சமூகம்
தொடர்கள்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

‘பாகுபலி’யில் காட்டிய கம்பீரம், பிரபாஸை அகில இந்திய நடிகராகவே மாற்றிவிட்டது. அதனால் அவரின் அடுத்த படமான ‘சாஹே’வில் நடிக்க, எல்லா மொழிகளிலும் பரிச்சயமான முகங்களாகத் தேடி வருகிறார்கள். முதல் கட்டமாக ‘கத்தி’யில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹீரோயினாக கத்ரீனா கைஃப் பெயர் பரிசீலனையில் இருக்கிறது. 

‘வேதாளம்’ படப்பிடிப்பின்போது அஜித்துக்குக் காலில் அடிபட்டது போல, ‘விவேகம்’ படப்பிடிப்பு முடியும் நேரத்தில் அஜித்தின் தோள் பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. ‘ஷூட்டிங்கே முதற்பணி, அதற்கே அர்ப்பணி’ என்ற மந்திரத்தைக் கடைபிடிக்கிறார் தல.

மிஸ்டர் மியாவ்

ரலட்சுமியும் விஷாலும் ‘மதகஜ ராஜா’ படத்தின்போதுதான் காதலர்களாகி, சமீபத்தில் பிரிந்தும் விட்டனர். படம் இன்னும் ரிலீஸாகவில்லை என்பது வேறு விஷயம்! காதலில் பிரிந்தாலும், இருவரின் நட்பு மட்டும் அப்படியே இருக்கிறது. லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’வில் விஷாலுக்கு வில்லியாக நடிக்கப் போகிறார் வரலட்சுமி. இந்தக் கேரக்டருக்கு வரு பெயரைச் சொன்னதே விஷால்தானாம்.

மிஸ்டர் மியாவ்

‘சங்கமித்ரா’விலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதற்குச் சம்பளத்தை உயர்த்திக் கேட்டதும், அதிகமாகக் கோபப்படுவதுமே காரணம் என்கிறார்கள். இப்போது ஸ்ருதிக்குப் பதிலாக சுந்தர்.சியின் தோழியான ஹன்சிகாவை நடிக்க வைக்கவும் பேசி வருகிறார்கள்.

80-களில் ஜொலித்த நடிகர்கள், நடிகைகள் ஒவ்வொரு வருடமும் சந்தித்துக்கொள்வது வழக்கம். இந்தமுறை சீனாவில் இந்தச் சந்திப்பை வைத்துக்கொள்ள திட்டம். ஜூன் மாதம் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, கமல், ரஜினி, மோகன்லால் போன்ற உச்ச நடிகர்கள் கலந்துகொள்வார்களா என்பது மட்டும் டவுட்.

துரை 80களில் எப்படி இருந்ததோ, அப்படியே செட் போட்டுப் பாடல் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படக்குழுவினர். ரஜினி, கமல், டி.ஆர். என்று 80களில் நடித்த ஹீரோக்களின் போஸ்டர்கள், பாடலின் பின்னணியில் வருகின்றன.

மிஸ்டர் மியாவ்

டிகை சாவித்திரி நடிப்பில் மட்டுமன்றி, உடல் பருமனிலும் கொஞ்சம் வெயிட்டான நடிகை. அதனால், இவரின் வாழ்க்கைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷை கிராஃபிக்ஸில் சாவித்திரி போலவே குண்டாகக் காட்ட இருக்கிறார்கள். 

‘வட சென்னை’யில் தனுஷைத் தவிர மற்றவர்கள் கமிட்டாவதும் விலகுவதுமாகவே இருக்கிறார்கள். சமந்தா, அமலா பால் இருவருமே இப்படி கமிட்டாகி  விலக, இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவருகிறார். அதுபோல விஜய்சேதுபதிக்குப் பதில் அமீர் நடிக்கிறார்.

‘திருட்டு பயலே’ படத்தில் நடித்த ஜீவன், சோனியா அகர்வால் இருவருமே இப்பொழுது ஃபீல்ட் அவுட் என்பதால், பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹாவை வைத்து இரண்டாம் பாகத்தை முடித்துவிட்டார் இயக்குநர் சுசி கணேசன். முதல் பாகம் போலவே கதை. ஆனால், வேறு கதைக்களம்.

மியாவ் பதில்

மிஸ்டர் மியாவ்

ரஜினி நடிக்கும் ‘காலா’ பாடல் படப்பிடிப்பு வீடியோ லீக்காகி இருக்கிறதே. படக்குழு இதை எப்படி எடுத்துக்கொள்கிறது?

‘கபாலி’ ஷூட்டிங் மலேசியாவில் நடக்கும்போதும் ‘நெருப்புடா’ பாடல் ஆடியோ இப்படி லீக்கானது. வெளிநாட்டில் பலத்த பாதுகாப்புடன் நடந்த ஷூட்டிங்கிலேயே இப்படி நடந்ததால், இந்தியாவில் இப்படி நிகழ்வதை இயக்குநர் பா.இரஞ்சித் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், பாதுகாப்பை மட்டும் அதிகரித்திருக்கிறார். இதனால் எழும் பரபரப்பில் ரஜினி பற்றிய அரசியல் சர்ச்சை தணியும் என்பதால், அவரும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.