2017 ஸ்பெஷல்
Published:Updated:

அன்பும் அறமும்!

அன்பும் அறமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும்!

அன்பும் அறமும்!

மக்குள் போர்க் குணத்தை விதைத்திருக்கிறது 2017. `ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்ற பண்பாட்டின்

அன்பும் அறமும்!

குரலோடுதான் இந்த ஆண்டு தொடங்கியது. இளைஞர்களின் ஒன்றுகூடலை, இணையத்தின் வலிமையை, தமிழர்களின் ஒற்றுமையை உலகமே வியந்து பார்த்துப் பாராட்டிய உன்னத வருடம் இது. ஜல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை, டாஸ்மாக், நெடுவாசல் என மக்களின் விருப்பங்களுக்கு மாறாக ஆளும்வர்க்கம் அதிகாரத்தைத் கட்டவிழ்த்தபோதெல்லாம் அமைதி வழியில் போராடி ஆட்சியாளர்களையும் அறம் நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த ஒவ்வொரு போராட்டத் தமிழனையும் வாழ்த்துகிறான்; வரவேற்கிறான் விகடன். 

2017- தமிழக, இந்திய அரசியல் வரலாற்றிலும் மிக முக்கியமான ஆண்டு. அரசியல் அரங்கில் பலம் வாய்ந்த ஆளுமைகளாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா ஆகியோரின் இடங்களுக்கு இப்போது புதியவர்கள் வந்துவிட்டார்கள். இவர்கள் உண்மையிலேயே அந்த ஆளுமைகளின் இடத்தை நிரப்பத் தகுதியானவர்கள்தானா என்ற கேள்விகள் ஒருபுறம் இருப்பினும்,  புதிய அரசியல் அனுபவத்தை அடைவதற்கு நாம் தயாராக வேண்டும்.

சமூகம், அரசியல் போலவே சுற்றுச்சூழலிலும் மாற்றங்கள் நிகழ்வதால் பருவநிலை மாற்றங்களும் நம்மைப் பேரிடர்களுக்குத் தயார்ப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. புயல், பெருவெள்ளம், வறட்சி...என்று, ஒன்றிலிருந்து சுதாரிப்பதற்குள் இன்னொன்று வந்துவிடுகிறது. இயற்கைப் பேரிடர்களிலிருந்து நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்மாதிரித் திட்டங்களும்தான் மிக அவசியம். அதை அரசுக்கு உணர்த்துவதிலும், உரக்கச்சொல்வதிலும் குடிமக்களாகிய நமக்கும் பெரிய பங்கு உண்டு.

இப்படி, கடந்த ஆண்டில் அரசியல், சமூகம், பொருளாதாரம், வாழ்க்கைமுறை என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் கால மாற்றம் தன் அடையாளத்தை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது. 

‘எந்த மாற்றங்கள் நல்லவை. எந்த மாற்றங்கள் கெட்டவை’ என்று கணக்கிடுவது சற்றே சவாலான விஷயம். காரணம், ஒருவருக்கு நன்மைதரக்கூடியதாக இருக்கும் மாற்றம், இன்னொரு பிரிவினருக்கு இன்னல் தரக்கூடியதாக இருக்கக்கூடும். ஆனால், மாற்றம் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. காரணம், விதை தன்னை உருமாற்றிக்கொண்டால்தான் செடியாக மாற முடியும். புழு தன்னை உருமாற்றிக்கொண்டால்தான் பட்டாம்பூச்சியாக உருவெடுக்க முடியும்.

மகாத்மா சொன்னதைப் போல, ‘நாம் காண விரும்பும் மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பிப்போம்.’ அன்பின் வழியில், அறத்தின் பாதையில் நம்பிக்கையோடு புத்தாண்டைத் தொடங்குவோம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!