தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

என்ன செய்தார்கள் இவர்கள்?

என்ன செய்தார்கள் இவர்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார்கள் இவர்கள்?

ரீவைண்ட் வெ.வித்யா காயத்ரி

‘டீன் ஏஜ்ஜை தாண்டியதுமே கொஞ்சம் வயதான ஃபீலிங் வருமே...அப்படி, உங்களின் 20-வது வயதை ரீவைண்ட் செய்து சொல்லுங்களேன்’ என்று படபட பட்டாம்பூச்சி ஹீரோயின்ஸ் சிலரிடம் கேட்டோம்...

என்ன செய்தார்கள் இவர்கள்?

ஜனனி ஐயர்

‘`நான் அப்போ இன்ஜினீயரிங் படிச்சுட்டிருந்தேன். பார்ட் டைமா மாடலிங்கும் பண்ணிட்டு இருந்தேன். அடிக்கடி காலேஜை `பங்க்’ பண்ற அக்மார்க் ஸ்டூடன்ட் நான். ஒருநாள் காலேஜுக்கு கட் அடிச்சுட்டு, பக்கத்துல இருக்கிற தீம் பார்க் போனோம். சாயங் காலம் லேட்டா வீட்டுக்குப் போய் மாட்டிக்கிட்டேன். ஆனாலும், பேசியே சமாளிச் சுட்டேன். காலேஜ் தேர்ட் இயர் படிக்கும்போது கேம்பஸ்ல செலக்ட் ஆகிட்டேன். `கிடைச் சிருக்கிற வேலையைப் பார்க்கலாமா... இல்லை, கோடம் பாக்கம் பக்கம் கரை ஒதுங்க லாமா’னு ஒரே யோசனை. `சரி, பிடிச்சதைச் செய்வோம்’னு சினிமாவை `டிக்’ செய்தப்போ தான் பாலா சாரின் ‘அவன் இவன்’ வாய்ப்பு கிடைச்சது. பயணம் தொடர்ந்துட்டு இருக்கு!”

என்ன செய்தார்கள் இவர்கள்?

அதுல்யா ரவி

‘`என் 20 வயசுல, தமிழ்நாட்டுல எல்லா ஆடுகளும் போய் விழுற இன்ஜினீயரிங் மந்தையில நானும் சேர்ந்து படிச்சுட்டு இருந்தேன். அப்போ எங்க காலேஜ்ல ஒரு ஈவன்ட் நடத்தினாங்க. அதுல எங்க க்ளாஸ் கேர்ள்ஸும் பாய்ஸும் அசத்தல் பர்ஃபாமென்ஸ் கொடுத்து ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் டிராபி ஜெயிச்சதை மறக்கவே முடியாது. காலேஜ்லயே எங்க க்ளாஸ்தான் கெத்தா இருப்போம். அப்போவெல்லாம், நான் ஹீரோயின் ஆவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. ஆனா, என் விருப்பங்களுக்கு எப்பவும் பலமா இருக்கிற அம்மா அப்பா கிடைச்சதுனால இன்னிக்கு நானும் ஹீரோயின்தான், நானும் ஹீரோயின்தான்! அவங்களைப் பெருமைப்படுத்துற அளவுக்கு ஏதாவது செய்யணும்கிறதுதான் என் ஆசை!”

என்ன செய்தார்கள் இவர்கள்?

நந்திதா

``20 வயசுல நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு யோசிக்கிறேன். ஆங்... காலேஜ் படிச்சுட்டு இருந்தேன். காலையில ஏழு மணியிலேருந்து பன்னிரண்டு மணி வரை காலேஜ். அதுக்குப் பிறகு மாடலிங், விளம்பரப் படம்னு பிஸியா வேலை இருக்கும். 24 மணி நேரம் போதாத அளவுக்கு ஓடிட்டு இருப்பேன். நல்லா படிக்கிற பொண்ணுங்கிறதால, ஷூட் இல்லாத நாள்களில் படிப்பு, புராஜெக்ட்னு இருப்பேன். என்ன சந்தோஷம்னா, அந்த வயசுலயே என் வீட்டுக்கு சம்பாதிச்சுக் கொடுக்க ஆரம்பிச்சுட்டேன்!”