
News
ஓவியங்கள்: கண்ணா

``தலைவரைப் பழிவாங்கிட்டாங்க,
ஏன்... எப்படி?''
``தெர்மாகோல்ல கட்அவுட் வெச்சுத்தான்!''
- பா.ஜெயக்குமார்

``நடந்து முடிந்த ரெய்டு பற்றி என்ன சொல்றாங்க?''
``ஒண்ணும் வைரலாகலை தலைவரே!''
- அம்பை தேவா

``அவர்கிட்ட எந்த பிரச்சினையும் வச்சிக்காதேன்னு சொல்றியே... அவர் என்ன அரசியல் பின்புலம் உள்ளவரா? ''
``இல்ல. அஞ்சு வாட்ஸ்அப் குரூப், அஞ்சாயிரம் பேஸ்புக் ஃபிரண்ட்ஸ் அவருக்கு பின்னாடி இருக்காங்க!''
- ஏந்தல் இளங்கோ

``விசாரணை கமிஷன் வேணுமா.. எதுக்கு..?''
``உடைஞ்ச கட்சி சேர்ந்திருக்கே..?!''
- ஜெ.மாணிக்கவாசகம்