2017 ஸ்பெஷல்
Published:Updated:

கலாய் இலக்கியம்!

கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ்

கலாய் இலக்கியம்!

புது வருடம் பிறந்துவிட்டது,  இன்னும் புது இந்தியாக்கள் பிறப்பதற்கான கால அட்டவணையைத் தயார் செய்யவில்லை. அட்லஸ் மேப்பில் நான்கு நாடுகளைச் சிவப்பு நிற மார்க்கரால் குறித்துவைத்திருக்கிறேன். அதிலும் `அன்டார்ட்டிகா’ எனும் பெரிய நாடு ஒன்று இருக்கிறதாம். அதை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறேன். அதை எப்படி இவ்வளவு நாளாகக் கவனிக்காமல் விட்டேன். சீக்கிரமே அன்டார்ட்டிகாவுக்குச் சென்று, அந்த நாட்டின் பிரதமரோடு செல்ஃபி தட்ட வேண்டும். ஊதாப்பூ கலர், ராமர் பச்சை கலர், ஆரஞ்சு கலர்களில் புது ரூபாய் நோட்டு வெளியிட்டாயிற்று. பஞ்சுமிட்டாய் கலரிலோ, மோர்க்குழம்பு கலரிலோ அடுத்து புது ரூபாய் நோட்டு வெளியிட வேண்டும். தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியாவைப் போன்று புதுத் திட்டம் ஒன்றையும் கொண்டுவர வேண்டும். அதற்கான பெயர்களை எழுதிவைத்துவிட்டேன். சீக்கிரமே சீட்டு குலுக்கித் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு இத்தனை வேலைகளா, என்னை நினைத்தால் எனக்கே அழுகை வருகிறது. ப்ச்ச்ச்!

இப்படிக்கு,
நரேந்திர மோடி


இடம் : சர்வதேச வான்வெளி.

கலாய் இலக்கியம்!

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் `ரமணா.’ அந்தப் படத்தின் முதல் காட்சியிலேயே, மீடியா ப்ளேயரில் டைப் செய்து பகீர் கிளப்புவார் கேப்டன். அந்தக் காட்சி, உயர் அதிகாரிகளைப் பார்த்து `இப்பதான் இதையே கண்டுபிடிக்கிறீங்களா..?’ என யூகிசேது கேட்பது, `யாருய்யா அவரு, எனக்கே அவரைப் பார்க்கணும்போல இருக்கு’ என பஞ்சாபி போலீஸ் ஃபீல் ஆகும் காட்சி, `மன்னிப்பு’ வசனம் எல்லாமே மீம் க்ரியேட்டர்களின் ஃபேவரைட்ஸ். ஆனால், மோஸ்ட் ஃபேவரைட் என்னவோ, ஆஸ்பத்திரிக் காட்சியின் இறுதியில் வரும் வசனம்தான். `அதை மட்டும் சொல்லிட்டா போதுமே’ என நாக்கை மடக்கி கேப்டன் நக்கலடிக்கும் டெம்ப்ளேட், சமூக வலைதளங்களில் தெறி வைரல்! `தலை சொட்டையாகிடுச்சுனா போதுமே, உடனே பிரெஞ்சு தாடி வெச்சிருவீங்களே’ என்பது உட்பட இந்த ஆண்டு இந்த டெம்ப்ளேட்டை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் மீம் போட்டுக் குவித்தனர் நெட்டு குடிஸ்!

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

.தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்ந்த இந்தக் கேள்விகளுக்கு, கூகுள் உதவியில்லாமல் பதில் சொல்லுங்க பார்ப்போம்?

* தீபாவின் கணவர் மாதவன் ஆரம்பித்த கட்சியின் பெயர் என்ன?

* அமைச்சர் சி.வி.சண்முகம் எந்த அணியில் இருக்கிறார்?

* தர்மயுத்தம் என்றால் என்ன?

* `அ.தி.மு.க அம்மா அணி’யின் எதிர் அணியாக இருந்த அணியின் பெயர் என்ன?

* இதுவரை எத்தனை பேர் ஜெயலலிதா சமாதியின் முன்பு சபதம் எடுத்திருக்கிறார்கள்?

* கூவத்தூர் ரிசார்ட்டில் அமைச்சர்கள் ஆடிய விளையாட்டுகள் எத்தனை?

* சசிகலா, எத்தனை முறை சமாதியில் அடித்து சத்தியம் செய்தார்?

* தீபா, `சின்னம்மா’வா... `சின்ன அம்மா’வா, `குட்டிம்மா’வா, `குட்டி அம்மா’வா?

* இன்னும் எத்தனை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கள் மிச்சம் இருக்கின்றன?

* கூவத்தூர் ரிசார்ட்டில் எத்தனை நாள்கள் அமைச்சர்கள் தங்கியிருந்தார்கள்?

* அ.தி.மு.க-வில் உள்ள ஸ்லீப்பர் செல்களின் எண்ணிக்கை என்ன?

* செல்லூர் ராஜுவின் தெர்மாகோல் திட்டத்தால், வைகை அணையில் எத்தனை கன அடி நீர் ஆவியாகாமல் தடுக்கப்பட்டது?

* சசிகலா குடும்பத்தில் எத்தனை பேர் அரசியலில் இருக்கிறார்கள்?

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

ள்ளியில் மாறுவேடப்போட்டி என்றாலே ரேஷனில் இலவசமாகக் கொடுத்த பழைய வேட்டியைக் கிழிக்க ஆரம்பித்துவிடுவார்கள் நம்ம ஊர் பெற்றோர்கள். கிழிந்த வேட்டியை இடுப்பில் சுற்றி, கண்ணில் கண்ணாடியும் கைக்குக் கம்பையும் கொடுத்தால் காந்தித் தாத்தா! இப்படி சிம்பிளாக சீனை முடித்துவிடுவர் நம் நாட்டிலே! ஆனால், கலிஃபோர்னியாவில் உள்ள ஷோலோம் பெர் சாலமன் என்பவர், தன் ஒன்பது மாத மகளுக்கு விதவிதமாக வேடமிட்டு போட்டோ எடுப்பதையே முழுநேர வேலையாகச் செய்துகொண்டிருக்கிறார். அவரும் அவரது குட்டிப் பாப்பாவும் வெவ்வெறு கெட்டப்புகளில் வெரைட்டியாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்கள் எல்லாமே, சமூக வலைதளங்களில் வைரலோ வைரல்.  சேட்டை ஃபேமிலி சார் இவங்க!

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

`குருவி’ படத்தில் தன் அப்பா மற்றும் பெரும்கூட்டத்தோடு கொட்டும் மழையில் கடப்பாவிலிருந்து கிளம்பிய வெற்றிவேல், 45 ரயில்வே க்ராஸ்களைத் தாண்டி நடந்தே சென்னைக்கு வந்தடைந்தார். பிறகு, கோச்சாவின் தங்கை தேவியைத் திருமணம் செய்துகொண்டு `திட்டமிட்ட குடும்பம், திகட்டாத இன்பம்’ என வாழ்ந்துகொண்டிருந்தார். ரேஸ்கார் ஆக்ஸிலேட்டரை வாயாலயே கடித்து இழுத்து இந்தியாவைச் சுற்றிவந்து கின்னஸ் சாதனை படைத்தார். இதற்கு நடுவில் தண்ணீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அவரே இறங்கி அதையும் சரிசெய்துகொடுத்து சமூகசேவை செய்துவந்தார். ஒருமுறை, ஆக்ஸிலேட்டரை வாயில் வைத்து இழுக்கும்போது கடைவாய்ப் பல் கம்பியோடு கழன்றுவர, அதிர்ச்சியாகிவிட்டார். `கடைவாய்ப் பல்தானே போச்சு, கடப்பாக் கல் பிசினஸ்தான் கைவசம் இருக்கே’ என்ற நம்பிக்கையோடு பிசினஸில் இறங்கியவர், இப்போது அக்கட தேசத்தில் மிகப்பெரிய பிசினஸ் காந்தம். எவ்வளவு பணம் சேர்ந்தாலும் இன்னும் கார், பைக்கில் போகாமல்  பில்டிங்விட்டு பில்டிங் தாண்டித்தான் அலுவலகம் சென்றுகொண்டிருக்கிறார்.