கலாய்
Published:Updated:

மாடலிங் கில்லிகள்!

மாடலிங் கில்லிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடலிங் கில்லிகள்!

மாடலிங் கில்லிகள்!

மாடலிங் கில்லிகள்!

ன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சந்தைக்குப் புதிதாக வரும் சட்டையிலிருந்து கால் செருப்புகள் வரை வாடிக்கையாளர்களின் பிரதிநிதிகளாகவே மாடல்களை நிறுவனங்கள் முன்னிறுத்துகின்றன. நாளிதழ்களிலும், டிவி விளம்பர இடைவேளைகளிலும் வந்துபோகிற முகங்கள் இவர்களுடையவை. மாடல் உலகின் சமீபத்திய வரவுகள் இவர்கள்...

சௌமியா

மாடலிங் கில்லிகள்!

முன்னாள் இந்திய கால்பந்து வீராங்கனை. தற்போது சாப்ட்வேர் துறையில் வேலையும் மாடலிங்குமாக ஒரே பிஸி கேர்ள். கேரளத்தில் பிறந்தாலும் தற்போது சென்னைவாசி.

அறிமுகம்: ``மாடலிங் பண்ணலாம் அப்டிங்கிற ஐடியாவே இருந்தது இல்ல. கூட இருந்த ஃப்ரெண்ட்ஸ்தான் பண்ணலாம் பண்ணலாம்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஒன்னரை வருடங்களுக்கு முன்பு கனடா பத்திரிகையில இந்திய கலாசாரங்களைப் பற்றிய கட்டுரைக்கு மாடலாகப் பணியாற்றினேன். அதற்குப் பிறகு மாடலிங் தொடர்ந்து பண்ண ஆசை வந்துருச்சு.''

ஃபிட்னெஸ் ரகசியம்: ``எனக்கு எந்த டயட்டும் கிடையாது. இயல்பிலேயே ஃபுட்பால் பிளேயர். இன்னமும் வார இறுதி நாட்களில் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஃபுட்பால் விளையாட கெளம்பிடுவோம். அதுபோக டான்ஸ்னா ரொம்ப உயிர். அம்மாவுக்கு கம்பெனி கொடுக்க ஜிம் பிராக்டீஸ். அதனால  உடம்பு ஒரே மாதிரி மெயின்டெயின் ஆகுது.''

எதிர்காலத் திட்டம்: ``பெஸ்ட் மாடல்னு பெயரெடுக்கணும்.''

மாடலுக்கான அடிப்படைத் தகுதி: ``தலைக்கணம் இருக்கக் கூடாது.''

திவ்யபாரதி

மாடலிங் கில்லிகள்!

2015ல் மாடலிங் உலகிற்குள் அடியெடுத்து வைத்த கோயம்புத்தூர் பொண்ணு. சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், டைட்டன் என முன்னனி விளம்பரப் படங்களில் நடித்து வரும் மாடல். உயரம் 5.6 எடை 50 கிலோ. அறிமுகமான முதல் வருடத்திலேயே ‘Ms.Ethnic Face of Madras 2015’, `Popular new face model of 2015 chennai’, `Princess of Coimbatore’ என மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

மாடலிங் அனுபவம்: “காலேஜ் டைம்ல பசங்க குரூப்பா நின்னுக்கிட்டு இருந்தா, அந்த வழிய விட்டுட்டு சுத்தி வேற வழில போற பொண்ணு நான். நான் மாடல் ஆவேன்னு நெனச்சுக்கூட பார்த்தது இல்ல. இங்க சென்னையில முதல் தடவை ராம்ப் வாக் போனப்போ தன்னம்பிக்கை கொடுத்துச்சு. என்னோட தயக்கங்கள் எல்லாமே உடைஞ்ச தருணம் அது.’’

ஃபிட்னெஸ் ரகசியம்:
``எல்லோரும் என்னை சாப்பிடவே மாட்டேன்னு நெனைச்சிட்டு இருக்காங்க. `அது வேணும் இது வேணாம்'னு எதையும் ஒதுக்குனது கிடையாது. நான் டயட் இருந்தது கிடையாது. ஜிம்முக்குப் போனது கிடையாது. மனசுக்குப் பிடிச்சதைச் செய்றேன். சந்தோஷமா இருக்கேன். அதுதான் காரணமா இருக்கும்னு நெனைக்கிறேன்.''

பாய் ஃப்ரெண்ட்: ``மாடல்னா எல்லோருக்குள்ளயும் ஒரு கற்பனை இருக்கு, பப் பார்ட்டின்னு போகாத பொண்ணு நான். மாடல்னா பாய் ஃப்ரெண்டு இருப்பாங்கன்னு அவங்களா நெனச்சுக்கிட்டு இருப்பாங்க. இன்னும் ஒரு ப்ரொபோஸ் கூட வரலைங்குறது எனக்கு மட்டும்தான் தெரியும்.''

ஃபேவரைட் டிசைனர்: ``சிட்னி ஸ்லேடன்.''

ஸ்ரீராம் ஜோஷி

மாடலிங் கில்லிகள்!

2015ல் மாடலிங் உலகிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் 24 வயது சென்னை இளைஞர். உயரம் ஆறு அடி. எடை 76 கிலோ. சென்னை சில்க்ஸ், சுந்தரி சில்க்ஸ் விளம்பரப் படங்களின் நாயகன்.

மாடலிங் அனுபவம்:  ``இன்ஜினீயரிங் படிக்கும்போதே முடிவு பண்ணிட்டேன். பத்து டூ ஆறு ஜாப்புக்குப் போகக்கூடாதுன்னு! அப்போதான் சென்னையில ஃபேஷன் ஷோ நடத்துறதா கேள்விப்பட்டேன். விளையாட்டா போனேன். வின் பண்ணேன்!''

மறக்க முடியாத தருணம்:  ``தருண், ராம், சோனியா அகர்வால் ஜட்ஜ்களாகப் பங்குபெற்ற 2015 சென்னையில் நடந்த ஃபேஷன் ஷோவில் பன்னிரண்டு நபர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.அதன் பிறகு விளம்பரப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.''

ஃபிட்னெஸ் டிப்ஸ்:  ``ஒரு மாடலுக்கு உடம்பு ரொம்ப முக்கியம், டான்ஸ் கிளாஸ் போறேன். கார்போஹைட்ரேட் அதிகமா இருக்குற சாப்பாட்டை  எடுத்துக்கிறது இல்லை.''

எதிர்காலத் திட்டம்: ``சினிமாவுல நடிக்க சான்ஸ் வருது.நல்ல கேரக்டர்களுக்காக வெயிட்டிங்!''

அஷ்வந்த்

மாடலிங் கில்லிகள்!

ஐ.டி இளைஞர். மாடலிங் மற்றும் ஐ.டி இரண்டு துறைகளையும் தன் தோளில் சுமந்து வலம் வரும் சமீபத்திய வரவு. விதவிதமான ஹேர்ஸ்டைல் விளம்பரங்கள் இவரது அடையாளம்!

மாடலிங் அனுபவம்:

``சொந்த ஊரு திருச்சி. ஊருல இருக்குறவரை மாடலிங் எதுவும் தெரியாது. காலேஜ் சென்னையில.  மாடலிங்குக்கு சென்னை சரியான பிளாட்ஃபார்மா கை கொடுத்துச்சு. ஆரம்ப காலத்துல கை முடி கால் முடியெல்லாம் எடுத்துட்டு போட்டோ ஷூட் முடிச்சு ஆபீஸுக்குப் போனா எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பாங்க. அப்புறம் பழகிட்டாங்க..!''

மாடலிங்-ஐ.டி வேலை பேலன்ஸிங்:

``திடீர்னு விளம்பர ஷூட் இருக்குன்னு கூப்டுவாங்க. ஆபீஸ்ல போயி நிப்பேன். `ஆல் தி பெஸ்ட்' சொல்லி அனுப்பி வைப்பாங்க. ஆபீஸ் சப்போர்ட்னாலதான் இரண்டு ட்ராக்லயும் பெர்ஃபெக்ட்டா டிராவல் பண்ண முடியுது!''

ஃபிட்னெஸ் சீக்ரெட்: ``காலைல ரெண்டு மணி நேரம் சாயங்காலம் ரெண்டு மணி நேரம் ஜிம்மில் ஒர்க் அவுட்!''

எதிர்காலத் திட்டம்: ``நல்ல மாடல்னு பெயர் எடுக்கணும்.''

மாயா 

மாடலிங் கில்லிகள்!

ப்ளஸ்-டூ படிக்கும்போதிருந்தே மாடலிங் செய்துகொண்டிருக்கும் சென்னைப் பெண். அருண் எக்செல்லோ, விகேசி ப்ரைடு, விஜயா ஆப்டிகல்ஸ் இவரது அடையாளங்கள்!

மாடலிங் அனுபவம்: ``சின்ன வயசுல இருந்தே மாடலிங் பண்ணணும்னு ஆசை. மாடலிங் நாம சினிமால பார்க்குற  மாதிரி ஜஸ்ட் லைக் தட்னு கிடையாது. அதுக்கு நிறைய கடின உழைப்பு தேவை. ஒரு மாடலுக்கு அவுங்களோட உடல்தான் மூலதனமே. உடலும் மனசும் எப்போதும் சந்தோஷமா வெச்சுக்கிடணும்!''

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி: ``உயரம் 5.8.எடை 59 கிலோ, டயட்  எதுவும் ஃபாலோ பண்ணுனது கிடையாது. யோகா பண்ணுவேன். காலையில ஜிம்ல சின்னச் சின்னதா ஒர்க் அவுட்ஸ்!''

வார்ட்ரோப் ஃபெயிலியர் அனுபவம்: ``நல்ல வேளை... இதுவரை அந்தமாதிரி எதுவும் நடந்தது இல்லை. அதுக்குக் கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்!''

மாடலுக்கான அடிப்படை:  ``தைரியமும் தன்னம்பிக்கையும்தான்!''

சினிமா ஐடியா:``ம.கா.பா ஆனந்த்கூட `பஞ்சு மிட்டாய்' படத்துல நடிச்சிருக்கேன். அஜீத்சார்கூட  தங்கச்சி கேரக்டாவது பண்ணிடணும்னு ஆசை!''

பிடிச்ச டிசைனர்: ``மனீஷ் மல்ஹோத்ரா.''

- ந.புஹாரி ராஜா