
இவர்கள் இப்படிச் சொன்னார்கள்!

பசுப்பாதுகாப்பு என்ற பெயரால் மக்களைப் படுகொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நரேந்திர மோடி, பிரதமர்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியுடன் மோதுவதற்கான வலிமை யாருக்கும் கிடையாது. அவர்தான் மீண்டும் பிரதமர் ஆவார்.
நிதீஷ் குமார், பீகார் முதல்வர்

ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளைக் குவித்தார் என்பதைத் தவிர ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க என்ன இருக்கப்போகிறது?
மருத்துவர் ராமதாஸ், பா.ம.க நிறுவனர்

ஜெயலலிதா முதல்வரான பின்னர்தான் நாங்கள் பணம் சம்பாதித்தோம் என்று கூறுவதெல்லாம் தவறான கருத்து. 1989-ஆம் ஆண்டு திமுக ஆட்சி நடக்கும்போதே வங்கியில் 90 லட்சம் ரூபாய் லோன் பெற்று பிசினஸ் செய்திருக்கிறேன்.
டி.டி.வி தினகரன்

பிரிட்டன் பிரதமர் தெரஸா மே என்மீது கவனம் செலுத்த வேண்டாம். பிரிட்டனுக்குள் நிகழ்ந்துவரும் அழிவுகரமான தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் கவனம் செலுத்த வேண்டும்’
டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர்

அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர்கூட சென்னையில் தேங்கவில்லை. அமெரிக்கா, லண்டனில் எடுக்கப்பட்டதைவிட சென்னையில் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டோம்.
வேலுமணி, தமிழக அமைச்சர்

நடிகர் கமல்ஹாசன், அரவிந்த் கெஜ்ரிவாலையும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பையுமே சந்தித்தாலும் சரி. எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
- டி.ஜெயக்குமார், தமிழக அமைச்சர்

இப்போது என்னை மிகவும் இழிவுபடுத்தி சோஷியல் மீடியாவில் மீம்ஸ் போடுகிறார்கள். என் வீட்டு முகவரியைப் போட்டு, தொலைபேசி எண்ணைப் போட்டு, நெருப்பால் இவனைச் சுடுங்கள் என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். ஒரு லைக்குக்கு 300 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால், நான் பிரளயங்களையும் எரிமலைகளையும் நேரடியாகச் சந்தித்துவிட்டு வாழ்கிறவன்.
- வைகோ, ம.தி.மு.க

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டன. ஆசியக் கண்டத்தில் உள்ள ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அன்னா ஹசாரே, சமூக சேவகர்

நான் இசையமைத்த நாற்பது வருட காலமும் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர்களுடன் பாடி, இசையமைத்து ஒலிப்பதிவு செய்வதென்பது இந்த உலகில், இந்தப் பேரண்டத்தில் நடக்கப்போவதில்லை.
- இளையராஜா

அரசியலில் எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். மு.க. ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நிர்வாகி. பா.ம.க அன்புமணி நல்ல மனிதர். திருமாவளவன் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர். சீமான் சிறந்த போராளி.
- ரஜினிகாந்த்

தினகரன் குடும்பத்தில்தான் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அவர்கள் அளித்த தகவலை வைத்தே போயஸ் தோட்டத்தில் சோதனை நடந்திருக்க வேண்டும்.
- ஹெச்.ராஜா

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளுக்கு நிதி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைகுறித்து காங்கிரஸ் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, ஊழல் நடந்துகொண்டிருந்தது. ஊழலுக்குக் கருவியாக இருந்தவர் மன்மோகன் சிங்.
- நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

அகதிகளுக்கான கதவை அடைக்க வேண்டாம். அவர்களை அரவணைத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
- போப் பிரான்சிஸ்

‘பத்மாவதி’ எதிர்ப்பு என்பது நாம் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அழிக்கும் அரசியல் கட்சியின் திட்டமாகும். நாங்கள் இந்த நெருக்கடி காலத்தை எதிர்க்கிறோம்.
- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்

எப்போதும் எனக்கு செஞ்சுரிகள் அடிக்கப் பிடிக்கும். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே செல்வதும் பிடிக்கும். எப்போதும் செஞ்சுரி எடுத்தவுடன், போதும் என்று விட மாட்டேன். அதைவிட அதிக ரன்கள் எடுக்கவே முயற்சி செய்வேன்.
- விராட் கோலி

நான் ஏற்ற இறக்கங்களைப் பற்றி யோசித்ததில்லை. என் பணியில், விரைவில் ஒரு தாழ்வு நிலை வரலாம். அதற்கு என்னைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறேன்.
- தீபிகா படுகோன்

மருத்துவமனையில் அம்மா இருந்தபோது, சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்கவிடவில்லை. ‘அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார்’ என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய். சசிகலா குடும்பம் சொல்லச் சொன்னதைத்தான் வெளியில் வந்து சொன்னோம்.
- திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அமைச்சர்

ரஜினி எத்தனை படம் வேண்டுமானாலும் நடிக்கட்டும், எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கட்டும். ஆனால் அரசியல் என்பது அவரது மனநிலைக்கு ஒத்துவராது.
- சீமான், ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

இன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்காக அல்லாது மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது.
- ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்

என் கணவர் மாதவனைக் கொல்லப்பார்க்கிறார்கள். ராஜாமீது பொய் வழக்கு போட நினைக்கிறார்கள். ராஜா யார் என்று என்னிடம் கேட்கிறார்கள். அவர் என்னோடு படித்தவர்.
- ஜெ. தீபா

ஜி.எஸ்.டி வரி விதிப்பு காரணமாக, தமிழ்ப் படவுலகம் மிகவும் இக்கட்டான சூழலைச் சந்தித்துவருகிறது. இது சினிமாத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு.
- விஷால்

தி.மு.க தலைவராக மு.க.அழகிரி இருந்திருந்தால் நாங்கள் பயந்திருப்போம். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தகுதியில்லாதவர்.
- செல்லூர் ராஜு, தமிழக அமைச்சர்

இடைத்தேர்தலில் ஜனநாயகம் வென்றதில்லை, பணநாயகம் மட்டுமே வென்றுள்ளது. அதைக் கருத்தில் கொண்டே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.
- ஜி.கே.வாசன், த.மா.க தலைவர்

குக்கர் சின்னம் வேகாத சின்னம். இலை துளிர்த்து மக்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் தாமரை மலர வேண்டும்.
- தமிழிசை செளந்தர்ராஜன், தமிழக பா.ஜ.க தலைவர்

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, ஆனால், அந்த மாற்றம் பா.ஜ.க-வினால் ஏற்பட வாய்ப்பு இல்லை. தமிழகம் திராவிட இயக்கங்களால் பாதுகாக்கப்பட்ட மண். இங்கு மதவாத, சாதியவாத சக்திகளுக்கு இடமில்லை.
- திருமாவளவன், தலைவர், வி.சி.க

காஷ்மீர்ப் பிரச்னையைத் துப்பாக்கித் தோட்டாக்களால் தீர்க்க முடியாது என்று பிரதமர் கூறியிருப்பது, பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் என இருதரப்புக்குமே பொருந்தும் என்று கருதுகிறேன்.
ஒமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் - ஜம்மு காஷ்மீர்

திருமணமாகாத ஆண்களுக்கும், ெபண்களுக்கும் வீடு தந்தால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்பதால், நடிகையான எனக்கும் வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர்.
- ராதிகா ஆப்தே

மிகக்கடினமான காலகட்டத்ைதக் கடந்து கொண்டிருக்கிறோம். நாட்டில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து வருகிறது. எதிர்த்துப் பேசுபவர்களை அழிக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர்.
- பிரகாஷ்ராஜ்

அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்.
- கமல்ஹாசன்

டெங்கு குறித்து தமிழக அரசு பொய்யான தகவல்களைத் தெரியப்படுத்திவருகிறது. அதிமுக ஆட்சி நீடிக்கக் கூடாது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
- விஜயகாந்த், தேமுதிக தலைவர்