Published:Updated:

``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்!" - ஹரிணி திப்பு

``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்!" - ஹரிணி திப்பு

``எங்களுக்குள்ளயும் சண்டைகள் வரும். ஆனா, அது மிக அவசியமான விஷயங்களுக்கு மட்டும்தான் வரும். அதனால நிச்சயம் யாரோ ஒருத்தர் விட்டுக்கொடுத்துடுவோம். அது சூழ்நிலையைப் பொறுத்து. தப்பு செய்தங்க தன் தவற்றை உணர்ந்துடுவோம்."

Published:Updated:

``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்!" - ஹரிணி திப்பு

``எங்களுக்குள்ளயும் சண்டைகள் வரும். ஆனா, அது மிக அவசியமான விஷயங்களுக்கு மட்டும்தான் வரும். அதனால நிச்சயம் யாரோ ஒருத்தர் விட்டுக்கொடுத்துடுவோம். அது சூழ்நிலையைப் பொறுத்து. தப்பு செய்தங்க தன் தவற்றை உணர்ந்துடுவோம்."

``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்!" - ஹரிணி திப்பு


``பின்னணிப் பாடகியா என் பயணத்தைத் தொடங்கி 25 வருஷமாச்சு. நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்துட்டேன். இந்த இடைப்பட்ட காலத்தில் மியூசிக் ஃபீல்டைச் சேர்ந்த அன்பான கணவர் கிடைச்சார். வாழ்க்கை சிறப்பா போகுது" எனப் புன்னகைக்கிறார் ஹரிணி திப்பு. தன் பர்சனல் விஷயங்களைப் பகிர்கிறார்.

``இசைப்பயணம் எப்படிப் போகுது? முன்பு போல உங்க புதியப் பாடல்களை அதிகம் கேட்க முடியலையே..."

``நல்லா போயிட்டு இருக்கு. எப்போதும் நிறைய சாங்ஸ் பாடணும்னு ஓடுறதில்லை. வர்ற வாய்ப்புகளை ஏற்று, பாடிட்டு இருக்கேன். `இது கதிர்வேலன் காதல்' படத்துல `அன்பே அன்பே' பாடல் பாடியிருந்தேன். அதுக்கப்புறமும் நிறைய ஹிட்ஸ் கொடுத்துட்டுதான் இருக்கேன். இப்போ, ஹாரிஸ் ஜெயராஜ் சார் இசையில ஒரு பாடலும், ஜி.வி.பிரகாஷ் இசையில ஒரு பாடலும் பாடியிருக்கேன். கச்சேரிகளும் பண்றேன்." 

``உங்க கணவர் திப்புவும், நீங்களும் ஒரே துறையில இருப்பது எந்த அளவுக்குச் சாதகமாக இருக்குது?"

``எங்க பயணத்துக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் மியூசிக்தான் பெரிய பிளஸ். எங்க ரெண்டு பேருக்குமான ஆக்சிஜனே மியூசிக்தான். அது இல்லாம எங்களால வாழ முடியாது. வீட்டுல புரொஃபஷனல் ரெக்கார்டிங் ஸ்டுடியோ இருக்குது. அதில் நாங்களே பாடி, சொந்தமா ரெக்கார்டிங் செய்தும் கொடுக்கிறோம். இசையமைக்கிற பணிகளுக்கும் முயற்சி பண்றோம். கடல் மாதிரியான இசையில, இப்போ கர்னாட்டிக் மியூசிக் மற்றும் பியானோ கத்துகிட்டு இருக்கேன். இருவரும் ஒண்ணாவே பிராக்டீஸ் பண்ணுவோம். ஒருத்தருக்குத் தெரிஞ்ச விஷயத்தை இன்னொருத்தருக்குச் சொல்லிக்கொடுப்போம்." 

``கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும்போது முதல்ல விட்டுக்கொடுத்துப் போவது யார்?" 

``குடும்ப வாழ்க்கையில கருத்து வேறுபாடுகள், சண்டைகள் வருவது இயல்புதானே. எங்களுக்குள்ளயும் சண்டைகள் வரும். ஆனா, அது மிக அவசியமான விஷயங்களுக்கு மட்டும்தான் வரும். அதனால நிச்சயம் யாரோ ஒருத்தர் விட்டுக்கொடுத்துடுவோம். அது சூழ்நிலையைப் பொறுத்து. தப்பு செய்தவங்க தன் தவற்றை உணர்ந்துடுவோம். அதனால எங்க அன்பு மேலும் மேலும் பலப்படுது."

``20 ஆண்டுக்கும் மேலான உங்க இசைப் பயணத்தை எப்படிப் பார்க்கிறீங்க?"

``அப்போ நான் ஒன்பது மாசக் கைக்குழந்தை. என்னை `சங்கராபரணம்' படத்துக்குப் பெற்றோர் கூட்டிட்டுப்போனாங்க. அந்தப் பட இசையை தியேட்டர்ல நான் முணுமுணுக்க, அதைப் பெற்றோர் ரெக்கார்டு பண்ணியிருக்காங்க. அதை வீட்டில் வந்து கேட்டு, எனக்குள் இசை ஆர்வம் இருக்கிறதை கண்டுபிடிச்சிருக்காங்க. ரெண்டரை வயசுல மியூசிக் கிளாஸ் போக ஆரம்பிச்சேன். அப்போதிலிருந்து இசைதான் என் உலகம். ஸ்கூல் படிக்கிறப்போதிலிருந்தே நிறைய மேடைகள்ல பாடிட்டு இருந்தேன். ஒரு போட்டியில எனக்கு வெற்றியாளர் பரிசை ஏ.ஆர்.ரஹ்மான் சார் கொடுத்தார். என் பாடல் அவருக்குப் பிடிச்சுப்போகவே, `இந்திரா' படத்துல என்னைப் பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். `நிலா காய்கிறது'தான், சினிமாவுல நான் பாடின முதல் பாடல். அப்போ எனக்கு வயசு 13. தொடர்ந்து எல்லா முன்னணி இசைமைப்பாளர்களின் இசையிலும் பாடினேன். ஆனா, ரஹ்மான் சாரின் இசையில்தான் அதிகம் பாடினேன்; ஹிட்ஸ் கொடுத்தேன்; புகழ் பெற்றேன். இன்று வரை எனக்கு அவர் சிறந்த வழிகாட்டி." 

``இசை கரியர்ல மறக்க முடியாதது..."

``என் பதினேழு வயசுல ஒருமுறை சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில பாடினேன். பல பெரிய சிங்கர்ஸூம் மேடையில் இருந்தாங்க. நான் பின்னாடி நின்னுட்டு இருந்தேன். `அடுத்து யார் பாடணும்?'னு தொகுப்பாளர் கேட்க, மொத்தக் கூட்டத்தினரும் என் பெயரைச் சொன்னாங்க. நம்ப முடியாமல், இன்ப அதிர்ச்சியில் மேடை ஏறிப் பாடினேன். ப்ளஸ் டூ முடிச்ச சமயம், `மனம் விரும்புதே உன்னை' பாடலுக்காக (`நேருக்கு நேர்') எனக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்தப் பாடகிக்கான விருது கிடைச்சுது. இப்படி நிறைய மெமரீஸ் இருக்கு."

``தற்போது பாடகர்களின் வருகை அதிகமாவதால், முன்பு போல ஒரு பாடகர் பல வருஷத்துக்குத் தனிச்சு தெரியிறது குறையிதே. இது பற்றி உங்க கருத்து?"

``அது உண்மைதான். அதனால ஆடியன்ஸூக்கு வெரைட்டியான சாய்ஸ் அதிகம் கிடைக்குது. இப்போ மியூசிக் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகமாகிடுச்சு. அதன் மூலம் சின்ன வயசுலயே நிறைய திறமையான பாடகர்கள் வெளியுலகுக்குத் தெரியிறாங்க. அவங்களோட பாடல்களைத் தொடர்ந்து நான் கேட்பேன். அதிலிருந்தும் நிறைய விஷயங்களைக் கத்துக்க முடியுது. இன்றைய டிரெண்டை தெரிஞ்சுக்க முடியுது. நமக்குள் நிறைய திறமைகள் இருக்கலாம். ஆனா, அதை நடப்பு டிரெண்டுக்கு ஏற்ப பயன்படுத்தணும். அப்போதான் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும். அதை கடைபிடிக்கிறதால, எனக்கும் என் கணவருக்கும் வாய்ப்புகள் வருது." 

``இசையைச் சாராத உங்க குடும்ப வாழ்க்கை பற்றி..."

``நானும் கணவரும் மியூசிக்கைப் பத்திதான் அதிகமா டிஸ்கஸ் பண்ணுவோம். தவிர, அரசியல், சமூக நிகழ்வுகள், சினிமானு எல்லா விஷயங்களைப் பத்தியும் விவாதிப்போம். நிறைய மனிதர்கள்கூட பழகணும்; மற்றவர் விருப்பங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவோம். அதனால எங்க வீட்டுல அடிக்கடி உறவினர்கள், நண்பர்கள் நிறைஞ்சு இருப்பாங்க. செம அரட்டை, கலகலப்பு இருக்கும். அதனால, சின்ன கவலைக்கும் எங்க வாழ்க்கையில இடமில்லை."

(கோப்புப் படம்)

``உங்க குழந்தைகளுக்கும் இசைத்துறையில் ஆர்வம் இருக்கா?"

``பொண்ணு சாய் ஸ்மிருத்தி ப்ளஸ் ஒன் படிக்கிறாங்க. டாக்டராக ஆசைப்பட்டாலும், பியானோ கத்துக்கவும் அதிக ஆர்வம் செலுத்துறாங்க. பையன் சாய் அபயங்கர், நிறைய இசைக்கருவிகளை வாசிக்கக் கத்துக்கிறார். ரெண்டு பேரும் விருப்பப்பட்டால், எதிர்காலத்துல இசைத்துறையிலயே வொர்க் பண்ணலாம். அதுக்கு நாங்க சப்போர்ட் பண்ணுவோம். ஆனா, அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும். நிறைய ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ள பழகிக்கணும்ங்கிறதையெல்லாம் இப்போவே சொல்லிக்கொடுக்கிறோம்."