விகடன் வரவேற்பறை
நீதிக்கட்சி வரலாறுக.திருநாவுக்கரசு
இரண்டு தொகுதிகள் விலை

1,200 பக்கங்கள்: 1,078
வெளியீடு: நக்கீரன் பதிப்பகம், 1, அன்னை நாகம்மை தெரு,
மந்தைவெளி, சென்னை-28.

தி.க, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் தாய்க் கழகம், தென்னிந்திய நல உரிமைக் கழகம். 'ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தியதால் 'நீதிக் கட்சி’ என்று பெயர் பெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த 1920-ம் ஆண்டு, தேர்தலில் சென்னை மாகாணத்து ஆட்சியைப் பிடித்ததும் இந்தக் கட்சிதான். இதுவே திராவிடர் கழகம் என்று பின்னர் பெயர் மாற்றப்பட்டது. சலிப்பு ஏற்படுத்தாத நடையில் தொகுத்திருக்கும் க.திருநாவுக்கரசின் பணி வரலாற்று ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வலர்களுக்குமான நல்ல புதையல்!
பாலம்கலியாணசுந்தரம் இயக்கம்: சுபாஷ் கலியன்
வெளியீடு: தில்லை திரைக்களம்

சமூக சேவகர் பாலம் கலியாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம். சிறு வயதில் குரல் உடைந்து மன உளைச்சலால் தற்கொலைக்கு அவர் முயற்சித்தது, இந்திய-சீன யுத்தத்தின்போது எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை காமராஜரிடம் தேசிய நிவாரண நிதியாகக் கொடுத்தது, சுனாமி சமயம் ஐ.நா. சபை உதவிகள் வழங்க அவரைத் தொடர்புகொண்டது, ரஜினிகாந்த் தன் தந்தையாக அவரைத் தத்தெடுத்துக்கொண்டது என கலியாணசுந்தரத்தின் நெகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே ஆவணப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
ஒரு சிறந்த மனிதரின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவும் ஆவணப் படம்!
இங்கே காது கொடுக்கலாமா?
http://sarvadesavaanoli.blogspot.com

சர்வதேச வானொலிகளை ஒருங்கிணைக்கும்வலைப்பூ. வானொலிகள்பற்றி ஆதி முதல் அந்தம் வரை அனைத்துத் தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. உலகின் அனைத்து மூலைகளில் இருக்கும் தமிழ் வானொலிகள் பற்றியும், இணையத்தில் வானொலி தொடங்குவதுபற்றியும் பதிவு கள் உண்டு. எஃப்.எம்களின் சினிமா இசை மட்டுமே கேட்டுச் சலித்தவர்கள், ஒரு மாறு தலுக்கு இங்கே காது கொடுக்கலாம்!
ஆன்லைன் டயட்டீஷியன்!
www.dietitian.com

டயட் டிப்ஸ் கொடுக்கும் தளம். டயட் தொடர் பான உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் இலவச மாகப் பதில் அளிக்கிறார்கள். எடை போடாத இளம் பெண்கள், தாய்மார்கள், பாட்டிகள் என அனைவருக்கும் வழிகாட்டும் டிப்ஸ்கள் உண்டு!
மௌன குரு இசை: தமன் .s
வெளியீடு: வேகா மியூஸிக் விலை:

99

வாலி எழுதி, ரஞ்சித், ராகுல் நம்பியார், சாம், எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் என்று ஒரு குழுவே பாடியிருக்கும் 'புதுப்புனல்’ பாடலை... 'அட, நல்லாருக்கே!’ என்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே மனசுக்குள் எதிரொலிக்கிறது 'ஜம்புலிங்கமே ஜடாதரா...’ என்ற 'காசேதான் கடவுளடா’ படத்தின் பாடல். ராகுல் நம்பியார், ரஞ்சித் ரீட்டா, ரம்யா குரல்களில் வரும் 'என்ன இது’ பாடலில் காதல் அரும்பும் அனுபவத்தை எளிய வரிகளில் அளித்திருக்கிறார் நா.முத்துக் குமார். கார்த்திக், ஹரிணியின் குரல்களில் வரும் 'அனாமிகா’ ஓர் உற்சாக டூயட். தீம் மியூஸிக் ரொம்பவே சீரியஸ். படத்தில் மூன்றே பாடல்கள் என்பது ஆச்சர்யம்!