பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கலக்குங்க கேர்ள்ஸ்!

கலக்குங்க கேர்ள்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலக்குங்க கேர்ள்ஸ்!

பு.விவேக் ஆனந்த்

ங்கிலாந்தில் நடந்துவரும் பெண்கள் உலகக்கோப்பையில் இந்தியாவின் வொண்டர் வுமன்கள் மாஸ் காட்டுகிறார்கள். சமூகவலைதளங்களில் திடீரென பெண்கள் கிரிக்கெட்டுக்குத் தாறுமாறாகக் கூடியிருக்கிறது கிரேஸ்!  இந்திய அணியை அடுத்த லெவலுக்கு அப்கிரேட் செய்திருக்கும் இந்த இளம் நட்சத்திரங்கள் யார்? 

கலக்குங்க கேர்ள்ஸ்!
கலக்குங்க கேர்ள்ஸ்!
கலக்குங்க கேர்ள்ஸ்!

இந்தியாவின் புது நாயகி

ஸ்மிருதி மந்தனா. முதல் பந்திலிருந்தே எதிரணிப் பந்துகளை விளாசித்தள்ளி ரன் குவிப்பது மந்தனாவின் ஸ்டைல். பவுண்டரி களையும் சிக்ஸர்களையும் நான்கு திசைகளில் பறக்கவிடுகிற அதிரடிக்காரி! மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மிருதிக்கு வயது 20-தான். அண்ணனைப் பார்த்து, ஏழு வயதில் கிரிக்கெட் ஆடவந்தவர். ஒன்பது வயதில் மகாராஷ்டிரா ஜூனியர் அணிக்குள் நுழைந்துவிட்டார். 16 வயதில் இந்திய அணியில் இடம் கிடைத்துவிட்டது. ஸ்மிருதி இயல்பில் வலது கை ஆட்டக்காரர். ஆனால், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனின் பேட்டிங் ஸ்டைலைப் பார்த்து அதில் ஈர்க்கப்பட்டு லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்வுமன் ஆகியிருக்கிறார். உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் முதன்முதலில் இரட்டைச்சதம் எடுத்த பெண். உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் உள்ளூர் அணியான இங்கிலாந்துக்கு எதிராக. ஆனால், மந்தனா அஞ்சாமல் அடித்து நொறுக்கினார். மந்தனாவின் ஆட்டத்தில் இந்தியா எளிதில் வென்றது. அந்த ஆட்டத்தில் 10 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர், அடுத்த ஆட்டத்தில் சதமடித்து ஏமாற்றத்தைச் சமன்செய்தார். `நடிகைகளே, மாடல்களே ஒதுங்கிக்கொள்ளுங்கள். எங்களுக்கு புதிய நாயகி கிடைத்துவிட்டார்’ என ஸ்மிருதியின் படங்களைப்போட்டு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மந்தனாவைக் கொண்டாடுகிறார்கள்!

கலக்குங்க கேர்ள்ஸ்!

அட்டகாச ஆல்ரவுண்டர்

தீப்தி ஷர்மா. இடது கை பேட்ஸ்வுமன், வலது கை பந்துவீச்சாளர். இந்தியாவின் நம்பர் 1 ஆல்ரவுண்டர். கடந்த மே மாதம் நடந்த அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீப்தி குவித்த ரன்கள் எவ்வளவு தெரியுமா? 188. பெண்கள் கிரிக்கெட்டில் உலகிலேயே இரண்டாவது அதிகபட்ச ரன் இதுதான். இளம் வயதிலேயே ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றி, சாதனைப் படைத்தவரும் தீப்திதான். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது தீப்தியின் ரோல்மாடல் மித்தாலி ராஜ். தீப்திக்கு சிறிய வயதிலே கிரிக்கெட் ஆசை வந்ததற்கு மித்தாலிதான் காரணம். மித்தாலியின் துல்லியமான ஷாட்களில் ஈர்க்கப்பட்டு பேட் பிடிக்க ஆரம்பித்தார். இன்று மித்தாலி தலைமையின் கீழ், இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் ஆடிக்கொண்டிருக்கிறார். மிடில் ஓவர்களில் அட்டகாசமாகப் பந்து வீசும் தீப்தி ஷர்மா, மித்தாலியின் இளம் அணிக்குப் பெரிய சொத்து!

கலக்குங்க கேர்ள்ஸ்!

மிஸ்.மிடில் ஆர்டர்

ஹர்மன்ப்ரீத் கவுர். ஆஸ்திரேலியாவின் வுமன்ஸ் பிக்பாஷ் லீக் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி. 28 வயதாகும் பஞ்சாப் சிங்கம். ஷேவாக்போல விளையாட வேண்டும் என்ற ஆசையின் காரணமாக கிரிக்கெட் பக்கம் வந்திருக்கிறார். டி20 ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயரெடுத் திருக்கும் ஹர்மன்ப்ரீத் ஒருநாள் போட்டிகளிலும் அபாரமாக ஆடுகிறார். அதிரடிதான் ஹர்மன்ப்ரீத்தின் அடையாளம்.  மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஹர்மன் அதிரடியாக மட்டுமல்ல, தேவைப்பட்டால் அமைதியாகவும் ஆடக்கூடியவராக இருக்கிறார். பேட்டிங் ஆல்ரவுண்டராக மிளிர்வதால், அணியில் தவிர்க்கவே முடியாத வீராங்கனையாக உருவெடுத் திருக்கிறார். மித்தாலியின் ஓய்வுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் தான் இந்திய அணிக்கு கேப்டன் ஆவார் என்கிறார்கள்! 

கலக்குங்க கேர்ள்ஸ்!
கலக்குங்க கேர்ள்ஸ்!

சுழல் ராணி

ராஜேஸ்வரி கெயிக்வாட். 26 வயதாகும் ராஜேஸ்வரி ஷிவானந்த் கெயிக்வாட் இடது கை சுழற்பந்து வீச்சாளர். கர்நாடகாவில் உள்ள விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கிரிக்கெட் ஆடியதே கிடையாது. ஈட்டி எறிதலில் மாவட்ட அளவில் ஜூனியர் சாம்பியனாக இருந்தவர், பின்னாளில் வட்டு எறிதலிலும் வாலிபாலிலும் அதிகமாகக் கவனம் செலுத்தியிருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட்டை வேடிக்கைப் பார்த்தவருக்கு பின்னாளில் அதன்மீது ஆர்வம் வந்து, இப்போது அதுவே வாழ்க்கையாகிவிட்டது. ஆரம்பத்தில் பேட்ஸ்வுமனாக விளையாட ஆரம்பித்தவர், சுழற்பந்து வீச்சில் கிடைத்த வெற்றிகளால், முழுநேர பந்துவீச்சாளரானார். 22 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஸ்லோ பிட்ச்களில் ராஜேஸ்வரியின் பந்துகளுக்கு பதில் சொல்வது  எதிரணி பேட்ஸ் வுமன்களுக்குப் பெரும் சவால். இப்போது நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்!

கலக்குங்க கேர்ள்ஸ்!

போராளி பவுலர்

ஏக்தா பிஷ்ட். உத்தரகான்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏக்தா பிஷ்ட் பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர். ஏக்தாவின் அப்பா குந்தன் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். ஏக்தா ஆறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார். தெருக்களில் பையன்கள் கூட்டத்தில் ஏக்தா கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்த உறவினர்கள் குந்தனைத் திட்டியிருக்கிறார்கள். ஆனால், ஏக்தாவின் கனவுக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தார் குந்தன். பள்ளி அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகளில் அவர் பங்கெடுப்பதற்காகத் தனியாக டீக்கடை ஆரம்பித்திருக்கிறார். 2011-ல்தான் முதன்முறையாக இந்திய அணிக்கு விளையாடினார் ஏக்தா. இவரது புத்திசாலித்தனமான பந்துவீச்சில் பேட்ஸ்வுமன்கள் திணறினார்கள். இந்த உலகக்கோப்பையின் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஏக்தாவின் பௌலிங் அமர்க்களமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு வெறும் 170 ரன்களைத்தான் இலக்கு வைத்தது இந்தியா. ஆனால், ஏக்தா பிஷ்ட் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வீழக் காரணமாக இருந்தார்!
 
தப்பாத தடுப்பாட்டம்

பூனம் ராவுத். அப்பாவின் ஆசைக்காக கிரிக்கெட்டர் ஆனவர் பூனம் ராவுத். கிரிக்கெட்டைப் பொருத்தவரையில் நிலைத்து நின்று ஆடுகிற பேட்ஸ்வுமன் மிகவும் முக்கியம். எந்தச் சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் விக்கெட்டை விடாமல் எதிரே நிற்கும் பேட்ஸ்வுமனுக்குத் துணிவைத் தருவதில், பூனம் ராவுத் வல்லவர். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டமொன்றில் தீப்தி ஷர்மாவும் இவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 320 ரன்களைச் சேர்த்தனர். நடந்துவரும் உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இவர் 86 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் அடித்த 47 ரன்கள் மிக முக்கியமானவை!