
அக்கட தேசத்து அழகிகள்!

சாண்டல்வுட் : பாவனா ராவ்
ஷிமோகாவில் பிறந்த சிலை. பரதநாட்டியம் அரங்கேற்றம் முடித்து சேனல்களில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவரை ஆரவாரமாக வரவேற்றது சாண்டல்வுட். `காலிப்பட்டா' என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். அதன்பின் ஒரு பெரிய பிரேக். `கொல கொலயா முந்திரிக்கா' தமிழ்ப் படத்தில் ரீ-என்ட்ரியானவர் `விண்மீன்கள்', `வனயுத்தம்' போன்ற படங்களில் தரிசனம் தந்துவிட்டு மீண்டும் சாண்டல்வுட்டுக்கே சென்றார். இந்த ஆண்டு `பரபஞ்சா' என்ற படத்தில் நடித்தவர் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக வெயிட்டிங். நாங்களும்!
மல்லுவுட் : இஷா சர்வானி

குஜராத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்து திருவனந்தபுரத்தில் செட்டிலான பைங்கிளி. அப்பா ஆஸ்திரேலியர், அம்மா குஜராத்தி என்பதுதான் இவரின் பளீர் வெண்மைக்குக் காரணம். கதக், களரிப்பயட்டு என வெரைட்டியாய் இவர் வெளுத்து வாங்குவதைப் பார்த்து பாலிவுட் உலகம் `கிஸ்னா' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது. அதன்பின் இந்தியில் வரிசையாக சில படங்களில் நடித்தவர் தமிழில் மாற்றானிலும் தலை காட்டினார். பின் பைலிங்குவல் படமான `டேவிட்'. அதற்குப்பிறகு மலையாள வாசம். `ஐந்து சுந்தரிகள்', `ஐயோபின்டே புஸ்தகம்', `டபுள் பேரல்' என வரிசையாக நடித்து அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டார். மிஸ் யூ இஷா!
டோலிவுட் : அஞ்சலி பாட்டீல்

நாசிக்கில் அச்சான பளபள புது நோட்டு. பேச்சுலர்ஸ் டிகிரி முடித்தவுடன் தேசிய நாடகப்பள்ளியில் சேர்ந்து நடிப்பு கற்றுக்கொண்டார். அதன் வழியே சினிமாவில் நுழைந்தார். முதல் படம் `டெல்லி இன் எ டே'. அதன்பின் தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்தவரை தங்கள் ஊர்ப்பக்கம் அழைத்துச் சென்றார்கள் . `ப்ரதாயம்', `நா பெங்களூரு தள்ளி' என தெலுங்குப் படங்களில் நடித்தவர் இப்போது மீண்டும் பாலிவுட் வாசம் செய்கிறார். 2017 இறுதி வரை அம்மணியின் கால்ஷீட் நிரம்பி வழிகிறது. தமிழுக்கு வந்து பெயரை மாத்திடுங்க!
- நித்திஷ்