
மிஸ்டர் மியாவ்

தனுஷ் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான, ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இந்த வார வைரல் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது. கனடாவைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கியிருக்கும் படத்தில், ‘அஜாதசத்ரு’ என்ற கேரக்டரில் தனுஷ் நடித்திருக்கிறார்.


சமுத்திரக்கனியை ஹீரோவாக்கி ‘ஏமாலி’ படத்தை இயக்கியுள்ள வி.இஸட்.துரை அடுத்ததாக சிம்பு நடிக்கும் படத்தையும், விக்ராந்த் - கதிர் இணைந்து நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கவிருக்கிறார். சிம்பு நடிக்கும் படத்துக்கு, ‘ஊரே அலறுது’, விக்ராந்த் - கதிர் நடிக்கும் படத்துக்கு ‘ரெட்டை’ என டைட்டில்கள்.

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் ஷூட்டிங், அஜ்மீரில் நடைபெற்ற பாடல் காட்சிகளுடன் முடிந்துள்ளது. ஷூட்டிங் முடிந்த பிறகு, அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற தர்காவில் நயன்தாரா வழிபட்டார். இந்தப் புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.


செம எனர்ஜியோடு நடித்துவருகிறார், வரலட்சுமி. நடித்துக்கொண்டிருக்கும் படம், வெளியாகவிருக்கும் படம் என்ற பட்டியலில்... ‘எச்சரிக்கை’, ‘சத்யா’, ‘சக்தி’, ‘காதல் மன்னன்’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘சண்டக்கோழி -2’, ‘அம்மாயி’ என ஏழு படங்கள் வரிசைகட்டியுள்ளன.

‘மெர்சல்’ படத்துக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி யிருக்கிறார் விஜய். இதில் விஜய்க்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க, மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை அணுகியிருக்கிறார்கள்.
மியாவ் பதில்

பிக்பாஸ் பிரபலங்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?
ஓவியா, சில படங்களில் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார். சினேகன் - ஓவியா இணையும் ஒரு படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. ‘சிலம்பாட்டம்’ சரவணன் இயக்கும் படத்தில் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகம் ஆகிறார், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ். இப்போது, ஹரீஷ் - ரைசா இருவரும் இணைந்து நடிக்கும் பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ‘கிரகணம்’ படத்துக்குப் பிறகு இளன் இயக்கவிருக்கும் இந்தப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை. ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகவிருக்கிறது படம்.