கலாய்
Published:Updated:

காஷ்மோரா - விமர்சனம்

காஷ்மோரா - விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மோரா - விமர்சனம்

காஷ்மோரா - விமர்சனம்

காஷ்மோரா - விமர்சனம்

பில்லி, சூனியம், ஏவல், தாவல், ஓவல், சீவல்னு ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுத்து வெளிவந்தது ‘காஷ்மோரா’. பிளாக் மேஜிக் பத்தின படம் என பட டீம் இன்னும் ஏற்றிவிட, தியேட்டர் வாசலில் சரண்டர் ஆனார்கள் ஆடியன்ஸ்.விதியோ தற்செயலோ தெரியல... ஆனா, கொடிக்கும் காஷ்மோராவுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு பாஸ்.

1. இரண்டிலுமே ஹீரோவுக்கு டூயல் ரோல்.

2. இரண்டிலும் ஹீரோயின்கள் கையால் ஹீரோவுக்கு சாவு.

3. இரண்டுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

எதுக்காக நான் இதெல்லாஞ் சொல்றேன்னா... சரி சொல்லிட்டேன் விடுங்க, இப்போ படத்துக்குப் போவோம்.

கதைப்படி, `எனக்குப் பேய் புடிக்கிறதெல்லாம் சல்பி மேட்டரு'ன்னு கப்சா வுட்டு காசு பார்க்கும் ஹீரோதான் காஷ்மோரா. நல்லா கல்லா கட்டி தொழில் நடத்துறவருக்கு திடீர்னு ஒரு ஆஃபர் வருது. `எங்க வூட்ல பேய் தொல்லை தாங்கல. நீங்க வந்து அதைக் கண்டிச்சு வெளிய அனுப்பினா நிறைய காசு தர்றோம்'னு சொல்லி கூப்பிடறார் ஒருத்தர். `சரி'னு கார்த்தியும் அங்க போறார். அங்க வீட்டுக்குப் பதில பெரிய அரண்மனை ஒண்ணு இருக்கு. உள்ள போற அவரால வெளிய வரமுடியல, கார்த்திக்குப் பின்னாலயே அவர் குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் அரண்மனைக்கு வர்றாங்க. காரணம், அங்க இருக்கும் நிஜ பேய் ராஜ்நாயக். இளவரசி ரத்தின மகாதேவி விட்ட சாபத்தால் ஆத்மா சாந்தியடையாம அந்த அரண்மனைக்குள்ளயே சுற்றுகிறார். இதை சரி செய்ய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஐந்து பேரைப் பலி கொடுக்கணும். அதுக்காகத்தான் ராஜ்நாயக் பேய் அவர்களை அரண்மனைக்கு கூட்டிட்டு வந்திருக்கு. இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது காமெடி கலந்த பேய் கதை. படம் நல்ல முயற்சி, ஃப்ளாஷ்பேக் போர்ஷன்ல கிராஃபிக்ஸ் எல்லாம் மிரட்டல்னு பல ப்ளஸ்கள் இருந்தாலும் இதையும் கொஞ்சம் கவனிச்சிருக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்...

எப்பவும், ஒரு வீட்டுக்குப் போய் தலைமுடி, பில்லி சூனிய பொம்மை எல்லாத்தையும் பொதைச்சு வெச்சு, அந்த வீட்டில் இருக்கவங்களை பயமுறுத்தி அதுக்குப் பிறகுதான் அந்த வீட்டுக்கு போய் ‘அரே ஓ சம்பா’ சொல்லி பேய் ஓட்டுவார் கார்த்தி. ஆனா, அந்த அரண்மனையில் இவர் தான் எதுவுமே பண்ணலையே, நிஜ பேயை விரட்டக் கூப்பிட்டதும், ஜாலியா நிஜப் பேயை சூ சொல்லி விரட்டக் கிளம்பிடுவார் காஷ்.

ஊதாக்கலர் ரிப்பன் பொண்ணு எதுக்குப் படத்தில்னு நீங்க கேள்வி கேட்பீங்கள்ல. ‘யம்மா தலை முடிய விரிச்சுப் போட்டு வந்தா லிப்ஸ்டிக் ஃப்ரீங்கற’ மாதிரி, இந்த கேள்விய யாரும் கேட்றக் கூடாதூங்கறதுக்காகத் தான க்ளைமாக்ஸ் முன்னால திவ்யாவுக்கு ஒரு வேலைய குடுத்திருக்கீங்க?

ராஜ்நாயக் கார்த்தி, நயன்தாரா, கார்த்தியின் தளபதிகள் எல்லாரும் ஒரே நாள்லதான் இறந்து போவாங்க. ஆனா, 800 வருஷம் முன்னால செத்துப் போன நயன்தாரா அப்பிடியே ஃப்ரெஷ்ஷா என்ட்ரி கொடுப்பாங்க, ராஜ்நாயக் மூக்கு எல்லாம் வீங்கிப் போய் கறுப்படிச்ச முகத்தோட, `அமைதிப்படை'ல தேங்கா பொறுக்கும் சத்யராஜ் ஹேர்ஸ்டைல்ல வருவார். நயன் நல்லவங்க, கார்த்தி கெட்டவருனுகூட எடுத்துப்போம். ஆனா, அந்த தளபதிங்க என்ன பாவம்யா பண்ணாங்க, புகை மூட்டமா வர வெச்சிட்டீங்க?

க்ளைமாக்ஸ்ல நயன்தாரா ஆத்மாவும், ராஜ்நாயக் ஆத்மாவும் ஆக்ரோஷமா சண்டை போட்டுக்கும். நயன்தாரா வாள் வீசி ராஜ்நாயக்கைக் கொல்லப் பார்க்கும். ஆனா, நீங்கதான் செத்துப் போயிட்டிங்களேடா... அப்புறம் என்னாத்துக்கு பேயிக்கும் பேயிக்கும் அப்பிடி ஒரு சண்டை? இதை எல்லாம் கேட்டா, பேய் படத்துல என்னாத்துக்கு லாஜிக்கு, `ஆல்ரெடி கேம் ப்ரோ, அட்மிட் இட்!'னு சொல்லுவீங்க. என்னமோ போங்க ஜி..!

- தரை டிக்கெட்