அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ருடத்துக்கு ஐந்து படங்கள் என்பதில் தெளிவாக இருக்கிறார் நயன்தாரா. அதைவிட தெளிவு, கதை கேட்பதில். சமீபத்தில், இயக்குநர் டீகே கதை சொல்லியிருக்கிறார். படத்தில் நாயகிக்கான ரோல் அவ்வளவு வலுவாக இல்லை. அதனால், ‘டிகே... டிகே’ என ஓகே சொல்லாமல் திருப்பி அனுப்பிவிட்டார் நயன். கதை சொல்பவர்கள், கதாநாயகிக்கான கதையோடு செல்ல வேண்டும் என்பது இதனால் பெறப்படும் நீதி. டீகே கதைக்கு காஜல் அகர்வால் ஓகே சொல்லிவிட்டார் என்பது தனிக்கதை.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

டிகராகவோ, இயக்குநராகவோ ஜெயித்துவிட்டால் அடுத்தகட்டமாக, படத் தயாரிப்பில் ஈடுபடுவார்கள், சிலர். தயாரிப்பில் களம் இறங்கும் பிரபலங்களுக்குப் பெரும்பாலும் அந்தப் புதிய முயற்சி கைகூடுவது இல்லை. ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில் வெளியான ‘தேவி’, ‘போகன்’ எதிர்பார்த்த வருமானத்தைத் தரவில்லை. அதனால், இனி படங்கள் தயாரிப்பது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறார் பிரபுதேவா. வெற்றி இரண்டு வகைப்படும்.

‘சபாஷ் நாயுடு’ அடுத்தடுத்துப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. முதலில் இயக்குநருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பிறகு, கமலுக்கு ஏற்பட்ட விபத்து... மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாரானார் கமல். இந்த முறை சிக்கல் ட்ரம்ப் ரூபத்தில் வந்து நிற்கிறது. பாதி ஷூட்டிங் அமெரிக்காவில் முடித்திருப்பதால் காட்சியைத் தொடர்வதற்கு அங்கு சென்றாக வேண்டும். அதிபர் ட்ரம்பின் கட்டுப்பாடுகளால் விசா கிடைப்பதில் சிக்கலில் தவிக்கிறது படக்குழு. அதனால், ட்விட்டர் மூலம் மனதை ஆற்றிக்கொள்கிறார் கமல். தமாஷ் நாயுடு?

மிஸ்டர் மியாவ்

ராஜ்கிரண் ஹீரோவாக நடித்துவரும் ‘பவர்பாண்டி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குநர் தனுஷ். ராமநாதபுரம் பகுதிகளில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்துமுடிந்திருக்கிறது. தயாரிப்பு, கால்ஷீட் என்று அனைத்தையும் பட்ஜெட்டுக்குள் முடித்துவிட்டார். படத்தில் ராஜ்கிரணின் சின்ன வயது கேரக்டரில் தனுஷ் நடித்திருக்கிறார். ஏப்ரல் ரிலீஸ்.  இயக்கத்திலும் டிகிரி முடித்துவிட்டார் தனுஷ்.

மியாவ் பதில்

‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறாரா?

மிஸ்டர் மியாவ்

ஜோதிகாதான் லீட் ரோலில் நடிக்கிறார். அவரைச் சுற்றித்தான் ஒட்டுமொத்த படமும் நகர்கிறது. ஜோதிகாவுக்கு ஜோடியாக ஜி.வி. நடிக்கவில்லை. ஜி.வி-யும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் அவ்வளவே. ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் சென்னையில் நடக்கிறது. அதுவும் முதன்முறையாக பாலா படம் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை முடிக்கிறது என்பது ஆச்சர்யத் தகவல். பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.