Published:Updated:

"அம்மாவா இருக்கிறதைவிட, நடிப்பு பெரிசு இல்லை!'' 'வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி

"அம்மாவா இருக்கிறதைவிட, நடிப்பு பெரிசு இல்லை!'' 'வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி

"அம்மாவா இருக்கிறதைவிட, நடிப்பு பெரிசு இல்லை!'' 'வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி

Published:Updated:

"அம்மாவா இருக்கிறதைவிட, நடிப்பு பெரிசு இல்லை!'' 'வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி

"அம்மாவா இருக்கிறதைவிட, நடிப்பு பெரிசு இல்லை!'' 'வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி

"அம்மாவா இருக்கிறதைவிட, நடிப்பு பெரிசு இல்லை!'' 'வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி

"நடிச்சே ஆகணும் என்கிற சூழ்நிலை எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. என்னைத் தேடிவந்த வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்தி குறிப்பிட்ட காலம் நடிச்சேன். கல்யாணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தேன். இப்போதான் மறுபடியும் நடிக்க முடிவெடுத்திருக்கேன்" எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகை வினோதினி. 'வண்ண வண்ண பூக்கள்' உள்ளிட்ட பல படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் புகழ்பெற்றவர்.

"சினிமாவிலிருந்து நீண்ட காலம் விலகியிருக்க என்ன காரணம்?" 

"கல்யாணமாகி குழந்தைப் பிறந்ததும், பொறுப்பான அம்மாவா இருக்கிறதுதான் முக்கியம்னு நினைச்சேன். அதனால்தான் நடிக்க வேண்டாம்னு முடிவுபண்ணினேன். கடைசியா, 'மகேஷ், சரண்யா மற்றும் பலர்'  படத்தில் நடிச்சு 10 வருஷம் ஆகிடுச்சு. இந்த இடைப்பட்ட காலத்துல சினிமா துறையினரோடு பெரிய தொடர்பில்லை. சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கலை. பலரும் என்னை மறந்திருப்பாங்க. சில சினிமா, சீரியல் வாய்ப்புகள் வந்தப்பவும் ஒப்புக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட விஷால் சார் அணிக்கு ஆதரவா வொர்க் பண்ணினேன். அப்போ, 'நீங்க மறுபடியும் நடிக்கலாமே'னு விஷால் சார் உள்பட பலரும் சொன்னாங்க. என் தரப்பு விளக்கத்தைக் கேட்டதும், சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க."

"உங்க சினிமா என்ட்ரி எப்படி நடந்துச்சு?"

"என் அம்மா, டிராமா ஆர்டிஸ்ட். அதனால், சினிமா துறையினர் பலருக்கும் என்னைப் பற்றி தெரியும். நாலரை வயசுல குழந்தை நட்சத்திரமா ஆரம்பிச்சது. 'மணல் கயிறு', 'புதிய சகாப்தம்' உள்ளிட்ட பல படங்களில் நடிச்சேன். சில வருட இடைவெளிக்குப் பிறகு, 'ஆத்தா உன் கோயிலிலே' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தேன். பாலுமகேந்திரா சாரின், 'வண்ண வண்ண பூக்கள்' படத்தில் ஹீரோயினா நடிச்சது நல்ல அடையாளத்தைக் கொடுத்துச்சு. தொடர்ந்து, கன்னடத்தில் பிஸியாகிட்டேன். 'உனக்காக எல்லாம் உனக்காக' உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன்."

"சீரியல்களில் பல ஆண்டுகள் ஆக்டிவா நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?"

"ரொம்ப நல்லாயிருந்துச்சு. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த என் அக்காவை ரெண்டு வருஷம் கூடவே இருந்து பார்த்துக்கிட்டேன். அவங்க மேலே நான் வெச்சிருந்த அன்பை விவரிக்கிறது கஷ்டம். அவங்க மறைவு இன்னைக்கு வரை எனக்குப் பெரிய இழப்பு. ஒருகட்டத்தில், வெளியூர் சினிமா ஷூட்டிங் போக நேரமில்லாம போனதால், சீரியல்களில் மட்டும் கவனம் செலுத்தினேன். அப்போ, சினிமா பிரபலங்கள்தான் சீரியலில் அதிகமா நடிப்பாங்க. சினிமாவுக்கும் சீரியலுக்கும் பெரிசா வேறுபாடு இல்லாத மாதிரி புகழ் கிடைக்கும். 'உடல் பொருள் ஆனந்தி'ல தொடங்கி, 'சித்தி', 'மறக்க முடியுமா?', 'குடும்பம்', 'சிரி சிரி கிரேஸி'னு கிட்டத்தட்ட 150 சீரியல்களில் நடிச்சிருப்பேன்."

"நீங்க நல்லா சமைப்பீங்க; சமையல் கலையில் அதிக ஆர்வம் உண்டுனு கேள்விப்பட்டோம்..."

(சிரிப்பவர்), "எனக்கு நல்லா சாப்பிடப் பிடிக்கும். அதனால், மத்தவங்களை தொந்தரவு செய்யாமல் நானே செய்துக்க நினைச்சேன். அப்போ சோஷியல் மீடியா கிடையாது. அதனால், சமையல் புக், தெரிஞ்சவங்க சொல்ற டிப்ஸ் எனத் தேடி தேடி கத்துப்பேன். சீரியல்களில் நடிச்சுட்டிருந்தப்போ, ஷூட்டிங் ஸ்பாட்ல சக ஆர்டிஸ்டுகளோடு சேர்ந்து சமைப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்போ, என் குழந்தைகள் மற்றும் கணவருக்குப் பிடிச்ச உணவுகளை சமைச்சு கொடுக்கிறேன். அவங்க ரசிச்சு சாப்பிடுறதைப் பார்த்து சந்தோஷப்படறேன்."

"நடிக்காத இடைப்பட்ட காலத்தில் பிரதானமான செயல்பாடுகள் பற்றி..."

"ஹோம் மேக்கராக என் பொறுப்பை நிறைவாக செய்துட்டிருக்கேன். ரெண்டு குழந்தைகளும் ஸ்கூல் போறாங்க. அவங்க தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்யறது, ஸ்கூல் மற்றும் டியூஷன் கூட்டிட்டுப்போய் வர்றது, ஹோம் வொர்க் செய்யவைக்கிறது, விளையாடறதுனு அதிகமான நேரத்தைக் குழந்தைகளோடுதான் செலவழிக்கிறேன். ஓர் அம்மாவா இருக்கிறதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு. அது வேலையே கிடையாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும் வரம். அதைவிட நடிப்பு பெருசு இல்லைனு எனக்குத் தோணுச்சு. அதனால், நடிக்காம இருந்துட்டோமே என்கிற வருத்தமே வந்ததில்லை. பெருசா மேக்கப் பண்ணிக்கவும் பிடிக்காது. எதார்த்தமான அம்மாவா இருக்கிறது பிடிச்சிருக்கு. குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்துட்டாங்க. அதனால், அடுத்த வருஷத்திலிருந்து நடிக்க முடிவு செய்திருக்கேன். ஜெனரேஷன் திங்கிங், குவாலிட்டி உள்ளிட்ட பல வகையிலும் சினிமா ரொம்பவே வளர்ந்திருக்கு. இந்தப் புதிய பரிமாணத்தில் வொர்க் பண்ண ஆசைப்படறேன்."

ரீ-என்ட்ரிக்கு வாழ்த்துகள்!