2017 ஸ்பெஷல்
Published:Updated:

புக்மார்க்

புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
News
புக்மார்க்

புக்மார்க்

ழுத்தாளர், பேச்சாளர், பயணங்களின் காதலன் என்று பல அவதாரங்களில் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்திவரும் எஸ்.ராமகிருஷ்ணன் மீண்டும் பதிப்பாளராகியிருக்கிறார். நூறு புத்தகத்திற்கு மேல் எழுதிவிட்ட எஸ்.ரா அவருடைய எல்லாப் புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டுமென்கிற நோக்கத்திற்காகவும், அவருடைய படைப்புகள் எல்லா வடிவங்களிலும் வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் அவருடைய பிரபல கட்டுரைத் தொகுப்பான ‘தேசாந்திரி’ என்கிற பெயரிலேயே பதிப்பகம் ஆரம்பித்திருக்கிறார்.  இப்பதிப்பகத்தின் வாயிலாக எஸ்.ரா, தன்னுடைய நூல்கள் மட்டுமன்றி மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றும் உலக இலக்கியங்களை மொழிபெயர்த்தும் பதிப்பிக்க விருக்கிறார்.. #வெல்கம்பேக்

புக்மார்க்

ல்லாத் துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது கொடுக்க வேண்டுமென, தன்னுடைய உயிலில் எழுதி வைத்துவிட்டு இறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல். அவர் குறிப்பிட்டிருந்த பட்டியலில் இலக்கியமும் ஒன்று. 1901-ம் ஆண்டிலிருந்து இதுவரை 110 பேர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கியிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டின்படி ஒரு நோபல் பரிசின் பணமதிப்பு ஒன்பது மில்லியன் க்ரோனா (ஸ்வீடன் பணம்). இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்!

சொட்டாங்கல் -  நாவல்

புக்மார்க்

இஸ்லாமியப் பின்னணியில் தமிழில் புனைகதைகள் வந்திருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு. அந்தவகையில் ‘சொட்டாங்கல்’ இஸ்லாமியப் பின்னணியோடு மதுரை வரலாற்றின் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பற்றிப் பேசியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தர்கா, முஸ்லிம்களின் மாந்திரிக நம்பிக்கைகள் ஆகியவற்றை விளக்கும் விதம் குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வெவ்வேறு காரணங்களுக்காக மதுரை நகரத்தின் மையப்பகுதியில் குடியேறியவர்களின் சந்ததி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது என்பதை நுட்பமாகவும் சுவாரஸ்யமாகவும் விவரித்திருக்கிறார் அர்ஷியா.  மதுரையை அரசியல் செல்வாக்கும் ரவுடித்தனமும் எப்படி ஆட்டிப்படைத்தன, நில ஆக்கிரமிப்பு தொடங்கி பல குற்றங்கள் எப்படி அரசியல் செல்வாக்கின் பின்னணியில் நிகழ்த்தப்பட்டன என்று விளக்குவது முக்கியமானது. சமகால அரசியல் முறைகேட்டைப் பேசிவிட்டு, அதை ஃபேன்டசி மூலம் அணுகுவது இந்த நாவலின் முக்கியமான பலவீனம்.

ஆசிரியர்: எஸ்.அர்ஷியா, வெளியீடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002, பக்கங்கள்: 264, விலை: 220 ரூபாய்

புக்மார்க்

* நோபல் பரிசில் shared nobel prize என்றொரு வகைமை இருக்கிறது. இரண்டு எழுத்தாளர்கள் ஒரு நோபல் பரிசைப் பகிர்ந்துக்கொள்ளும் முறை. இதுவரை நான்குமுறை அதுபோல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எரிக் எக்சல் மற்றும் டேக் ஹேமர்ஸ்கால்ட் என்கிற இரண்டு எழுத்தாளர்களுக்கு மட்டுமே அவர்கள் இறந்ததற்குப் பிறகு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு நோபல்பரிசு வழங்கக்கூடாதென்று 1974-ல் முடிவெடுக்கப்பட்டு உயிரோடிப்பவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்கிவருகிறார்கள்.

*
 
இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கியவர்களில் பெரும்பாலானோர் ஜூனில் பிறந்தவர்கள்.

இதுவரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கியவர்களின் சராசரி வயது 65.

  இளம்வயதிலேயே இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கியவர் ‘ருட்யார்ட் கிப்ளிங்’. நாற்பத்தியோராவது வயதில் ‘ஜங்கிள் புக்’ என்கிற நூலுக்காக 1907-ம் ஆண்டு நோபல்பரிசு பெற்றார்.

  விருதுக்குத் தேர்வு செய்யலாமா வேண்டாமா என்று நோபல் விருதுக் குழுவினர் பகிர்ந்து கொள்ளும் கருத்துகள் ஐம்பது வருடங்களுக்கு இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது நோபல் கமிட்டியின் முக்கிய விதிகளுள் ஒன்று.

  இதுவரை இரண்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசு வேண்டாமென மறுதலித்திருக்கிறார்கள். ஒருவர் ரஷ்யக் கவிஞர் போரிஸ் பெஸ்தர்நக். அரசியல் காரணங்களுக்காக விருதை நிராகரித்தார். அடுத்தவர் ழான் பால் சார்த்தர். எந்தொரு விருதின் மீதும் நம்பிக்கையற்றவர் என்பதால் இவர் பரிசை வாங்கவில்லை.

  இதுவரை யாருக்கும் இரண்டுமுறை நோபல் பரிசு கிடைத்ததில்லை.

  1914, 1918,1935,1940,1941,1942, 1943 ஆகிய ஏழு வருடங்களில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. காரணம், அந்தக் குறிப்பிட்ட வருடங்களில் நோபல் பரிசுக் குழு சிறந்த படைப்பாக எதையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதே.