மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

மனநல மருத்துவர் இல்லாத இடத்தில்
விக்ரம் படேல் தமிழில்: ஆத்மன்
வெளியீடு: அடையாளம், 1205/1. கருப்பூர் சாலை, புத்தாநத்தம்.
பக்கம்:340 விலை:

விகடன் வரவேற்பறை

300

விகடன் வரவேற்பறை

லக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உலக மனநல அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்நிலையில், இந்தியாவின் 120 கோடி மக்களுக்கு 4,000 மனநல மருத்துவர்களே உள்ளனர் என்பது இன்னும் துன்பமான செய்தி. மனநோய் எவரையும் பாதிக்கலாம். அதீத பயம், களைப்பு, தூக்கம் சார்ந்த பிரச்னைகள் என ஒவ்வொன்றிலும் மனத் தூண்டலின் பங்கு இருப்பதை விக்ரம் படேலின் இந்தக் கையேடு சொல்வதோடு மட்டும் இன்றி, மனநோயை மதிப்பீடு செய்வதுபற்றியும் சிகிச்சை முறைகளையும் முன்வைக்கிறது! .

விழியானது ஒளி ஆனது
இயக்கம்: எஸ்.ஏ.புனிதன்தயாரிப்பு: எஸ்.ஏ.எஸ்.

விகடன் வரவேற்பறை

ப்பாவுக்கு கம்ப்யூட்டரில் பைக் ரேஸ் விளையாடச் சொல்லிக் கொடுத்துவிட்டு, மகாபலிபுரத்துக்கு பைக்கில் கிளம்புகிறான் மகன். நிஜத்திலும் விளையாட்டிலும் வேகம் எகிறிக்கொண்டே போக, விபத்து நடக்கிறது. விபத்தில் மகன் இறந்துவிட, அவனது கண்களைத் தானமாகத் தருகிறார் தந்தை. வீடியோ கேமையும் நிஜ பைக் வேகத்தையும் மாறி மாறிக் காட்டுவது நச் ஐடியா. உணர்ச்சியற்ற நடிப்புதான் சின்ன நெருடல்!

போராளி  வெளியீடு: வேகா மியூஸிக்
இசை: சுந்தர் சி.பாபு  விலை:

விகடன் வரவேற்பறை

99.00

விகடன் வரவேற்பறை

சிகுமார், சமுத்திரக்கனி, செந்தில்தாஸ் ஆகியோரின் குரல்களில் மந்திரம்போல் தொடங்குகிறது, யுகபாரதியின் 'விதியே போற்றி’ பாடல். சங்கர் மகாதேவனின் குரலுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறதோ அந்தக் கம்பீரம்... நா.முத்துக்குமாரின் 'யார் இவன்’ பாடலில் உச்சஸ்தாயியை அநாயாசமாகத் தொட்டு விளையாடி இருக்கிறார்! வேல்முருகன் - தஞ்சை செல்வியின் குரல்களில் குதூகலமாக ஒலிக்கும் நாட்டுப்புற நையாண்டி டூயட்டுக்கு திரையரங்கில் விசில் சத்தம் காதைப் பிளக்கும். 'எங்கிருந்து’ பாடலில் 'அன்பினிலே சாகவைத்தான்; அணு அணுவாக வாழவைத்தான்’ என்று நா.முத்துக்குமாரின் முரண் வரிகள் அற்புதம்!

அன்லிமிடெட் அனிமேஷன்! www.fluxtime.com

விகடன் வரவேற்பறை

குழந்தைகளுக்கு அனிமேஷன் கற்றுக்கொடுக்கும் தளம்.   விதவிதமான அனிமேஷன் ஸ்க்ரீன்சேவர்கள், கார்ட்டூன் படங்கள் என உங்கள் வீட்டு சுட்டிகள் தாங்களே வித்தை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் தளம்!

கல்வி கேள்விகளுக்கு விளக்கம்! www.kalvikalanjiam.com

விகடன் வரவேற்பறை

ல்வித் தகவல்கள், வேலைவாய்ப்புச் செய்திகளைக்கொண்டு இருக்கும் தளம். பொறியியல், மேலாண்மை, கலை மற்றும் அறிவியல், வர்த்தகக் கல்வி எனப் பகுக்கப்பட்டு அது தொடர்பான செய்திகளைத் தெளிவாக விளக்குகிறார்கள். வாசகர்களின் மின்னஞ்சல் சந்தேகங்களுக்கான விடை களைத் தளத்தில் வெளியிடுவது சிறப்பு!