடமாடும் விளம்பர யுத்தி. அதே நேரத்துல நமக்கான ஸ்டைலயும் கொஞ்சம் கிரியேட்டிவ் சேர்த்து பண்றப்ப நல்ல ரீச் கெடைச்சுது. `ஓகே கண்மணி'க்குப் பிறகு `நானும் ரவுடி தான்’, `மாரி’ன்னு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைச்சது. வெறும் டிஷர்ட் ஐடியாவோட மட்டும் நிப்பாட்டல. `fully filmy’னு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கோம். அதுல ரெண்டு நிமிஷத்துல சினிமா விமர்சனம், புதுப் படங்களோட இசை விமர்சனம்னு தொடர்ந்து பண்ணிட்டு இருக்கோம். தமிழ் சினிமால பண்ணக்கூடாத பத்து விஷயங்கள்னு ஒண்ணு பண்ணினோம். அதைப்பார்த்து இம்ப்ரெஸ் ஆன வெங்கட்பிரபு சார் எங்களை அவரோட சென்னை28 2க்கு அதிகாரபூர்வமா டி-ஷர்ட் டிசைன்ஸ் பண்ணச் சொன்னார். சென்னை 28 விளம்பரத்துக்காக இரண்டு டீமுக்கு ஜெர்ஸி ஐடியா பிளான் பண்ணினோம். ஒரு டீமுக்கு `சொப்பனசுந்தரி'ன்னு பேரு வச்சோம். இன்னொரு டீமுக்கு `பௌலிங்கா ஃபீல்டிங்கா'ன்னு பேரு வச்சோம். ரொம்பவே பிடிச்சிருக்கிறதா வெங்கட் பிரபு சொன்னார்’’ எனச் சொல்லும் அபிஷேக்தான் fully filmy-ன் யூடியூப் சேனலைப் பார்த்துக்கொள்கிறார்.

``இந்த வருஷ நவம்பர் 5ம் தேதி அன்னிக்கு தளபதி படம் ரிலீஸாகி 25 வருஷம் ஆகப் போகுது, சியான் விக்ரமுக்கு சினிமாவில் இது 26ஆவது வருஷம் என fully filmy அடுத்தடுத்த கொண்டாட்டங்களுக்குத் தயாராகிட்டு இருக்கோம். எங்க டிஸைன்ஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக், ரொம்ப பிடிச்சிருந்தா உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணுங்க’’ என உரிமையோடு கேட்கும் இவர்களை நாமும் வாழ்த்தலாமே ப்ரெண்ட்ஸ்!

- ந.புஹாரி ராஜா