
எனக்கு இன்ஸ்பிரேஷன் ரஜினி!புதிய தொடர் - 1

“எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர்கள் இருவர். ஒருவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிறு வயதிலிருந்தே அவர் படங்களால் ஈர்க்கப்பட்ட நான், அவரது தீவிர ரசிகனாகவே மாறினேன். அவர்தான் என் ஹீரோ. பிரச்னை என்று வரும்போது அதையும் மனிதர்களையும் பிரித்துப் பார்த்து, அதைச் சரிசெய்ய வேண்டும். மனிதர்களை நேசிக்கவும், பொருள்களைப் பயன்படுத்தவும் செய்ய வேண்டுமே தவிர, மனிதர்களைப் பயன்படுத்தவும், பொருள்களை நேசிப்பதும் கூடாது என்கிற கொள்கைகளை நான் கடைப்பிடிக்கக் காரணம் ரஜினிதான். அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற என் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறியது. மற்றொருவர், ஜெஃப் பெசோஸ். என் பிசினஸ் குரு. ‘வாடிக்கையாளர்கள்தான் எல்லாம், அவர்களை மையமாக வைத்துதான் நாம் நம்முடைய பிசினஸைத் தீர்மானிக்க வேண்டும்’ என்கிற அவருடைய கொள்கையையே என் பிசினஸில் கடைப்பிடிக்கிறேன்.’’